Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. சமீப காலமாக மக்கள் மத்தியில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எண்ணமும் வலுத்து வருகிறது. இதை வைத்து சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி நடந்தது. இந்த நிலையில் மதுரையில் நேற்று சகாயம் 2016 என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சகாயம் 20161/8 சகாயம் 2016 சகாயம் 2016 என்ற தலைப்பில் மதுரையில் நேற்று மாலை இந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நாகப்பட்டினம் ஜெகசண்முகம், காரைக்குடி சாமி ராஜ்குமார், திருச்சி சையது உமர் முக்தர், மதுரை ஜெயக்குமார், சுரேந்தர், தொழில் அதிபர் திருமுர…

  2. மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி . தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 86 பேர் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. 86 பேரில் 85 பேர் டெல்லிச் சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: “வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்…

  3. கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது…

  4. உறவுகளுக்குத் தடை போட்ட சசிகலா! -முதல்வருக்குச் சென்றதா ரகசிய கடிதம்? அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்களைக் கடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘ சில நாட்களாக மருத்துவமனைக்குள் மன்னார்குடி உறவுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முதல்வரின் கவனத்துக்கு தகவல்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த் தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார் முதல்வர். தற்போது சிங்கப்பூர் நிபுணர்களின் உதவ…

  5. போயஸின் திடீர் செல்லப் பிள்ளை தீபக் ஜெ., சொத்துக்கள்; பகீர் திட்டங்கள் சென்னை: ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் இதுவரையில் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்னாகும் என்பது குறித்த விசாரணைகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக துவங்கி உள்ளது. குறிப்பாக, அவர் இத்தனை நாட்களும் வாழ்ந்து வந்த போயஸ் தோட்டம் என்னாகும் என்பது குறித்த சிந்தனை பலரது எண்ணங்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., உள் வட்டாரங்களை நன்கு அறிந்தவர்கள் கூறியதாவது: சிறுதாவூர் மற்றும் பையனூரில் உள்ள பங்களாக்கள், போயஸ் தோட்டம், கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்பட பல்…

  6. சிறப்புக் கட்டுரை: பாவம் பழனிச்சாமி! மின்னம்பலம் ராஜன் குறை தோல்வியில் பல சமயம் கெளரவம் இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பல களம் கண்ட படைத்தலைவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் அது மிகவும் கெளரவமான தோல்வியாக இருக்கும்; அவர்கள் புகழ் அதனால் என்றும் மங்காது. இதற்கு மாறாக வெற்றியில் அவமானகரமான வெற்றி என்பது ரசிக்கத்தக்கதாக இருக்காது. அது அந்த வெற்றியின் தருணத்திலேயே கூசிக் குறுகச்செய்யும். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ்-ஸை கட்சிக்குள் ஓரம் கட்டி பெரும்பான்மை ஆதரவைக்காட்டி ஓ.பி.எஸ்-ஸை வைத்தே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த தருணம் ஒரு விதத்தில் வெற்றிதான். ஆனால் தொடர்ந்து பாரதீய ஜனதா விசுவாசத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் போட்டி போட முடியாமல் த…

  7. உயர்வை நோக்கி... அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு) அப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட…

  8. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்தியா பயிற்சி அளித்து வந்த நிலையில் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இலங்கைக்கு கோவை விமான நிலையம் மூலம் திருப்பி அனுப்ப வைக்கப் பட்டனர். இதை அறிந்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயணம் செய்யும் மாணவர்கள் கோவை விமான நிலையதில் போராட்டம் நடத்தினர் . பின்னர் மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தர் . மாணவர்களில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயண முயற்சியை வைகோ பாராட்டி ஊக்கமளிக்கும் விதமாக 15 நிமிடங்கள் அங்கு உரையாற்றினர் . படங்கள் கிழே : http://dinaithal.com/tamilnadu/16472-they-struggle-against-the-sri-lankan-military-airport-on-the-students-movies.html

    • 0 replies
    • 431 views
  9. காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித…

    • 0 replies
    • 547 views
  10. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளி…

