தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
தமிழ் நாட்டில்,தமிழர்களுக்காக ஒரு கூட்டணியை அமைக்க முடியாதவர்கள் தமிழ் ஈழத்தை பற்றி பேசவே தகுதி அற்றவர்கள்! ******************************************************************** புண்ணாக்கு மூட்டையை தூக்கி எறிவதுபோல் காவல் துறை மாற்று திறனாளிகளை தூக்கி காவல்துறை வாகனத்தில் எறிகிறது .ஏன் இதை ஒரு முதல் அமைச்சர் இன்னும் கண்டுகொள்ளவில்லை? *************************************************************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* உங்களுக்கு சாதி முக்கியம்..மதம் முக்கியம்..உங்கள் மொழி முக்கியமில்லை. அப்படித்தானே?..அப்படிஎன்றால் நீங்கள் எப்படி தமிழ் ஈழத்தை பற்றியும், ஈழத் தமிழர் நலன் பற்றியும்,தமிழைப் பற்றியும் எத்தனை கால…
-
- 0 replies
- 610 views
-
-
சென்னை: தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காவல்துறையினர் மதுராந்தகம் அருகே நடு வழியி்ல் விட்டுவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தெரிவிக்க, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆ…
-
- 1 reply
- 416 views
-
-
தமிழ்நாட்டை பற்றி வெளி மாநிலங்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார். நான் கடந்த வாரம் பெங்களூர் - சென்னை வரும் போது என் பக்கத்தில் ஒரு சேட்டு அவன் நண்பனிடம் தமிழ்நாட்டை பற்றி சொல்லி கொண்டிருந்தான், தனது 30 வயதில் சென்னை வந்த அவன் இன்று சில கடைகளுக்கு முதலாளி. அவன் மட்டும் இல்லை அவனை போன்ற வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் இன்று நல்ல முறையில் சொந்தமாக வீடு மற்றும் கடைகள் கட்டி இருக்கிறார்கள். தமிழ் தெரிந்தால் போதும் தமிழர்களை லாபகமாக கையில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயம். எங்கு பார்த்தாலும் கேரளா, ராஜஸ்தானி மற்றும் ஆந்திரா தான் இங்கு அதிகம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலும் கடைகள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவன் சொன்ன …
-
- 0 replies
- 655 views
-
-
சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கி, அரசு செவிலியர் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆ…
-
- 0 replies
- 411 views
-
-
சென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார…
-
- 1 reply
- 592 views
-
-
தூத்துக்குடி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 ஆயிரம் டன் கனிம மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஸிஸ்குமார் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, "தமிழகம், கேரளம் மாநில கடலோரங்களில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அதே போல் தடையை விதித்தது தமிழக அரசு. இப்போது தாது மணல் …
-
- 0 replies
- 427 views
-
-
புதுவை: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக 6 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் 6 பேரும் சபாநாயகரை சந்தித்தும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக முதல்வராக பதவி வகித்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே ரங்கசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக ஆளுநர் கட்டாரியாவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரசிலேயே ரங்கசாமிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 எம்.எல்.ஏக்கள் இன்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 342 views
-
-
கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நி…
-
- 0 replies
- 372 views
-
-
சென்னை: 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சமூக நீதி அமைப்பு சார்பில் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 21 வயதுக்குட்பட்டோர், பள்ளி மாணவர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சட்டத்தை மீறி 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்கப்படுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/tamilnadu/liquor-sale-hc-…
-
- 0 replies
- 296 views
-
-
சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது, தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்கு…
-
- 1 reply
- 435 views
-
-
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…
-
- 0 replies
- 2.2k views
-
-
செங்கோட்டை: செங்கோட்டை சைவ பிள்ளையார் கோவிலில் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹரா நதியின் கரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றால விநாயகர் ஆலயம். இதை சைவ பிள்ளையார் கோவில் என்று இப்பகுதியினர் அழைப்பார்கள். இந்த ஆலயம் செங்கோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆலயத்தில் நேற்று இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கங்காதரன் கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் 7மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு மற்றும் மூலவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், கோவில் தங்க,வெள்ளி.பொருட்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் கண்டு திடுக்கிட்ட அ…
-
- 0 replies
- 507 views
-
-
பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. Image source:commons.wikimedia.org இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோற…
