Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லாக் டவுனில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம்: நிபந்தனைகளுடன் உள்துறை அமைச்சகம் அனுமதி பிரதிநிதித்துவப் படம். புதுடெல்லி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்…

  2. மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை; அதிர்ச்சி தகவல் மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 16:51 PM மும்பை, நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 61 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தின் மும்பை மாநகரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த…

  3. மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் 3 அன்று திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் …

  4. போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது! சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி வருகின்றது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியத…

  5. Image caption இந்த பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர். சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது. மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு…

  6. இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் வீரர் அடித்துக்கொலை! இந்திய விமானி எனத் தவறாக நினைத்து சொந்த மக்களால் பாகிஸ்தானிய விமானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியர் எனத் தவறாகக் கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானியே இவ்வாறு அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதன்போது குறித்த விமானத்தின் விமானி ஷாஜாஸ் உத்தீன் படுகாயமடைந்திருந்த நிலையில் இருந்துள்…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாம்தேவ் கட்கர் பதவி, பிபிசி மராத்தி 5 மே 2024 ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும…

  8. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார். …

    • 0 replies
    • 556 views
  9. தெலங்கானாவில் கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்துள்ளது. பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் காவல்துறையினரை நாடாத நிலையில் ஒருவர் மட்டும் புகார் செய்திருக்கிறார். அவரிடம் தகவல்களை பெற்ற அம்மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது …

    • 0 replies
    • 332 views
  10. தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர். 70 பயணிகளுடன் தந்தூர் டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நிகழந்துள்ளது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் லொறிரியன் சரளைக் கற்கள் பேருந்து மீது விழுந்து பல பயணிகள் கீழே சிக்கிக் …

  11. பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை FACEBOOK பாலகோட்டில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் கர்னல் ஒப்புக் கொண்டதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. …

  12. AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல் இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…

    • 0 replies
    • 296 views
  13. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லா…

    • 0 replies
    • 461 views
  14. இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் இந்தியா கேட் அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல…

    • 0 replies
    • 196 views
  15. உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த் உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தங்கள் சான்றுகளை குடியரசு தலைவரிடம் அளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பாதிப்பு சூழலில் கொரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங…

  16. இந்தியாவின் வலிமை அதிகரித்து வருகிறது – மோடி இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள நம் மக்களை மீட்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த பணியை விரைவுப்படுத்த நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட…

  17. நேபாளத்தின் இமயமலையில் உள்ள குழந்தைகளின் கதைதான் இந்த 'சில்ட்ரன் ஆஃப் தி ஸ்னோலாண்ட்' ஆவணப்படத்தின் பின்னணி. நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க, குழந்தைகளை தங்களிடம் வைத்திருப்பதா அல்லது அவர்களைத் தங்களிடமிருந்து தூரப்படுத்துவதா என்பதை பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். இவர்களில் சில குழந்தைகள் நான்கு வயதில் காத்மாண்டுவில் உள்ள பாடசாலைக்கு வந்து அதன் பின்னர் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் உள்ளனர். இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழந்தைகளில் சிலர் தங்கள் குடும்பங்களை சந்திக்கப் போகிறார்கள். அவரது பயணம் மிகவும் உற்சாகமானது. நகர வாழ்க்கை ஒரு பக்கம், இமயமலையில் உள்ள கிராம வாழ்க்கை மறுபக்கம். இந்த ஆவணப்படம் உங்களை மிக அழகான இடங்களுக்கு அ…

  18. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பியாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்திகதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார். தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவ…

    • 0 replies
    • 376 views
  19. இந்தியாவில் வேவுபார்த்த குற்றச்சாட்டின கீழ் இலங்கை சேர்ந்த அருண் செல்வராஜனிற்கு இந்திய நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமீம் அன்சாரி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜனிற்கே நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 2012 இல் தஞ்சாவூரை சேர்ந்த தமிம் அன்சாரி இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய சிரேஸ் அதிகாரியான அமீர் சுபைர் சித்திக்கின் உத்தரவில் செயற்பட்ட புலானாய்வாளர்களிற்காக வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் 2014 இல் இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரியின் உத்தரவின் கீழ் சென்னையில் பல முக்கிய இடங்களை வேவுபார்த்த குற்றச்சாட்டின் கீழ…

    • 0 replies
    • 264 views
  20. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் இந்தியா; ஐ.நா. பாராட்டு.! கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை ஏனைய நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜரிக் (Stephane Dujarric de la Rivière) நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு காணொளி தொடர்பாடல் மூலம் பேட்டியளித்தார். இதன்போது, உலக நாடுகளுக்கு மலேரியா மாத்திரையான ஹைட்ரோக்ஸி குளோரோகுயினை இந்தியா அனுப்புவது குறித்து கேட்டனர். இதற்கு அவர் கூறுகையில் “அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி …

  21. உக்ரைன்-ரஷ்ய போர் : பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியர்கள்! கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவ செய்தி தொடர்பாளர், ”இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய இராணுவத்தினர் தயாராக உள்ளன. ரஷ்ய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை …

  22. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்! பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர…

  23. பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவாஸ்தவ் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டு அப்போதைய இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என்று மியான்மர் அரசு கூறுகிறது. இதை நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறியிருந்தார். அவரது அதிகாரபூர்வ பயணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படை தளபதி சோ தெய்ன் டெல்லிக்கு வந்து அட்மிரல் பிரகாஷுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார். 1948இ…

  24. மாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! புதிய ஐனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நேரில் வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) மாலைதீவிற்கு விஐயம் செய்யவுள்ளார். மாலைதீவில் சமீபத்தில் நடைபெற்ற ஐனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். இந்நிலையில் தலைநகர் மாலேவில் இன்று புதிய ஐனாதிபதியின் பதவி ஏற்பு விழா நடைபெறுகின்றது. குறித்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துவதற்காக, இன்று அவர் மாலைதீவு புறப்பட்டு செல்கின்றார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், “மாலத்தீவின் புதிய ஐனாதிபதியாக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது…

  25. அந்தமானில், உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு! அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி அங்குள்ள ராஸ் தீவு இனிமேல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என அறிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தமான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தடுப்புச்சுவர் திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், சுபாஷ் சந்திரபோஸ் நினைவைக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.