தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
“நவம்பரில் வருகிறார் நம்மவர்!” - நம்பிக்கையில் கமல் ரசிகர்கள் இதோ... அதோ... என நடிகர் ரஜினிகாந்த் போக்குக்காட்டிவருகிறார். ஆனால், அரசியலில் நுழைந்துவிட்டதாக அறிவித்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அவரது அதிரடி அறிவிப்பு குறித்துத் தமிழக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவிப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இப்போதே அவர்கள் களப்பணியாற்றத் தயாராகிவிட்டனர். இந்தச் சூழலில், கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்களின் விறுவிறு கருத்துகள் இதோ... ‘‘தெளிவான சிந்தனை!” செந்தில் (நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்) ‘‘தெளிவான சிந்தனையும், நுணுக்கமான பார்வையும…
-
- 0 replies
- 1.9k views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ஆம் தேதி நடந்த இந்த சந்திப்பு குறித்த படத்தை ம.தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக ம.தி.மு.க இரண்டு பேர் ஒன்றாக இருக்கும் படத்தை இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லம் சென்றார் என்றும், அப்போது, ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு …
-
- 0 replies
- 474 views
-
-
நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து, கடல் வளம் சுரண்டப்படுவதை தடுக்க, அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 1076 கி.மீ., நீளமுடைய கடலோரத்தில் 13 கடலோர மாவட்டங்களில், 591 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். தமிழக கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிப்பதால், மீன் வளத்தை காக்க ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அரசு வழிவகுக்கிறது.மேலும், கடல் வளத்தை பாதிக்கும் இரட்ட…
-
- 0 replies
- 408 views
-
-
ஜெயலலிதா நாளைய தினம் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஜாமீன் கோரி ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச …
-
- 0 replies
- 274 views
-
-
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை கைது செய்த சிபிஐ - என்ன குற்றச்சாட்டு? படக்குறிப்பு, ஆசிரியர் ராமச்சந்திரன் 22 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளது சிபிஐ. வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்து, பணம் திரும்பப் பெறும் விவகாரத்தில் பலருக்கும் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்ததாக சிபிஐ இவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது,…
-
- 0 replies
- 680 views
- 1 follower
-
-
தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு. பெங்களூர்: மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார் .கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை ஆலோசிக்காமல், முடிவு எடுக்கப்படாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில், 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, புதிய அ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்நாடு அரசின் சின்னமானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி.. தமிழகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களி…
-
- 0 replies
- 929 views
-
-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு தள்ளிப்போனது. தற்போது புதிய திகதியை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்ப…
-
- 0 replies
- 753 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் இருக்கும் பல கோவில்களுக்குள் சென்று வழிபடுவதில் பட்டியல் சாதியினர் இன்னமும் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருக்கும் உண்மை நிலையைக் கண்டறியவும், இந்தப் பிரச்னையைக் களைய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அறியவும் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. இந்தக் கள ஆய்வில், இன்றளவும் கோவிலுக்குள் சென்று வழிபடுவதில் மாநிலத்தின் பல கிராமங்களில் பட்டியல் சாதியினர் பல சவால்களை எதிர்கொள்வதை அறிய முடிந்தது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசி…
-
- 0 replies
- 561 views
- 1 follower
-
-
தனித் தீவானது சென்னை: சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்! சென்னை: கனமழை காரணமாக சென்னையில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை தனித்தீவாக காட்சியளிக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை நின்றதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் மீண்டும் தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால், அதிகமான உபரிநீர் திறந்து விடப்பட்டு வ…
-
- 0 replies
- 566 views
-
-
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்தது மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய 3 மீனவர்களும் உடனடியாக அவசரம் அவசரமாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவ…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
தமிழக மக்களுக்காக தேவையேற்பட்டால் அரசியலில் இணைவோம்: ரஜினி- கமல் தமிழக மக்களின் நலனுக்காக தேவையேற்பட்டால் இருவரும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட தயார் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘கமல் 60’ என்ற நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கி விட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்த…
-
- 0 replies
- 358 views
-
-
பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (06/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்கள் 4.61 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியுள்ளதாவது, “ குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதே…
-
- 0 replies
- 705 views
-
-
சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ் 7 Aug 2025, 1:14 PM சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர். அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன…
-
- 0 replies
- 170 views
-
-
ஜெயலலிதா வெற்றி... திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா! (வீடியோ) திருமலை: அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென…
-
- 0 replies
- 620 views
-
-
மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன…
-
- 0 replies
- 509 views
-
-
வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி? பொதுமக்கள் நலனுக்காக, ரத்தம் சிந்தி தங்கள் சுயநலனை தியாகம் செய்த தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். காந்தி, நேரு, காமராஜ் என்று உதாரணங்களும் வைத்திருக்கிறோம். சுயநலனுக்காக பொதுமக்களை ரத்தம் சிந்த வைத்து, அந்த ரத்தத்தின் கதகதப்பில் ஏறி அமர்ந்து குளிர் காய்கிறவர்களை இன்றைய அரசியலில் பார்க்கிறோம். முன்னதை விட, பின்னதில் உதாரணம் காட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால், வாட்டாள் நாகராஜ் பெயரை தேர்ந்த உதாரணமாகச் சொல்லலாம். ‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு திரும்ப வேண்டியிருக்கும்...’’ - நெருப்பை அள்ளிக் கொட்டுகிற வகையில் பேசியிருப்பதன் மூலம், மீண்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
அப்போலோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா? இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார். அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ. அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்…
-
- 0 replies
- 475 views
-
-
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது”” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ …
-
- 0 replies
- 361 views
-
-
வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா? ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம…
-
- 0 replies
- 389 views
-
-
திண்டுக்கல் :: மாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல்.! திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம் இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர் புரம், தென்மலை, உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை நகர்ப் பகுதிக்கு எடுத்துவர இக்கிராம மக்கள் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். குதிரையின் முதுகில் மூட்டையாகக் கட்டி காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது அவர்களது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு குதிரையாவத…
-
- 0 replies
- 732 views
-
-
"நடராஜனை வரவேற்று விழா நடத்தக்கூடாது!"- ஏன் தடை போடுகிறது தமிழக அரசு?! எம்.விஜயகுமார் நடராஜன் | #AUSvIND ( Tertius Pickard ) ஒரே தொடரில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டிருக்கும் நடராஜன் இன்று மாலை தனது சொந்த ஊரான சேலம், சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். நடராஜனை வரவேற்க நண்பர்கள் பலரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய நடராஜன், இத்தொடரில் முதல்முறையாக பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்த பெளலர் என்கிற பெருமையைப் பெற்றார். லாபுசேன், அஷ்டன் அகார் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். டி…
-
- 0 replies
- 698 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 308 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள் அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், ஆட்சிக்கு சிக்கல் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர். சட்டசபைக்க…
-
- 0 replies
- 848 views
-