-
- 0 replies
- 805 views
-
-
சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம். சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் …
-
- 0 replies
- 675 views
-
-
கொன்று குவிக்கப்பட்ட ஈழஉறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம்சகோதரிகளுக்கும் நீதிகேட்டு தமிழக மாணவர்களினால் மிதிவண்டி பயண போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த மிதிவண்டி பயணத்தின்போது திருச்சி பகுதியினை சேர்ந்த ம.தி.மு.க கட்சியின்னர்,நாம்தமிழர் கட்சியினர் ,மனிதநேயமக்கள் கட்சியினர்,உள்ளிட்ட தமிழ்உணர்வு அமைப்புக்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டு இந்த மாணவர்களின் மிதிவண்டி போராட்ட பயணத்தினை தொடக்கியுள்ளார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை வைகோ,சீமான்,எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். எதிர்வரும் 23 ஆம் நாள் இந்த மிதிவண்டி பயண போராட்டம் ச…
-
- 11 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் ஞாயிறு, 29.09.2013 அன்று சுவிஸ் Schaffhausen மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடபடவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறித்தருகின்றேன்.
-
- 0 replies
- 661 views
-
-
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது. இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள…
-
- 1 reply
- 618 views
-
-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…
-
- 0 replies
- 443 views
-
-
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 135-ஆவது பிறந்த நாள், அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள், திமுகவின் 65-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா, தொடர் மழை காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும் அண்ணாவ…
-
- 0 replies
- 468 views
-
-
தாது மணல் எடுக்கப்பட்ட கடற்கரை (ஆவணப்படம்) தமிழக அரசு மாநிலத்தில் கடற்கரை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியினை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட் டம் வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக அண்மையில் புகார்கள் எழ, தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தவென வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரண்டு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை தோண்டி எடுக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையினை இன்று (செவ்வாய்) அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்…
-
- 0 replies
- 443 views
-
-
சேது சமுத்திரம்: தடையை நீக்க மத்திய அரசு மனு… பழைய வழித்தடத்திலேயே திட்டத்தை தொடர முடிவு. டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அத் திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் பாலம் வழியாக சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை சேதப்…
-
- 5 replies
- 975 views
-
-
திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ரூ 200 கோடி அளவு முறைகேடு என்ற புகாரில் முகாந்திரம் இருப்பின் அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக தலைவர் மு கருணாநிதி கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்தது. வழக்கறிஞர் ரமேஷ்குமார் தான் அம் மாநாட்டுச் செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அக்கௌண்டட் ஜெனரல் அலுவலகம் ரூ 151.22 கோடி செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது, ஆனால் அம்மூன்றுநாள் மாநாட்டிற்காக 350 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக அன்றைய முதல்வர் மு கருணாநிதி சட்ட…
-
- 1 reply
- 484 views
-
-
விருதுநகர்: தன் குடும்பத்திற்காக, அண்ணாதுரையின் கொள்கைகளை கருணாநிதி குழிதோண்டி புதைத்துவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், திமுக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாவின் பிறந்நாளை ஒட்டி விருதுநகரில் மதிமுகவின் மாநாடு நேற்று நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் முக்கியத் தலைவர் பேசினார்கள். மாலையில் சிறப்புரையாற்றிய வைகோ கூறியதாவது: விருதுநகர் மண், திராவிட இயக்கத்தை வளர்த்தது. கடந்த 20 ஆண்டாக நாங்கள், பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வருகிறோம். 2014 லோக்சபா தேர்தல், கதவை தட்டுகிறது; நாம் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், லோக்சபா தேர்தலில் போ…
-
- 0 replies
- 447 views
-
-
விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்! விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம் : * காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9½ ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறி திளைத்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே வருகிற 201…
-
- 34 replies
- 2.2k views
-
-
சென்னை: மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் மத வெறி ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானவர் அவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் அவரை அத்வானி போன்ற தலைவர்கள…
-
- 2 replies
- 1.5k views
-