தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013)சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும…
-
- 0 replies
- 244 views
-
-
சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகள் எவை எவை, எதுகுறித்து இந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று பாஜகவின் இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலையாய பி்ரச்சினைகள் எவை என்பது குறித்து அனைவரும் தத்தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறும் அது கோரியுள்ளது. மேலும் இதுதொடர்பான கேள்விகள், விளக்கங்கள், விவாதங்களையும் அது வரவேற்றுள்ளது. நரேந்திர மோடி செப்டம்பர் 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.இதை பாஜக இளைஞர் மாநாடா…
-
- 0 replies
- 260 views
-
-
காம்மென் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்ககேற்க கூடாது என்று எதிர்வரும் 26 ஆம்நாள் சென்னையில் நடைபெறவுள்ள விளக்க பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றவுள்ளார். எதிர்வரும் 26 ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வினை சங்கதி24 இணையத்தளத்தில் (sankathi24.com)நேர ஒளிபரப்பு செய்யவுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம் காம்மென் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடாது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார பயயணம் கடந்த 20.09.2013 முதல் வாகன பிரச்சாரம். பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 20.9.2103 சீர்ககாழியில் நடைபெற்ற பிரச்சார பயணத்தின் இறுதி நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.எ ஜவாஹிருல்லா விளக்கவுரை ஆற்றியுள்ளார் 26.09.2013 சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வை…
-
- 0 replies
- 230 views
-
-
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பெருந்துறை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரதீபா (வயது 33). இவர் பெருந்துறை பழைய பஸ்நிலையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது கணவர் சிவகுமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லை காரணமாக மனைவியை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் பிரதீபா தனது தாயார் சுகுணாம்பாளுடன் ஜீவாநகர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை பிரதீபா தாயாரிடம் பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் மகளின் …
-
- 0 replies
- 577 views
-
-
கடலூர்: ஜெயலலிதா பிரதமர் ஆனால் இலங்கையில் தனி ஈழம் அமையும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றிய அதிமுக சார்பில் நல்லூர்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 1967ம் ஆண்டு அண்ணா தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸை விரட்டி அக்கட்சிக்கு முடிவுரை எழுதினார். அண்ணா, புரட்சித் தலைவர் வழியில் வந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருந்தே காங்கிரஸை விரட்டி…
-
- 0 replies
- 526 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் மதிமுக அரசியல் ஆலோசனைக்கழு உறுப்பினர், தீர்மானக்குழு உறுப்பினர், தேர்தல் பணித் துணைச் செயலாளர்களை நியமித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…
-
- 0 replies
- 407 views
-
-
லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது: சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தல் ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால்…
-
- 0 replies
- 382 views
-
-
சென்னை: தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். மாநில முதல்வர்களும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினர். …
-
- 0 replies
- 477 views
-
-
பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவினை தற்காலிகமாக நீக்கவேண்டும் என்று கோரி தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் புதுக்கோட்டையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டைதோப்புக்கொள்ளையில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அங்கீகரித்து பெயர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை விருப்பத்திற்கு மாறாக சிறீலங்காவிற்கு அனு…
-
- 0 replies
- 398 views
-
-
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தோடு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தேமுதிக கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது. கட்சி தற்போது 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 9வது ஆண்டு கொண்டாட்டம் இன்று மாலை தூத்துக்குடியில் நடக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ், குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி கூறுகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதாலேயே விஜயகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்றார். சுதீஷ் தனது பிறந்தநாளையொட்டி சாமி கும்பிட விஜயகாந்துடன் சென்றார். மற்றபடி கோவிலுக்கு சென்றதற்கு வேறு எந்த…
-
- 0 replies
- 612 views
-
-
தமிழ் நாட்டில்,தமிழர்களுக்காக ஒரு கூட்டணியை அமைக்க முடியாதவர்கள் தமிழ் ஈழத்தை பற்றி பேசவே தகுதி அற்றவர்கள்! ******************************************************************** புண்ணாக்கு மூட்டையை தூக்கி எறிவதுபோல் காவல் துறை மாற்று திறனாளிகளை தூக்கி காவல்துறை வாகனத்தில் எறிகிறது .ஏன் இதை ஒரு முதல் அமைச்சர் இன்னும் கண்டுகொள்ளவில்லை? *************************************************************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* உங்களுக்கு சாதி முக்கியம்..மதம் முக்கியம்..உங்கள் மொழி முக்கியமில்லை. அப்படித்தானே?..அப்படிஎன்றால் நீங்கள் எப்படி தமிழ் ஈழத்தை பற்றியும், ஈழத் தமிழர் நலன் பற்றியும்,தமிழைப் பற்றியும் எத்தனை கால…
