Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கூடங்குளம் அணு உலையின் 4 வால்வுகளில் பழுது என்றும், எனவே மின் உற்பத்தி தாமதமாகும் என்றும், தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்றும், உடனடியாக அதை மூடியே ஆகவேண்டும் என்றும், கூடங்குளம் சுற்றியுள்ள அணு உலைக்கு எதிரான மக்கள் பல கட்ட போராட்டங்களை இன்று வரை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். இது மர்மமான முறையில் மறைத்து வைக்கப்படுகிறது. இது போன்ற மர்மங்கள் நீடிப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின…

  2. தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்க‌ளும் சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்​கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர் போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறை​வேற்றப்பட்ட தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு, கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத் த…

  3. 5c29ae7dcea9d78813d5ae34557d629e

  4. "தினத்தந்தி" நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையு…

  5. அதிமுகவுடன் உறவை முறித்துக்கொண்ட விஜயகாந்த், அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்று திடீரென கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார். கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.இருவரும் ஒருவருக்கொருவர் நலம் வி…

    • 0 replies
    • 616 views
  6. ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.'' ''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுமா? ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாது’ என்று, இலங்கை சம்பந்தமான தீர்மானம் பற்றி மத்திய அரசு நினைக்கிறது. 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக் கூடாது’ என்று, தமிழக சட்டம…

    • 1 reply
    • 764 views
  7. தனி ஈழம் கோரிக்கையை முன் வைத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம்…

    • 0 replies
    • 1.1k views
  8. 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …

  9. புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல் சென்னை வரை நடக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் திரைமறைவு பேரங்களை யாரும் வெளிப்படையாக அவிழ்க்கத் தயாராக இல்லை. அந்தக் காட்சிகளின் முன்னோட்ட நிலவரம் இது... முடிவுக்கு வந்த அ.தி.மு.க.! 'நாளை நமதே... நாற்பதும் நமதே!’ என்ற குருட்டு தைரியத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் கடைசி நாளில் அறிவித்தார் ஜெயலலிதா. என்ன சூழ்நிலையில், யார் கொடுத்த தைரியத்த…

    • 0 replies
    • 583 views
  10. தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்தவர் சைலேந்தர். இவரும் இவருடைய தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்கள். அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டில் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு …

    • 0 replies
    • 514 views
  11. 2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி…

    • 0 replies
    • 429 views
  12. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என வடக்கிலும்... கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி எனத் தெற்கிலும் 'விக்கிலீக்ஸ்’ ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்த காலத்தைப் பெயர்த்தெடுத்துக் கிடுகிடுக்கவைக்கிறது. இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்கள் வாங்குவதில் ஸ்வீடன் நிறுவனம் ஒன்றுக்கு ராஜீவ் காந்தி இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதில் தொடங்கி, இலங்கைக்கு அமைதிப் படை சென்ற சமயத்தில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது என்பது வரையிலும் விக்கி கசிவுகள் வரலாற்றின் இன்னொரு முகத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றன. நமது அரசியல் தலைவர்களின் இரட்டை வேடத்தைத் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன. ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதியின் பலவீனமான நாடகம், ஜெயலலித…

    • 0 replies
    • 939 views
  13. நெல்முடிகரை கிராம மக்கள் வைகை ஆற்றை காணவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்முடிகரை கிராம மக்கள், தங்களது கிராமத்திலுள்ள வைகை ஆற்றைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறது. மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடிய அவர்கள், வைகை ஆற்றின் சுமார் 7 ஏக்கர் பகுதியை தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்திருப்பதை கண்டறிந்தனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் வைகை ஆ…

  14. 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மே மாதம் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளார். 2ஜி ஊழல் வழக்கி கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சில வாரங்களாக அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், சி.பி.ஐ தரப்பு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ கடந்த 16ஆம் தேதி அளித்தது. அதில், தயாளுவின் பெயர் இடம்ப…

