Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்! இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப…

  2. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி 6ஆவது முறையாக இந்தியா சாதனை! இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய சாதனையை எட்டியது. அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் திகதி வரை இதேபோல் 5 முறை இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் திகதி ஒரே நாளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இ…

  3. டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…

  4. குரங்கு அம்மை பாதிப்பு கேரள இளைஞருக்கு உறுதியனது - மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய அரசு 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்பு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முதலாவதாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆரம்பத்தி…

  5. கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம் - நரேந்திர மோதி, ஹாரிஸ் ஜெயரஜ் உள்ளிட்டோர் அஞ்சலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறி…

  6. அஸாமில் தொடரும் மழை – இதுவரையில் 110 பேர் உயிரிழப்பு அஸாமில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் இந்த அனர்த்தம் காரணமாக 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அஸாமில் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்…

  7. மிரட்டல்... மற்றும் அச்சுறுத்தலுக்கு, பயப்பட மாட்டோம் – சோனியா காந்தி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நாம் புத்துயிர் பெற வேண்டியது நமக்கு மட்டும் முக்கியம் அல்ல. அது நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கு அவசியம். மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஆளுங்கட்சியும், அதன் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம் செய்து வருகின்றனர். வரலாறு சிதைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நல…

  8. சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர…

  9. சீனாவுக்கு... கடும் எச்சரிக்கை விடுக்கும், இந்தியா! இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என மத்திய அரச விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. https://a…

  10. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை.. இந்தியாவுக்கும் வரலாம்.. ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார …

    • 0 replies
    • 167 views
  11. உலகின் மிகப்பெரிய.. 12 கிலோ, தங்க நாணயத்தை... தேடும் பணியில் மத்திய அரசு 12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் சுவிஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர் சல்மா கூறியுள்ளார். https://athavannews.com/2022/1288806

  12. ஆந்திராவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேரை காணாமல் போயுள்ளனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி, சித்தூர் , கடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வீதியில் வெள்ளம் தேங்கியதில் பேருந்துகள், சரக்கு வான்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் …

  13. ஹிஜாப் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் நுழையும் அல்கொய்தா! கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொலியில், “ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொலிகளை பார்த்தேன். அவரது துணிவு குறித்து அறிந்து கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மாணவியின் தந்தை அல்கொய்தாவோடு தங்களு…

  14. தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி October 5, 2025 10:14 am தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அவர் மத்திய வெளியுறவ…

  15. பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான எம். கி.எம் கட்சி திரும்பப்பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு அல்லாமல் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் எம். கி.எம் கட்சி உடன்படிக்கையையும் செய்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. 343 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 172 உறுப்பினர…

  16. கடவுசீட்டு மோசடி ; இலங்கையர்கள் ஐவர் பெங்களூரில் கைது 11 NOV, 2022 | 04:24 PM போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐவர் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டிற்காக 50,000 முதல் 150,000 வரை செலுத்த தயாராகயிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வி எஸ் ரவிகுமார், மணிவேலு, சிஜூ, நிரோசா மற்றும் விசால் நாரணயணன் என்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூர் மற்றும் மங்களுரை சேர்ந்த இருவரே போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரி…

  17. ஹொங்கொங்கிற்கான.. ஏயார் இந்தியா, விமான சேவை இரத்து! ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான ஏர் இந்தியா விமான சேவை இரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று வருகிற 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் ஏயார் இந்தியா விமான சேவையும் இரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. https://athavannews.com/2022/1277068

  18. இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது! பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய தலைவரான நம்பலா கேஷவ ராவ் என்கிற பசவராஜு உட்பட 27 கிளர்ச்சியாளர்களை இந்திய கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து, இந்த இயக்கம் நாட்டின்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த…

  20. ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்! ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் (Dausa) 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கும் மேலான அதிகாரிகளின் தொடர்ச்சியான மீட்பு பணிகளின் பின்னர், கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஆர்யன் என்ற சிறுவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலிகாட் கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். மீட்புப் பணி ஒரு மண…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம்…

  22. பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917

  23. ’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது? துஷார் குல்கர்னி பிபிசி மராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பாபு ஹர்தாஸ் கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது. மகாராஷ்டிராவில் அம்பேத்கர் இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அம்பேத்கருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கி…

  24. உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது! உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்துள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைடுத்து உக்ரைன் அரசாங்கம் தனது வான் எல்லைகளை மூடியுள்ளது. இதன்காரணமாக அயல் நாடுகள் வழியாக உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதி மார்க்கமாக உக்ரைன் – ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா …

  25. உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/126312…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.