அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
ஹொங்கொங்கிற்கான.. ஏயார் இந்தியா, விமான சேவை இரத்து! ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான ஏர் இந்தியா விமான சேவை இரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று வருகிற 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் ஏயார் இந்தியா விமான சேவையும் இரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. https://athavannews.com/2022/1277068
-
- 0 replies
- 165 views
-
-
15 நவம்பர் 2025, 04:21 GMT பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். பாகிஸ்தான் ராணுவ தளபதியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு புதிய அதிகாரம் கொடுத்தும், கைது மற்றும் வழக்குகளிலிருந்து வாழ்நாள் விலக்கு அளித்தும் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். வியாழக்கிழமை சட்டமாக ஆக்கப்பட்ட 27-வது அரசியலமைப்பு திருத்தம், நாட்டின் உயரிய நீதிமன்றங்கள் செயல்படும் முறையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது ஆயுதப் படைகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும், நீதி…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
எர்ணாகுளம்: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ். சுனில் எனும் 'புல்சர் சுனில்'. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவ…
-
- 1 reply
- 164 views
-
-
பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917
-
- 0 replies
- 164 views
-
-
உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது! உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்துள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைடுத்து உக்ரைன் அரசாங்கம் தனது வான் எல்லைகளை மூடியுள்ளது. இதன்காரணமாக அயல் நாடுகள் வழியாக உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதி மார்க்கமாக உக்ரைன் – ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா …
-
- 0 replies
- 164 views
-
-
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/126312…
-
- 0 replies
- 164 views
-
-
ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்! இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். அத்துடன் 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81…
-
- 0 replies
- 164 views
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2023 | 02:05 PM அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 50…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்த படை தளபதிகளுக்கு அனுமதி! லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த விதிகளில் இந்திய இராணுவம் மாற்றம் செய்துள்ளது. இதன்படி அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ரா…
-
- 0 replies
- 164 views
-
-
மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PARTH CHAUHAN/BBC படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார். மேற்கு மகாராஷ்டிராவ…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
இராணுவ செலவீனங்கள் : உலகளவில்... மூன்றாவது இடத்தில், இந்தியா! இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றா…
-
- 0 replies
- 163 views
-
-
உலகில்... மிகவும் காற்று மாசடைந்த, 100 நகரங்களில்... 63 நகரங்கள், இந்தியாவை சேர்ந்தவை! உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி நகர் முதலிடத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகர் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நான்காவது இடத்தில் டெல்லி இடம்பெற்றுள்ளது. மிகவும் காற்று மாசடைந்த 63 இந்திய நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம் மற்றும் அரியானாவில் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள…
-
- 0 replies
- 163 views
-
-
84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல்! இந்திய ஆயுதப் படைகளின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் சபை நேற்று (வியாழக்கிழமை) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்துக்கு 6, விமானப் படைக்கு 6, கடற்படைக்கு 10, கடலோர காவல் படைக்கு 2 என மொத்தம் 24 முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தரைப்படைக்கான அதிநவீன போர் வாகனங்கள், இலகு ரக கவச வாகனங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், பல்நோக்கு வாகனங்க…
-
- 0 replies
- 163 views
-
-
கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், காந்தி, சீனா - அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விக்கு மோதி பதில் என்ன? பட மூலாதாரம்,ANI 17 மார்ச் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரீட்மேனின் யூடியூப் சேனலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த மூன்று மணி நேர 17 நிமிட பாட்காஸ்டில், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து ராஷ்ட்ரா, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோதி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார். தவிர, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? ஜெனி ஃப்ரீடா A health worker takes a nasal swab sample ( AP Photo/Aijaz Rahi ) வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்…
-
- 0 replies
- 163 views
-
-
இந்தியா... ஆயுத உற்பத்தியில், தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – நரவனே இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் . அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1271079 ################## …
-
- 0 replies
- 163 views
-
-
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே! “நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக” மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என …
-
- 1 reply
- 163 views
-
-
பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் இந்தியாவில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகொப்டர் விழுந்தது நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகொ…
-
- 0 replies
- 163 views
-
-
மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷ…
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு! ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் எழுந்து, வேகமாகப் பரவி, எரிபொருள் தொட்டி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 2 replies
- 163 views
- 1 follower
-
-
கர்கோன் வன்முறை: மாற்றுத்திறனாளி வாசிமின் கேள்வி- 'நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?' ஷூரையா நியாஸி பிபிசி ஹிந்திக்காக, போபாலில் இருந்து.. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER@SALMANNIZAMI_ படக்குறிப்பு, வாசிம் ரிஸ்வியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடந்த வன்முறைக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் கடைகளை இடித்தது. யாருடைய வீடு, கடைகள் இடிக்கப்பட்டதோ அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959
-
- 0 replies
- 162 views
-
-
16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்…
-
- 0 replies
- 161 views
-