  15. அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. நெல்லையில் கடந்த 6.8.2012 அன்று நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கடந்த 6.8.2012 அன்று நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் முத்துகருப்பன் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 10, பிப்ரவரி 28, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும்…

    • 0 replies
    • 395 views
  16. பிரிவு: அரசியல் கோவையில் திரும்புகிறது 1998’. கடந்த வாரத்தில் உளவுத் துறை அளித்த ஒற்றை வரி அலெர்ட் இது. கோவை மாநகரில் 1998-ல் நிகழ்ந்த மதக்கலவரத்தையும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், உளவுத் துறையின் இந்த எச்சரிக்கை மக்களை அதிரவைத்துள்ளது. எச்சரிக்கை செய்யும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது? கோவை போத்தனூரில் ஒரு திருமண நிகழ்ச்சி. அதற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடியபோது பிரச்னை வெடித்தது. முஸ்லிம்கள் சிலரும் அதில் இருந்ததுதான் விவகாரமானது. மறுநாள் 7-ம் தேதி காலை திருமண மண்டபத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கி, மண்டபத்தில் இ…

    • 0 replies
    • 1.2k views
  17. கர்நாடக சட்டப்பேரைவத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கோலார் தங்கவயலில் பாஜக எம்.எல்.ஏ ஒய்.சம்பங்கியின் தாயார் ஒய்.ராமக்காவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதோல் தொகுதில் கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் போட்டியிடுகிறார். மளவள்ளி தொகுதியில் குமாரசாமி, கிருஷ்ணராஜ்பேட்டையில் வரதராஜே கெüடா, ஹங்கலில் பசவராஜ் வீரப்பஹிரேமணி, கல்கட்கியில் வீரேஷ், யம்கன்மார்டியில் மாருதி மல்லப்பாஅஷ்டகி, நாக்தானில் நாகேந்திரமாயாவம்ஷி, கம்பளியில் சிவக்குமார், தேவனஹள்ளியில் சந்திரம்மா, மாலூரில் வெங்கடேஷ் கெüடா, ஹெப்ப…

    • 0 replies
    • 326 views
  18. சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடரில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் புகழ்ழேந்தி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு தெரிவித்தவர்களின், தொலைபேசிகளை தனியார் துப்பரியும் நிறுவனம் ஒன்று நவீன உபகரணங்களை கொண்டு ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள் சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடையாள…

    • 1 reply
    • 910 views
  19. தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள் ஸ்டாலின் ராஜாங்கம் நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்…

    • 0 replies
    • 787 views
  20. ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் பாஸ்டனில் நடத்தியதுபோல் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புனே, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், மும்மை நகரில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14069:ipl-match&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 487 views
  21. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாசில்தார் மீது அவரது மருமகள் மதுரை கலெக்டரிடம் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முத்திரைத்தாள் தாசில்தாராக இருப்பவர் ஞானகுணாளன். இவரது மகனுக்கும், போடியைச் சேர்ந்த குருசாமி மகள் லட்சுமிபிரியாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக லட்சுமிபிரியா போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் ஞானகுணாளன், அவரது மகன் ராம் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், லட்சுமிபிரியா இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் "எனக்கும், ராம் ஜவகருக்கும் கடந…

    • 0 replies
    • 696 views
  22. சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் …

  23. நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது. குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன. கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.…

  24. டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…

    • 0 replies
    • 587 views
  25. மைனர் பெண்ணை, "லாக்-அப்'பில் அடைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் பகுதியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்த, 7ம் தேதி, தன் வீட்டிற்கு அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஒரு நபர் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவளின் பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முற்பட்டபோது, சிறுமி பல மணி நேரம், போலீசாரால், "லாக்-அப்'பில் அடைத்து வைக்கப்பட்டாள்.இதுபற்றிய விபரம், மீடியாக்களில் வெளியானதும், அந்த நேரத்தில், பணியில் இருந்த, பெண் போலீசார் இருவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அத்துடன், போலீஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர…

    • 0 replies
    • 363 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.