Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு ஐகோர்ட்டில் வழக்கு புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டபோது 50 சதவீத இடங்கள் தருவதாக கூறியே அரசிடம் தடையில்லா சான்றிதழ்கள் பெற்றன. ஆனால் ஒப்புக் கொண்டபடி தராமல் 23 சதவீத இடங்களையே ஒதுக்கீடு செய்து வந்தன. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதுவை அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு தரப்பில், ‘மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு…

  2. மாறன் சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத சஞ்சார் நிகம் லிமிட்டடின் (பிஎஸ்என்எல்) உயர்தொழில்நுட்ப தொலைத்தொடர்பு வசதிகளை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிபிஐயின் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு தலைமை பொது மேலாளர்கள், தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலர், ஒரு தனியார் தொலை…

  3. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…

  4. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை? 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என, எங்கள் கட்சிப், பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, எங்களைப் போன்று, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ஏமாற்றுவ தாக உள்ளது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் குமுறுகின்றனர். ஜெயலலிதா மறைந்ததும், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெ., மீது குற்ற வழக்குகள் இருந்ததால், 'பாரத ரத்னா' கிடைக்குமா என்று அப்போதே விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில், 'அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்…

  5. சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ' எதிர்க்கட்சிகளே இல்லாமல் காலி இருக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள்' எனக் கலாய்க்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தை, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சனம் செய்ததையடுத்து, சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து, ' ஒருவார காலம் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். இன்று சட்டசபைக்குள் நுழைந்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக'க் கூறி தர்ண…

  6. Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 10:33 AM இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர். சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில், ஒன்றரை…

  7. பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூலை 2023, 03:07 GMT தமிழக பல்கலைக்கழங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் பல பல்கலைக்கழங்களுக்கு துணை வேந்தர்களும் பதிவாளர்களும் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.வி. நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் நிலை உண்மையில் எப்படியிருக்கிறது? ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், குறிப்பாக இந்தக் குழுக்களில் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்த…

  8. அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர்…

  9. 'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த தவறு எப்படி நடந்திருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், எதையோ செய்து எங்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்..." எனக் கூறி கண்கலங்கினார் சிவநேசன். தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததன் விளைவாக இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர். மளிகைக் கடைக்காரரிடம் மோசடி நடந்தது எப்படி…

  11. "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை" - ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, குத்தகை நிலம் மறுமதிப்பீடுக்கான ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் அசையா சொத்துகள், கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மூலம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை தணிக்கையின்போது சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு, 1997ஆம் ஆண்டு, மீனாட்சி அ…

  12. மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்! நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜெயக்குமார் சார்பில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையிலேயே நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது. ஏற்கெனவே தி.மு.க. பிரமுகர…

  13. 37-வது நாளாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம் டெல்லியில் 37-வது நாளாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். கோப்பு படம் புதுடெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 37-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமு…

  14. ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய நீதிபதிகள், நாளையே (அதாவது செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக வி…

  15. Share this video : spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, அறிக் ஜனாதிபதியிடம் சட்டசபை நிகழ்வுகள் அறிக்கை …

  16. தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை கமல்ஹாசன் தத்தெடுக்கிறார்.. தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இன்றைய தினம் கமல் சென்னை திரும்பியதும் இதற்கான ஆரம்ப கட்டபணிகள் ஆரம்பிக்க்பபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அவர்கள் தன்னுடன் கைகோர்ப்பார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் தனது அரசியல் பயணம் நற்பணிகள் மூலமாகவே மக்களை எளிதாக சென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கமையவே முதல் கட்டமாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க் முடிவு செய்துள்ளா அவர் இது தொடர்பாக மக்கள் நீத…

  17. தி.மு.க எம்.எல்.ஏ-க்களை நாளை சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்! தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை சந்திக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக பிரிந்தது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கடந்த திங்கள்கிழமை இணைந்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஏற்கெனவே முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், சட்…

  18. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், 1983 ஆம் ஆண்டு அடைக்கலம் கேட்டு முதன்முதலாக ஈழத்தமிழர்கள் தமிழகம் வந்தார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள் வருவது அதிகரித்து இலங்கையில் போர் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்துகொண்டே இருந்தனர். இப்படி அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 112 முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். இந்த முகாம்களில் 63,938 பேர் வசிக்கின்றார்கள். இந்த முகாம்களில் 20 ஆயிரம் நபர்கள் 17வயதிற்குட்பட்டவர்கள். முகாமிற்கு வெளியே 34,482 நபர்கள் வசித்துவருகிறார்கள். அகதிகளாக வந்து இருபது ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப…

  19. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டத்துக்குப் புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் இந்தப் புகாரை அளித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வருகின்ற 28-ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் …

  20. கச்சத்தீவை மீட்க நரேந்திர மோதியிடம் கோரிக்கை: மு.க. ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு: தமிழ்நாடு அரசின் பதில் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, கொழும்பில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MKSTALIN இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26ம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம…

  21. சென்னை: கோவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, பட்டினிப்போர் நடத்தியவர்களை கைது செய்ததற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும…

  22. ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை கோடநாடு பங்களா வாயில் | கோப்புப் படம். கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்…

  23. திருநங்கை நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை படக்குறிப்பு,திருநங்கை நிவேதா கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி 20 மே 2024 "என்னை திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். செய்வதறியாது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் திருநங்கை நிவேதா. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் பனி…

  24. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்த…

  25. எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.