அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…
-
- 0 replies
- 189 views
-
-
16 MAY, 2025 | 03:44 PM புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில்உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போ…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர்…
-
- 2 replies
- 189 views
- 1 follower
-
-
உத்தரப்பிரதேசத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட... ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவிக்கையில், ‘ உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என மே மாதம் முதலாம் திகதி மாநில தலைமைச் செயலர் உறுதியளித்தார். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம், ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 189 views
-
-
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுகின்றமையினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கின்றது எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதேவேளை இக்கூட்டத்தை காங்கிரஸ், …
-
- 0 replies
- 189 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் காஸ்மீரில் காணப்படும் மனித உரிமை நிலவரம் குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்முகாஸ்மீரில் காணப்படும் மோசமான நிலைமை மற்றும் மனித உரிமை நெருக்கடி குறித்து வெளிவிவகார அமைச்சர் சா மெஹ்மூட் குரேசி இலங்கை வெளிவிவகார அமைச்சரிற்கு எடுத்துரைத்தார் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் குறிப்பிட்டுள்ளார். ஜம்முகாஸ்மீரில் 100 நாட்களாக காணப்படும் நிலைமை சர்வதேச சமூகத்தின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என பாக்கிஸ்தான் …
-
- 0 replies
- 189 views
-
-
தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்! இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிற…
-
- 0 replies
- 189 views
-
-
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…
-
- 0 replies
- 189 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. பதிவு: ஏப்ரல் 06, 2020 05:15 AM புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:- * இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு உட்…
-
- 0 replies
- 188 views
-
-
அன்னம் அரசு General News மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள். ``உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” - சீமான் மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி.மோகன், எம்.ஐயனார். இவர்கள் இருவரும் ஜூலை 5-ஆம் தேதி காலை மியான்மாரின் தமு பகுதியில் உள்ள அவர்களின் தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். பிறகு, தமு நகரின் வார்டு எண். 10 (தமு சா ப்வா என்றும் அழைக்கப்படு…
-
- 0 replies
- 188 views
-
-
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182…
-
- 0 replies
- 188 views
-
-
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்! தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த சத்தீஸ்கரின் அபுஜ்மார் மற்றும் வடக்கு பஸ்தார் ஆகிய பகுதிகள் நக்சல் இல்லாத பகுதிகளாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் பொலிஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் முன்னிலையில், 210 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சரண் அடைந்த நக்சல்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பின…
-
- 2 replies
- 188 views
- 1 follower
-
-
நிஜாமின் சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம் – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு! லண்டன் வங்கியில் உள்ள ஹைதராபாத் நிஜாமின் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஹைதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான் 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்ஸ் பணத்தை பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் முதலீடு செய்தார். இந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலா லண்டனில் உள்ள நற்வெஸ்ற் வங்கியில் வைப்பு செய்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 300 கோடி …
-
- 0 replies
- 188 views
-
-
ஹவாய் கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூடு.. இந்திய விமான படை தளபதி உள்ளிட்டோர் உயிர் தப்பினர்! அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். அப்போது அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கடற்படை மற்றும் விமான படை தளம் அமைந்துள்ளது. இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். அவர்களின் உடல் நிலை மோசாக உள்ளது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 188 views
-
-
இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் ISIS தாக்குதல் – உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ISIS அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அஸார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ISIS அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 188 views
-
-
"கொவிஷீல்டுக்கு" அங்கீகாரம் வழங்குமாறு... இந்தியா, ஐரோப்பிய யூனியனிடம் கோரிக்கை! கொவிஷீல்டு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு இந்தியா ஐரோப்பிய யூனியனிடம் வலியுறுத்தியுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டிலேயே மேற்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனாவுக்கு எதிரான சவால்களை சந்திக்க தடுப்பூசிகள், மருந்துகள் போன்றுவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1225802
-
- 0 replies
- 188 views
-
-
மத்திய அரசுக்கு எதிராக... 20 கோடிக்கும் அதிகமான, தொழிலாளர்கள் போராட்டம்! மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 187 views
-
-
சுவிஸ் வங்கியில் உள்ள... இந்தியர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் உள்ளடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்வேறு சொத்துக்கள், வரி ஏய்ப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ath…
-
- 0 replies
- 187 views
-
-
கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த, தரவுகளை வெளியிடும்படி... நீதிமன்றம் உத்தரவு! கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை எனவும், தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்…
-
- 0 replies
- 187 views
-
-
முப்பதிற்கும் மேற்பட்ட... இந்திய மீனவர்களை, கைது செய்தது பாகிஸ்தான்! பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ரோந்து சென்ற போது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1268200
-
- 0 replies
- 187 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 9 மணி நேரங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 மட்டுமே. யோகி இங்கிருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மார்ச் மாதம் தனது 45வது வயதில் யோகி, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார். மறுபுறம், நரேந்திர மோதி 2001 இல் தனது 51வது வயதில் குஜராத்தின் முதலமைச்சரானார். 2002 இல் முதல் முறையாக ராஜ்கோட்-2 தொகுதியில் இருந்து எம்எ…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER/GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஜுபைர், நூபுர் ஷர்மா (இடமிருந்து வலம்) நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கைகள் வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், திங்கள்கிழமை இரவு டெல்லி…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்! பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த…
-
- 0 replies
- 187 views
-
-
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை! தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தொலைப்பேசியிலோ அல்லது பேப்பர் வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை பொதுமக்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர். https://athavannews.com/2021/1240201
-
- 0 replies
- 187 views
-
-
குஜராத்தில் கணக்கில் வராத 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் கண்டுப்பிடிப்பு! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குட்கா விநியோகஸ்தரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் ஏழரை கோடி ரூபாய் ரொக்கப்பணமும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இதுகுறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த நிறுவனத்தின் வங்கி லாக்கருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athava…
-
- 0 replies
- 187 views
-