Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசு வழங்கிய சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் போட்டி: கல்லீரல் பாதித்து அரசுப்பள்ளி மாணவி உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகளில், ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு , மேற் சிகிச்சைக்கு சென்னை செல்லும் வழியில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி கவலைக்கிடமாக உள்ளார். நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான உருது நடுநிலைப்…

  2. மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்! மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாசுதன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாசுதன் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இர…

  3. சென்னையில் 6 வருடமாக கஞ்சா சாக்லேட் விற்பனை பீகார் இளைஞர் சிக்கியது எப்படி சென்னை அண்ணா சாலையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகள் விற்பனை செய்த பீகார் மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அண்ணாசாலை காவல்நிலைய போலீசார் தாராப்பூர் டவர் அருகே உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, அண்ணா சாலையில் அமைந்துள்ள தலப்பாகட்டி ஹோட்டல் அருகே உள்ள சாய் என்ற பான் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் உருண்டை என சொல்லக்கூடிய கஞ்சா …

  4. கீழடி அருங்காட்சியகத்தில் இவ்வளவு பொருட்களா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்த பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தம…

  5. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - 3 முக்கிய காரணங்கள் இவைதான் 42 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. …

  6. தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA கோவில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது தொடர்பாக திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாதியிலேயே அக்கூட்டம் முடிந்தது. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பான கருத்துகளை அறிவதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடி, கன்னியா…

  7. தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி - உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். Twitter…

  8. ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு நடந்தது என்ன ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யச் சென்ற தமிழ்நாடு போலீசார் 12 பேரை லஞ்சம் பெற முயன்றதாக பொய்ப் புகாரில் சிறைபிடித்த ராஜஸ்தான் போலீசார், தமிழ்நாடு காவல்துறை வழங்கிய ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அவர்களை விடுவித்தனர். சென்னை: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி நேற்று அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்று 25 லட்சம் ரூபாய் லஞ்சம் …

  9. "சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கிறார்கள்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக அரசு செய்யும் பணிகளைப் பல்வேறு மாநில மக்களும் தலைவர்களும் பாராட்டுவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, "நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நம…

  10. 'விடியல் இன்னும் வரல' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது…

  11. பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES “லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“ “ஸாலா மதாராஸி ஹட்டாவ்“ 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புல…

  12. நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! KaviMar 06, 2023 13:58PM போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது இன்று (மார்ச் 6) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்துப் பேசியது சர்ச்சையானது. அப்போதே ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அருந்ததியர் மக்களின் வரலாற்றை அடிப்படை ஆதாரம் இல்லாமல் சீமான் பேசியதாக கூறி அவரது பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இட…

  13. ஆட்டிசம் குறைப்பாட்டை களைய உதவும் செயலி - மகனுக்கு உதவ உருவாக்கிய தாய் 30 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையை சேர்ந்த எழுந்தாளரான லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன், தனது குழந்தை மட்டுமல்லாது பிற குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர்களில் பேசக்கூடிய குழந்தைகள், பேச இயலாத குழந்தைகள் என இருவகை உண்டு. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இந்த செயலியின் மூலம் தங்களின் தேவைகளை அருகில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க முடியும். இந்த செயலியின் உதவியுடன் அவர்களின் கற்றல் திறன், பேசுவதற்கான உந்துதல் ஏற்படும் என்று கூறுகிறார்,…

  14. வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: பொருளாதார ஏற்றத்தாழ்வு வடக்கு, தெற்கு மாநிலங்கள் இடையே அதிகரிப்பது தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துமா? சிவகுமார் ராஜகுலம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் பக்க விளைவாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் மாநிலங்களில் தாக்குதலுக்கு இலக்காவதாக எழும் கு…

  15. எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டு: மீண்டும் எழுந்த 'மீ டூ' விவாதம் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, எழுத்தாளர் கோணங்கி 3 மணி நேரங்களுக்கு முன்னர் தான் கல்லூரி மாணவராக இருந்தபோது தனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி எழுத்தாளர் கோணங்கி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக, கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் இரு தினங்களுக்கு முன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது, இலக்கிய உலகில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் 'மீ டூ' குறித்த விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது. 'மதினிமார்கள் கதை' சிறுகதை தொகுப்பு, 'பாழி', 'பிதிரா' உள்ளிட்ட நாவல்களு…

  16. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல் 13 Feb, 2023 | 12:02 PM விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் தக்க சூழலில் பொதுமக்கள் முன் தோன்றுவார் என்றும் தமிழின உணர்வாளரும், உலக தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ''விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். விரைவில் அவர் மக்கள் முன் தோன்றுவார். அதற்கான சூழல் விரைவில் கனியும் என எதிர்பார்க்கிறோம். விடுதலைப்புலி புலிகள் தலைவர் பிரபாகர் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. …

  17. இனி அதிக இடங்களில் போட்டி..ஸ்ராலினின் தேசிய அரசியல் நகர்வு.. சென்னை: 2024 நாடாளு்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற குஷியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 லோக்சபா தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது. இந்த வெற்றி தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் திமுகவிற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்து உள்ளது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல்வேறு திட்டங்களை திமுக வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக …

  18. "கோவிலில் யானை வளர்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக…

  19. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2023, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற…

  20. ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன? 27 பிப்ரவரி 2023, 04:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியின் அருகே சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக - அதிமுகவினர் சர்ச்சையாகி வாக்குவாதம் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ராணுவ படை உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து அனுமதி இன்றி கூடியிருந்த அரசியல்…

  21. சாப்பாடு போட்டு, கல்வி புகட்டி, அரசு ஊழியர் தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் 'நம்ம தாசில்தார்' கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாசில்தார் மாரிமுத்து “சிறு வயதில் சாக்கு விரித்துதான் தினமும் படுத்திருப்பேன். கொஞ்சம் கையை நீட்டி படுத்தால் சுவற்றில் இருந்து மண் கொட்டும். மேலே பார்த்தால் 50 வருட பழமையான கூரை.காலை வெளியே நீட்டினால் சாக்கடை ஓடும் . வறுமை தான் எனது மிகப்பெரிய ஆசான். இப்படிபட்ட சூழலில் வாழ்வின் பெரும் நம்பிக்கையாய் என் முன்னே இருந்தது கல்வி மட்டுமே. அந்த கல்வ…

  22. "பாமக, பாஜக உள்ள அணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம்" - திருமாவளவனின் பேச்சு திமுகவுக்கு எச்சரிக்கையா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத…

  23. 'ஒரே நாடு, ஒரே உறுப்பு தான பதிவேடு' - இந்திய அரசின் முயற்சியால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் "ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு" திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் …

  24. குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் ஒன்றுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த இலங்கையர்,…

  25. ஆராய்ச்சி படிப்பில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டு பெண்கள் - முந்தைய அரசுகளின் பங்கு காரணமா? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020-21ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்களைக் கொண்டு பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். என்ன அறிக்கை? …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.