    • 0 replies
    • 389 views
  11. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளரை தேர்வு செ…

  12. Started by நவீனன்,

    சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்க, அரசியல் கட்சிகள் முயற்சிப்பது அதிகமாக நடப்பதாக, டில்லியில் ஒரு கருத்து நிலவுகிறது.தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அதே குற்றச்சாட்டுகளுடன், முக்கிய அரசியல் கட்சிகள், டில்லி தலைமை தேர்தல் கமிஷனை மொய்க்க துவங்கியுள…

  13. தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தேனி, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது. இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ…

  14. பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000க்கும்மேற்பட்டோர் இன்று ஒரு நாள் முழுவதும் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே நின்றுள்ளனர். தமிழீழ படுகொலைக்குக் காரணமாக இருந்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, அதனை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=90912&category=TamilNews&language=tamil

  15. கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை? கோவை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சிறையிலுள்ள சசிகலாவிடம், தமிழக போலீசாரால் விரைவில் விசாரணை நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை சிறையில் தள்ளி, அவரை மரணம் வரை கொண்டு சேர்த்ததில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சொத்துக்களின் பட்டியலில், மிக முக்கிய இடம் பிடித்தது, கோடநாடு எஸ்டேட். சொத்து குவிப்புப் பட்டியலில், இந்த எஸ்டேட்டின் பரப்பு, 900 ஏக்கர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின், இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. …

  16. காம்மென் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்ககேற்க கூடாது என்று எதிர்வரும் 26 ஆம்நாள் சென்னையில் நடைபெறவுள்ள விளக்க பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றவுள்ளார். எதிர்வரும் 26 ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வினை சங்கதி24 இணையத்தளத்தில் (sankathi24.com)நேர ஒளிபரப்பு செய்யவுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம் காம்மென் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடாது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார பயயணம் கடந்த 20.09.2013 முதல் வாகன பிரச்சாரம். பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 20.9.2103 சீர்ககாழியில் நடைபெற்ற பிரச்சார பயணத்தின் இறுதி நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.எ ஜவாஹிருல்லா விளக்கவுரை ஆற்றியுள்ளார் 26.09.2013 சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வை…

  17. ஃபைசல், நாசர், லூத்ஃபுதின் ஃபைசலுடன் கமீலா நாசர் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல். மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம். ‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபை…

    • 0 replies
    • 429 views
  18. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு …

    • 0 replies
    • 419 views
  19. மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி? ‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார். ‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம். ‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது. பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறிய…

  20. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். எத்தனை இடங்களில் சோதனை? முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்…

  21. தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம் “அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டோம்’’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பலரும் சொல்லி வைத்ததுபோல ஒரே நேரத்தில் வாபஸ் பெற்றனர். நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதால், அங்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் பல இடங்களில் அவர்கள் பணத்துக்கு விலை போனதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம். அவரது பேட்டி: பல இடங்களில் உங்…

  22. ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை. நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இ…

  23. நேற்று மாலை நடைபெற்ற ‘சிவப்பு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தில் ‘கோனார்’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண் பேசுகையில் ஆச்சரியப்படத்தக்கவகையில ஈழப் பிரச்சினை குறித்து மிக விரிவாகவே பேசினார். ராஜ்கிரண் பேசும்போது, “இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது. மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும். படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்ட…

    • 0 replies
    • 544 views
  24. ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு பழுதாகி கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினர். கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பாஸ்கரன், மாரிமுத்து, சீனிபாண்டி உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சதீவு அருகே அவர்கள் சென்ற படகு பழுதானது. இதனை அடுத்து கரை திரும்பாத மீனவர்களை, சக மீனவர்கள் 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1 மணி அளவில் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களை மீட்ட இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த 21 ஆ…

  25. எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி 15 நிமிடங்களில் 45 மி.மீ., என்ற அளவில் அதி கனமழை பதிவானது. இதனால் பல குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், எதிர் வரும் காலங்களில் அதீத மழை பெழிவு ஏற்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாநகராட்சியில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.