அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
31 JAN, 2024 | 12:20 PM சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும் இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
கங்கை நதியில்... கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்! கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கங்கை நதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி முடிவு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2021/1227485
-
- 0 replies
- 194 views
-
-
குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வைத்த விருந்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு விவகாரங்களில் ஒருவரையொருவர் அமித் ஷாவும், மம்தாவும் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வரத்தில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாதலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந…
-
- 0 replies
- 194 views
-
-
உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு! உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகிய…
-
- 0 replies
- 194 views
-
-
நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன? சோயா மதீன் பிபிசி செய்திகள், டெல்லி 13 ஜூன் 2022, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று, திங்கள்கிழமை அரசு முகமையான அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். இதனையொட்டி, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்துவரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு குறித…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ALLAHABADHIGHCOURT.IN படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் அதிகளவிலான பணம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போடார் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நேற்று, மார்ச் 22 அன்று அதுதொடர்பான அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் அதற்கு வர்மா அளித்துள்ள பதிலறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு ப…
-
- 0 replies
- 193 views
-
-
3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள்: கேரள மாணவி உலக சாதனை திருவனந்தபுரம் ஊரடங்கு காலகட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து உலக சாதனை படைத்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஆரத்தி ரகுநாத். கேரள மாநிலம் கொச்சி அருகே எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் எம்.எஸ்சி. உயிர் வேதியியல் (இரண்டாம் ஆண்டு) படிப்புப் படித்து வருகிறார். கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் ஆரத்தி, கோர்ஸ் எரா மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார். குறிப்பாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வெர்ஜீனியா பல்கலைக்கழ…
-
- 0 replies
- 193 views
-
-
கொரோனா தொற்றால்... இறந்தவரின் உடல் மூலம், தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆய்வு நடத்தி வந்தோம். ஏறக்குறைய 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 – 24 மணி நேரத்தில் இதைச்செய்தோம். இதன் முடிவுகளின்படி இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் க…
-
- 0 replies
- 193 views
-
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 193 views
-
-
ஜாலியன்வாலா பாக் படுகொலை: 21 ஆண்டுகள் காத்திருந்து உதம் சிங் பழிவாங்கியது எப்படி? பட மூலாதாரம்,WWW.SHAHEEDKOSH.DELHI.GOV.IN கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2023, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 மார்ச் 2023, 05:01 GMT மாரியோ புஸோவின் The God Father என்ற ஆங்கில நாவலில், "ரிவென்ஜ் இஸ் எ டிஷ் தாட் டேஸ்ட்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் கோல்ட்” என்ற ஒரு வசனம் வரும். 'பழிவாங்கல் என்பது ஆறவைத்து பரிமாறப்படும்போது மட்டுமே எல்லாவற்றையும் விட சுவையாக இருக்கும் ஒரு உணவு பதார்த்தம் போன்றது' என்பது அதன் பொருள். 1…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார். இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்ட…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பிராந்தியத்தில் சீனா... அமைதியை சீர்குலைத்தால், உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர். பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில் இணக்கமற்ற சூழல் நிலவும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்றும் அவர் கூறினார். சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லாதமைக்கு, எல்லை பிரச்னைதான் காரணம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இதவேளை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயற்பட்டு வருகிறது என ஜெய்ச…
-
- 0 replies
- 192 views
-
-
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர்…
-
- 2 replies
- 192 views
- 1 follower
-
-
லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த, வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு! லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2021/1243571
-
- 0 replies
- 192 views
-
-
கேரளாவில் கனமழை – 18 போ் பலி 22 பேரை காணவில்லை October 17, 2021 தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழையினால் 18 போ் உயிாிழந்துள்ளதுடன் 22 போ் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 22 பேரை காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. . அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்…
-
- 0 replies
- 192 views
-
-
இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் இந்தியா கேட் அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல…
-
- 0 replies
- 192 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து... இந்தியா, இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது – அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது என அமெரிக்கா, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு நாடும், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் சொந்த முடிவையே எடுத்து வருவதாக தெரிவித்த அவர், ”இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மொத்தத்தில் ஒன்று அல்லது 2 சதவீதம் என்று குறைந்த அளவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்க…
-
- 1 reply
- 192 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளன எழுதியவர், லக்ஷ்மி பட்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை 'டால்பின்களின் வீடு' என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது. க…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
கொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத…
-
- 0 replies
- 192 views
-
-
சுர்ஜித்தைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் மற்றுமொரு சிறுவன் – மீட்புப் பணி தீவிரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விளையாடும் போது ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 15 அடியில் சிக்கியிருக்கும் குறித்த சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுவனுக்குத் தேவையான தண்ணீரும் ஒட்சிசனும் வழங்கப்பட்டுவரும் நிலையில் குழந்தையை மீட்க பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அண்மையில் தமிழகத்தில் இரண்டு வயதுக் குழந்தையான …
-
- 0 replies
- 191 views
-
-
இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் டெல்லியில் 12 விநாடிகளில் எப்படி இடிக்கப்படும்? இதனால் ஏற்படும் விளைவு என்ன? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விதிகளை மீறியுள்ளதாகக் கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் 12 விநாடிகளில் இடிக்கப்படும். ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
50 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது. பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இரு…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
காற்று, சோலார் மின் உற்பத்தியில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா! கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு உலகின் 3வது பெரிய நாடாக மாறியது. புவி வெப்பமயமாதல் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்…
-
- 0 replies
- 191 views
-