Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கித் தந்த தமிழ்நாடு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமது மாணவர்களுடன் ராமச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு…

  2. லித்தியம் பேட்டரியில் ஜீப்: ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த தமிழக இளைஞர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜீப் உருவாக்கிய இளைஞர் விவசாயத்துக்கு உதவும் விதமாக லித்தியம் பேட்டரியில் ஜீப் ஒன்றை வடிவமைத்த இளைஞருக்கு மஹிந்திரா நிறுவனத்தில் பணி வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார் மஹிந்திரா குழும தலைவர், ஆனந்த் மஹிந்திரா. காரணம், விவசாயத்துக்கு உதவுவது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த ஜீப். சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்த விவசாயிகளான அருணகிரி - கவிதா தம்பதியரின் மகன் கௌதம். குடும்ப வறுமைக்கு இடையில், தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜ…

  3. தன் மகளைவிட சிறப்பாக படித்த மாணவனை பெண் கொன்றதாக குற்றச்சாட்டு: பெற்றோர் போராட்டம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காரைக்கால் பகுதியில், தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலின் நகரப்பகுதியில் வீட்ட…

  4. கர்நாடகத்தில் ஒரு சிறுத்தையைப் பிடிக்க ஒரு மாதமாகப் போராடும் 300 பேர் செரிலன் மொல்லன் பிபிசி நியூஸ், மும்பை 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARNATAKA FOREST DEPARTMENT படக்குறிப்பு, கோல்ஃப் மைதானத்தில் கேமரா பொறியில் பதிவான சிறுத்தையின் நடமாட்டம் கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக கோல்ஃப் மைதானத்திற்குள் நுழைந்து தலைமறைவாகியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிறுத்தை முதலில் ஆகஸ்ட் 5 அன்று, வடக்கு கர்நாடகாவில் உள்ள பெல்காம் நகரத்தில் ஒரு தொழிலாளியைத் தாக்கியபோது பேசுபொருளானது. அந்தத் தாக்குதலில் காயமடைந்திருந்தாலும் அந்த நபர…

  5. நிர்மலா சீதாராமன்: ரேஷன் கடையில் நரேந்திர மோதி படம்; கலெக்டருடன் அமைச்சர் வாக்குவாதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @NSITHARAMANOFFC பிரதமரின் படத்துடன் கூடிய ஒரு பேனரை எங்கள் ஆட்கள் வைப்பார்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக அதற்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இல்லாவிட்டால் நானே, இங்கு பேனர் வைப்பேன் என்று பேசியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏன் இப்படி பேசினார்? என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆட்சியரிடம் தொடர்…

  6. அதிமுக: நரேந்திர மோதியுடன் நெருங்கும் இபிஎஸ் அணி - டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு முழு விவரம் பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்நாட்டில் எதிர்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் தலைமை போட்டி, இரு தரப்பும் இப்போது மேற்கொண்டுள்ள சட்ட போராட்டங்களால் விறுவிறுப்படைந்திருக்கிறது. இதற்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நெருக்கம் காட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர முயற்சி எடுத்துள்ளது. …

  7. மாவீரர் பூலித்தேவனுக்கு... தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, பிரதமர் மோடி! விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துவதாக கூறியுள்ளார். புலித்தேவனின் வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாகவும் முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட அவர், மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1297114

  8. குடும்ப தலைவிகளுக்கு... மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க... நடவடிக்கை – மு.க.ஸ்டாலின் நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் எஞ்சிய 30 சதவீத திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான விசாரணை அறிக்கைகளை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல்…

  9. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து: 2 நீதிபதி பெஞ்ச் உத்தரவு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு முந்தைய நிலையே நீடிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்துள்ளது. ஜுன் 23ம் தேதி பொதுக் குழுவில் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் ஜுலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இந்த பொதுக்குழுவை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஏற்கவில்லை…

  10. "தமிழ்நாட்டில் போதை பொருள் பரவ மத்திய அரசே காரணம்" - அமைச்சர் பொன்முடி 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, க. பொன்முடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மூலமாகவே போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன. துறைமுகங்களைத் தனியார் மயமாக்கியதே இதற்குக் காரணம் என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.கவின் தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

  11. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் சூழலில், தன் மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்படும் வரை உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பின்னணி என்ன? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத…

  12. 5ஜி விரைவில் சென்னையில் - உங்கள் மொபைலில் அது வேலை செய்யுமா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். சமீபத்தில் 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் இருந்து, அந்த சேவையைப் பெறும் எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதாக தெளிவுபடுத்தியுள்ளது. Vi அதாவது வோடாஃபோன் ஐடியா, மற்ற 5ஜி ஆபரேட்டர்களிடமிருந்து வேறுபட்ட திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது. 5ஜி சேவை அறிமுகமாக…

  13. தமிழகம் – திண்டுக்கல்லில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை மாதிரியாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து ஊராட்சிப் பகுதியில், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி இந்திய ரூபா செலவில் 321 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்டுமானப் பணிகளை, தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கண்காணித்துள்ளார். இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், திண்டுக்கலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 321 வீட…

  14. கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடருமா? மாநகராட்சியின் திடீர் நிலைப்பாடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? கோவை மாவட்ட ஆட்சியர் ஜீ.சமீரன் கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏதுவான வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பேசு பொருளானது. தமிழக எதிர்கட்சி தலைவர் எட…

  15. திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செ…

  16. எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால்…

  17. விநாயகர் சதுர்த்தி: இறைச்சி கடைகளுக்கு போலீஸ் ஆய்வாளர் போட்ட உத்தரவு திடீர் வாபஸ் ஏன்? 7 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிவகாஞ்சி காவல் நிலையம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக சங்கரமடம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், அது உடனடியாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது? காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்…

  18. ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஆன்லைன் ரம்மி - என்ன முடிவெடுத்தது தமிழ்நாடு அரசு? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரித்த இரு ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான தகவலை இங்கே வழங்குகிறோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.05…

  19. ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள் 27 ஆகஸ்ட் 2022, 03:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு ம…

  20. ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 608 பக்க அறிக்கை சமர்ப்பித்தது 27 ஆகஸ்ட் 2022, 06:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வந்த நீதியரசர் ஆறுமுகசாமி முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை…

  21. தங்கைக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலறிய பயணிகள்! monishaAug 27, 2022 11:26AM சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை 7.20 மணிக்குச் சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, மர்மநபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம், துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 160 பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வ…

  22. தமிழ்நாடு: திருக்குறள், திருவள்ளுவரை கட்சிகள், ஆளுநர் பயன்படுத்துவது அரசியல் ஆதாயத்துக்காகவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் எழும் சர்ச்சைகள் புதிதல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் திருவள்ளுவரை தங்களின் அடையாளமாக கூறிக்கொள்வதும் அரசியல் தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக திருக்குறள் ஒன்றை கூறி தொடங்குவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழ் மொழியின் தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழ்ந்த திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக்…

  23. 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா 'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் 'இலவசங்கள்' தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை பற்றிய விவாதம்…

  24. இலவசங்கள், ஃப்ரீபிக்கள் என்பது பொருத்தமல்ல; அவை ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.…

  25. ஆளுநர் ரவி ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி விமர்சனம் - மீண்டும் சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, டெல்லி டிடிஇஏ லோதி சாலை பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. உடனிருப்பவர் வி.ஜி. சந்தோஷம் மற்றும் டிடிஇஏ பள்ளி நிர்வாகிகள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துவ மத போதகர் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது. டெல்லியில் ஏழு பள்ளிகளை நிர்வகித்து வரும் டெல்லி தமிழ் கல்விக் கழகம் 1923ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.