அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…
-
- 0 replies
- 365 views
-
-
ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம் ; இம்ரான் கான் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/63280
-
- 0 replies
- 262 views
-
-
12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:03 AM உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. …
-
- 0 replies
- 635 views
-
-
இந்தியாவில் ஊழல், குடும்ப அரசியல், கொள்ளைக்குச் செக்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு! Read in English ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர், சூசகமாக தெரிவித்தார். இந்தியா | Edited by Barath Raj | Updated: August 23, 2019 16:32 IST EMAIL PRINT COMMENTS பாரீஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் மோடி. NEW DELHI: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்று…
-
- 0 replies
- 568 views
-
-
தீவிரமடையும் காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது. தொடக்கத்தில் இருந்த…
-
- 2 replies
- 597 views
-
-
முக்கியமான நேரத்தில், சுடாத துப்பாக்கி. அதிர்ச்சியடைந்த போலீசார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82), உடல் நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலமானார். ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராகும். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கு, கடந்த 21ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது, விதிமுறைப்படி, 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது. போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட முயன்றபோது, எந்த துப்பாக்கியும் சுடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள், துப்…
-
- 0 replies
- 540 views
-
-
இந்தியாவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளில் உண்மை இல்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளதாக பிபிசியின் இஸ்லாமாபாத் செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தெரிவிக்கிறார். ஆகஸ்டு 17ஆம் தேதியன்று பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள கெல் செக்டரில் நடைபெற்ற எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் நாயிப் சுபேதார் அகமது கான் என்ற பாகிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆ…
-
- 0 replies
- 394 views
-
-
2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00 இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடு…
-
- 2 replies
- 532 views
-
-
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பகல் 11 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்…
-
- 0 replies
- 246 views
-
-
ஜம்மு காஷ்மீரில் 4,000 பேர் கைது – சிறைகளில் இடமில்லை August 19, 2019 கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை…
-
- 0 replies
- 689 views
-
-
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பியாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்திகதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார். தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவ…
-
- 0 replies
- 373 views
-
-
''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…
-
- 1 reply
- 560 views
-
-
காணாமல் போன ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிப்பு. இமாசலபிரதேச மாநிலத்தில் காணாமல்போன இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி காணாமல் போனது. குறித்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6ஆ…
-
- 0 replies
- 367 views
-
-
பங்களாதேஷில் பாரிய தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசம் – 50 ஆயிரம் மக்கள் பாதிப்பு! பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சாலண்டிகா குடிசைப் பகுதி ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டமை காரணமாக தீயினை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பாரிய தீ விபத்து காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீடுகளை இழந்தவர்கள் தற்போது வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
- 0 replies
- 328 views
-
-
விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…
-
- 3 replies
- 793 views
-
-
அருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார் அருண் ஜேட்லி இதன் காரணமாக மோடியின் இரண்டாவது அரசு ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார் ஜெட்லி.இந்த நிலையில் மூச்சுத் திணறல் உள்ளிட்ட மேலும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அடுத்து முக்கிய பிரமுகர்களான, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துற…
-
- 0 replies
- 263 views
-
-
முப்படைகளும் தயார்...கர்ஜிக்கும் இந்தியா...! எத்தனை நாடுகள் வந்தாலும் பதிலடி உண்டு..! ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று இரவு கூடுகிறது , இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் தங்கள் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் மிக ரகசியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்கு அதில் ரகசியம் காக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டத்தை தெரிவித்ததுடன், சினாவுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்…
-
- 0 replies
- 1.4k views
-
-
படத்தின் காப்புரிமை TOLGA AKMEN இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் பரவலாக வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, லண்டனில் கொண்டாட்டம் மட்டுமின்றி, போராட்டமும் நடைபெற்றது. லண்டன் நகரின் இந்தியா பிளேஸ் பகுதியிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்புறம் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் காலை முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதே வீதியின் மறுபுறம் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வே…
-
- 0 replies
- 337 views
-
-
விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளோம்- காஸ்மீரின் முன்னாள் முதல்வரின் மகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தி;ன் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் இந்திய உள்துறை அமைச்சர் அமிட் சாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேதனை வெளியிட்டுள்ளார். இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வீட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என முன்னாள் முதல்வரின் மகள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந…
-
- 0 replies
- 315 views
-
-
காஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழல்! காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. குறித்த ஆலோசனை கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழு இடப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ. நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் மீதமுள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச…
-
- 0 replies
- 288 views
-
-
இந்தியாவின் சுதந்திர தினத்தை பாக்கிஸ்தான் கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. காஸ்மீர் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே பாக்கிஸ்தான் இந்திய சுதந்திரத்தை கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. பாக்கிஸ்தான் அரச கட்டிடங்களில் அந்த நாட்டின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்ற அதேவேளை பிரதமர் இம்ரான்கான் தனது சமூக ஊடக படங்களை கறுப்பு பின்னணியில் பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானின் பத்திரிகைகளிலும் இதனை காணமுடிகின்றது. இதேவேளை பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் காஸ்மீரின் முசாபராபாத் நகரில் தீவிரவாதிகளின் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பினர் இந்த பேரணியை ஏற்பாடு செய்தி…
-
- 0 replies
- 388 views
-
-
காஷ்மீரின் உரி மற்றும் ராஜோரி பகுதியில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையிலேயே மேற்படி பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/62745
-
- 0 replies
- 285 views
-
-
இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி என்பது இந்தியர்களின் வாழ்விலும், நினைவிலும் நிலைக்கும் புதிய இந்தியாவின் உதய நாள் ஆகும். இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள், ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம். இருநூறு ஆண்டுகளாக, சொந்த நாட்டிலேயே அந்நிய தேசத்தவரான வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம். 18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்…
-
- 3 replies
- 823 views
- 1 follower
-
-
கேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்! தமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது. கேரளாவில் பெய்த கனமழையால், அந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழை காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருளுதவி தேவைப்படும் நிலையில் கேரள மாநிலம் இருக்கிறது. இதையொட்டி, உதவி கோரும் நோக்கில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன். …
-
- 0 replies
- 843 views
-