Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம் இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் . 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் . தற்போது, 237 மீன…

  2. முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். "கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை," என்று நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் பிபிசி தமிழிடம் கூறினர். புற்றுநோயைப் பரப்பும் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நைட்ரோஃபுரான் மருந்தை, இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில்…

  3. படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்." கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்ற…

  4. 13 Jun, 2025 | 05:05 PM தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லப்போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இராமநாத…

  5. சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்தி…

  6. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும்…

  7. கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண…

  8. 25 JUN, 2025 | 12:16 PM யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது. தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெ…

  9. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்? மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின்…

  10. 30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் I…

  11. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு! தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது. விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர். https://athavannews.com/2025/1437696

  12. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் 30 செப்டெம்பர் 2025 சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் ச…

  13. கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமை மாலை கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்க…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது. புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா? கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள் கடன…

  15. டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம் புதுடெல்லி: பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்…

  16. ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் ––அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.- இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத்…

  17. தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 10 டிசம்பர் 2025 தமிழ்நாட்டில் சமீபத்தில் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டுயானைகள் இறந்ததன் எதிரொலியாக யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இரு மாதங்களில் இந்த குழு இதற்கான வரைவு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டுமென்று காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யானைகள் காட்டை விட்டு வெளியில் வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குழுக்களை அமைப்பதால் எந்த பயனுமில்லை என்று காட்ட…

  18. படக்குறிப்பு,(இடமிருந்து) தமிமுன் அன்சாரி, தனியரசு, கிருஷ்ணசாமி, வேல்முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வாய்ப்புகளை எடை போடத் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறிய கட்சிகள் தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை நோக்கி காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது? 2021-ல் யார் எந்தப் பக்கம் இருந்தனர்? கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி…

  19. 10 AUG, 2025 | 10:26 AM குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிர…

  20. சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு! தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தின்போது, அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர மதுரை.யில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்…

  21. இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்! தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இ…

  22. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின்குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் 23 JUL, 2025 | 01:32 PM கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதா…

  23. இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகா…

  24. இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. "தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.