Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்து சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய – சீன இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி வரையில் நீடித்தது. இதன்போதே, சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 8 மலைச்சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பதுதான் இந்திய சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட பேச்சுகளை அடுத்து கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டமைக் குறித…

  2. பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்! பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த…

  3. மருத்துவ பொருட்களுக்கு... அதிக விலையை, நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து! கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹொங்கொங்கிற்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தைச் சமாளிக இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்ட…

  4. புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக இந…

  5. பாகிஸ்தானில்... குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு : 30 பேர் காயம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது. அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தெரிவித்துள்ள ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் , கூட்டம் நடைபெற்றபோது திடீரென வெடித்த வெடிகுண்டால் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், மீட்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை வைத்திசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கி…

  6. மலேசியா மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கோலாலம்பூர் : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் …

    • 0 replies
    • 188 views
  7. பிரசண்டா - இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள் ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,@RAJNATHSINGH உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'light combat helicopter' (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, 'தனுஷ்' என்று அழைக்கப்படும் '143 ஹெலிகாப்டர் யூனிட்'-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. …

  8. இந்தியாவில் இருந்து... டுபாய்க்கு, செல்லும் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கொவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம…

  9. சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா! சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது. அதேநேரம் படைவிலக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்வரும் சனிக்கிழமை இரு நாட்டு உயர் இராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா ரஃபேல் போர் விமானங்களை கிழக்கு எல்லையில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231268

  10. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: “லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பை தடை செய்யலாம்...” - உயர்நீதிமன்றம் கருத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய இந்திய நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உரிமை (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் ஒருவரின் பாலியல் வன்க…

  11. 'இந்திய ரூபாய் சரியவில்லை; டாலர்தான் உயர்கிறது' - நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NSITHARAMANOFFC/TWITTER "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது," என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அலுவல்முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். …

  12. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை! ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். …

  13. கிழக்காசியாவின், மாபெரும் நுழைவு வாயிலாக... அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம் – மோடி கிழக்காசியாவின் மாபெரும் நுழைவு வாயிலாக அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை மக்கள் பாதுகாக்கும் விதமும், அதனை முன்னெடுத்து செல்லும் விதமும் நாட்டிற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்களை தேசம் நினைவு கொள்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைகளை பாதுகாக்க நடந்த போரில் அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரம், ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பற்ற பாரம்…

  14. 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில்? உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார். …

  15. மாநிலங்களுக்கான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் – மோடி மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசே வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக நேற்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது. அத்துடன் மேலும் மூன்று தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 21 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரவே ஏற்றுக்கொள்ளும். இந்த பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரவு செலவு திட்ட…

  16. பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை …

  17. பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்…

  18. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி 13 ஜூன் 2023, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார். சமூக வலைதளமான யூடியூபில் செயல்படும் பிரேக்கிங் பாயின்ட் என்ற தனியார் சேன…

  19. அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ச…

  20. மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல் 27 DEC, 2023 | 12:01 PM புதுடெல்லி: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்இ 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில்இ இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்துஇ கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 21 வரையில்…

  21. தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்! கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  22. 19 AUG, 2023 | 10:50 AM மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆய்வுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு கப்பல் கடந்த 16-ம்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பலில் இருந்த சீன விஞ்ஞானியின் வெய்க்யாங் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்…

  23. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், திரிபுவன் பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார். இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்…

  24. இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 185 views
  25. இந்திய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 03.45 (10:15 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீப் பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர். தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் தீ விபத்துக்கான உறுதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.