Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு தனியார் பல்கலைக்கழகமொன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் மேற்கு வங்காளம் மற்றும் கோவையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டுச் சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளதாகவும், இதன்போது திடீரென பழைய சுவர், தொழிலாளர்களின் மீது இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ப…

  2. சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர் பட மூலாதாரம்,DIPR 26 ஜனவரி 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023, 04:13 GMT சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. முப்படை வீரர்கள…

  3. காவிரி உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து தருமபுரி மாவட்டத்துக்கு திருப்பிவிடுங்கள்: டிரென்ட் ஆகும் விவசாயிகள் கோரிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2022 காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரசார நடைப…

  4. பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 28 மே 2023 இன்று சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர், புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, “இங்கு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம்,” என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது, பிரதமர் உரை என்று பல்வேறு விதங்களில் தமிழ்நாட்டின் தொடர்பு இருந்துகொண்டே இருந்ததாகவும் இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அ…

  5. தமிழகம் வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்குமாறு வலியுறுத்தல்! இலங்கையில் இருந்து தமிழகம் வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழா்கள் தமிழகம் வந்துள்ளனா். ஆனால், அவா்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக குடியேறியவா்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்க…

    • 1 reply
    • 286 views
  6. தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!! சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள…

  7. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள் BBCCopyright: BBC இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இரு…

  8. பிளஸ் டூ தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்? மின்னம்பலம்2022-06-20 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவை இன்று காலை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில், 8,06,277 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 4,21,622 மாணவிகள் 3,85,655 பேர் ஆவர். இதில் 93.76 சதவிகிதம் அதாவது 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,106 (96.32%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,49,893(90.96%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 5.36% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் வாரியாக அரசுப் பள்ளிகள் -89.06% அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.87…

  9. அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்: கமல்ஹாசன் சென்னை: அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திலிருந்தே நடிகர் கமல்ஹாசன் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவித்து வருகிறார். தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்க…

  10. அரசனை நம்பினால் புருஷனை காப்பாத்த முடியாது!

  11. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில்,…

  12. அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்க…

  13. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தள…

  14. திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு! திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319117

  15. புதுமைப் பெண் திட்டம் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்: வேறுபாடுகள் என்னென்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPR தமிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவை குறிப்பிடப்…

  16. முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? : வழக்கில் செப்., 13 வரை அவகாசம் மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களி…

  17. ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு. ”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மற்றும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி ” ‘கடலூரில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் க…

  18. து. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றப்படவில்லை" எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். மேலும், கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய …

  19. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தினகரனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா அணி, ஆட்சியை தக்க வைத்தது; ஆனாலும், குழப்பம் தொடர்கிறது. கட்சி இரண்டாக உடைந்ததில், இரட்டை இலை சின்னமும் பறிபோயுள்ளது. எந்த நேரமும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. ஒரு வேளை ஆட்சி கலைந்து, தேர்தல் வந்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் வரை, கட்சியைக் காப்பாற்ற முடியாது என்பதை, சசிகலா …

  20. சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்த இந்திய உயர் நீதிமன்றம்! சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்பதும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் குற்றமாகும் என்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் செயல்பாட்டில், டிஜிட்டல் சாதனங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் குறித்த முக்கிய தீர்ப்பில் இந்திய உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது. 28 வயது இளைஞர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சிறுவர் ஆபாச படங்களை பதி…

  21. தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன! தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுற…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அளவில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோரும் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு குறித்த விரிவான அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழா…

  23. ’எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம்’ - தேசிய கீதம் குறித்து கமல் ட்வீட் நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் குறித்த தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கபட வேண்டும் என்பதும், அவ்வாறு இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பல விதமான கருத்துகள் வந்தன. அதன் பின்னர் தொடர்ந்து, திரையரங்கில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்மையில் இந்த வழக்கை விசாரித்…

  24. தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை! தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. …

    • 0 replies
    • 284 views
  25. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் ஜெயலலிதா, குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்படும் அம்மக்களைப் பழங்குடியினராகக் கருதி, அதற்கான பட்டியலில் அவ்வினம் இடம்பெறவேண்டுமென கடந்த ஆண்டு ஜூலையிலேயே மத்திய அரசிடம் கோரியதாக நினைவுகூருகிறார். ஜெயலலிதா வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் இந்திய பதிவாளர் நாயகமும் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார், மத்திய அரசின் பழங்குடியினர் துறையும் இது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் தலையிட்டு, மேலுங்காலந்தாழ்த்தாமல் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.