-
- 0 replies
- 605 views
-
-
சென்னை: தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காவல்துறையினர் மதுராந்தகம் அருகே நடு வழியி்ல் விட்டுவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தெரிவிக்க, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆ…
-
- 1 reply
- 411 views
-
-
தமிழ்நாட்டை பற்றி வெளி மாநிலங்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார். நான் கடந்த வாரம் பெங்களூர் - சென்னை வரும் போது என் பக்கத்தில் ஒரு சேட்டு அவன் நண்பனிடம் தமிழ்நாட்டை பற்றி சொல்லி கொண்டிருந்தான், தனது 30 வயதில் சென்னை வந்த அவன் இன்று சில கடைகளுக்கு முதலாளி. அவன் மட்டும் இல்லை அவனை போன்ற வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் இன்று நல்ல முறையில் சொந்தமாக வீடு மற்றும் கடைகள் கட்டி இருக்கிறார்கள். தமிழ் தெரிந்தால் போதும் தமிழர்களை லாபகமாக கையில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயம். எங்கு பார்த்தாலும் கேரளா, ராஜஸ்தானி மற்றும் ஆந்திரா தான் இங்கு அதிகம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலும் கடைகள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவன் சொன்ன …
-
- 0 replies
- 649 views
-
-
சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கி, அரசு செவிலியர் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆ…
-
- 0 replies
- 406 views
-
-
சென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார…
-
- 1 reply
- 586 views
-
-
தூத்துக்குடி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 ஆயிரம் டன் கனிம மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஸிஸ்குமார் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, "தமிழகம், கேரளம் மாநில கடலோரங்களில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அதே போல் தடையை விதித்தது தமிழக அரசு. இப்போது தாது மணல் …
-
- 0 replies
- 422 views
-
-
புதுவை: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக 6 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் 6 பேரும் சபாநாயகரை சந்தித்தும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக முதல்வராக பதவி வகித்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே ரங்கசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக ஆளுநர் கட்டாரியாவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரசிலேயே ரங்கசாமிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 எம்.எல்.ஏக்கள் இன்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 335 views
-
-
கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நி…
-
- 0 replies
- 364 views
-
-
சென்னை: 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சமூக நீதி அமைப்பு சார்பில் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 21 வயதுக்குட்பட்டோர், பள்ளி மாணவர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சட்டத்தை மீறி 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்கப்படுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/tamilnadu/liquor-sale-hc-…
-
- 0 replies
- 288 views
-
-
சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது, தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்கு…
-
- 1 reply
- 430 views
-
-
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…
-
- 0 replies
- 2.2k views
-
-
செங்கோட்டை: செங்கோட்டை சைவ பிள்ளையார் கோவிலில் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹரா நதியின் கரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றால விநாயகர் ஆலயம். இதை சைவ பிள்ளையார் கோவில் என்று இப்பகுதியினர் அழைப்பார்கள். இந்த ஆலயம் செங்கோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆலயத்தில் நேற்று இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கங்காதரன் கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் 7மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு மற்றும் மூலவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், கோவில் தங்க,வெள்ளி.பொருட்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் கண்டு திடுக்கிட்ட அ…
-
- 0 replies
- 498 views
-
-
பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. Image source:commons.wikimedia.org இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோற…
-
- 0 replies
- 798 views
-
-
சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம். சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் …
-
- 0 replies
- 664 views
-
-
கொன்று குவிக்கப்பட்ட ஈழஉறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம்சகோதரிகளுக்கும் நீதிகேட்டு தமிழக மாணவர்களினால் மிதிவண்டி பயண போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த மிதிவண்டி பயணத்தின்போது திருச்சி பகுதியினை சேர்ந்த ம.தி.மு.க கட்சியின்னர்,நாம்தமிழர் கட்சியினர் ,மனிதநேயமக்கள் கட்சியினர்,உள்ளிட்ட தமிழ்உணர்வு அமைப்புக்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டு இந்த மாணவர்களின் மிதிவண்டி போராட்ட பயணத்தினை தொடக்கியுள்ளார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை வைகோ,சீமான்,எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். எதிர்வரும் 23 ஆம் நாள் இந்த மிதிவண்டி பயண போராட்டம் ச…
-
- 11 replies
- 1.2k views
-