Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது: பா.ஜ.க. அமைச்சர் உறுதி! அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறைஅமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் மதநம்பிக்கைக்கு மையப்புள்ளியாக இருக்கும் ஸ்ரீராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரம் நீர்த்துகொண்டே போகின்றது. தங்கள் நம்பிக்கையை இழந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து விட்டார்கள். ஆனால், …

  2. பாகிஸ்தான் உளவாளிக்கு இராணுவ இரகசியங்களை விற்ற இந்திய வீரர் கைது! இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேன்புரா கிராமத்தை சேர்ந்த ஷேக் ரியாசுதீன் என்ற இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் இவரது நடத்தையில் சில மாதங்களாக ஏற்பட்ட மாறுதல்களை அவதானித்த எல்லைப் பாதுகாப்பு உளவுப்படை அதிகாரிகள் ரியாசுதீனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். …

  3. முதல் வழக்கு.. மகன் பட்டாசு வெடித்ததற்கு தந்தை மீது வழக்கு போட்டது டெல்லி போலீஸ்!சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் நபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகன் வெடித்த பட்டாசுக்கு அவனது தந்தை மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது. அதன்படி தீபாவளி நேரத்தில் 2 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.இந்த 2 மணி நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்…

  4. சபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு.. November 3, 2018 சபரிமலையில் நாளை மறுநாளம் 5ம் திகதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் தடுத்து நிறுத்தியமையினால் ஐயப்ப பக்தர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி …

  5. மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 155 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ண…

    • 0 replies
    • 229 views
  6. 13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை! 13 பேரை கடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலியை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். மராட்டிய மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக கூறப்பட்டது. யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்திய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இணைளத்தளம் மூலம் கோரிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, அவ்னி புலியைக் கண்டதும் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தினர். எனினும், அவ்னி புலியை கண்டுபிடிக்…

  7. பாகிஸ்தானில் தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு கொலை November 3, 2018 1 Min Read பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில், தலிபான்களின் தந்தை என அழைக்கப்பட்ட மதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மௌலானா சமி அல்-ஹக் எனப்படும் மதகுருவே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை. மௌலானா சமி அல்-ஹக் தலைவராக இருந்த வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பாடசாலையில்தான் தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உள்பட…

  8. பாகிஸ்தானில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறை : October 31, 2018 1 Min Read பாகிஸ்தானில் பாடசாலையில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று தொடர்பில் பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்த அத்தாவுல்லா மார்வத் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வழக்…

  9. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறைத்தண்டனை இரத்து! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டின் சிறைத்தண்டனையை இரத்துச் செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுகடந்து இலங்கையில் வாழும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுச் சிறைத்தண்டனையே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த முஹம்மது நஷீட், பின்னர் ஆட்சியை பிடித்த அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் அரசாங்கத்தால் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முறையான வகையில்…

  10. இலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்: இந்திய வெளியுறவுத்துறை இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரதமர் பதவி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து இந்திய அரசு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் ரவீஷ்குமார் தெரிவிக்கையில், ”இலங்கை நெருங்கிய அயல்நாடு என்ற வகையில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கை மக்…

  11. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறுவிதமாக பதிலடி : இந்திய இராணுவ தளபதி October 28, 2018 இந்தியாவின் காஷ்மீர் மாநிலாத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமாக பதிலடி மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் ஆயுததாரிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் ப உயிர் இழந்திருந்தார். . இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார…

  12. இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. பேசவில்லை அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய …

  13. இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தடை! இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பாகிஸ்தானிலுள்ள உள்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது தொடர்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழைக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி சகிப் நிசார், இந்தியாவின் அலைவரிசைகளுக்கு தடை விதித்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்திய-திரைப்படங்களை-…

  14. சிறிசேனாவை கொல்ல திட்டம்.. ராவின் பிளானை விசாரிக்கும் ஹவாய் போன் நிறுவனம்.. பின்னணி என்ன ? கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய நடந்த திட்டம் குறித்து சீனாவின் ஹவாய் போன் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தகவல் அளித்தவர் இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தவர் நமல் குமாரா என்ற நபர்தான். நமல் குமாரா அதிபர் சிற…

  15. சபரிமலை விவகாரம் – கைது நடவடிக்கை- கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : October 27, 2018 1 Min Read சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர…

  16. உயர்நீதிமன்ற உத்தரவினையடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை October 25, 2018 ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் இவற்றுக்கு தடைகள் எதுவும் இல்லை என்கின்ற நிலையில்; ஆபாச தளங்களை முடக்குமாறு கோரி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.கடந்த மாதம் 27ம் திகதி குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மத்திய இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்க…

  17. போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது! சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி வருகின்றது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியத…

  18. கேரளாவில் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது October 26, 2018 1 Min Read சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருந்ததுடன் அவர்…

  19. பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள்: பரிந்துரைகளை ஆராய புதிய குழு நியமனம்! பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்களை களைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்க, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவொன்று அமையப்பெறவுள்ளது என்னும் தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த குழுவில் பெண் அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோருடன், மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்ஹரி இடம்பிடித்துள்ளார். முக்கிய அமைச்சர்களை உள்ளடக்கிய இக்குழு, ஏற்கனவே உள்ள பணியிடங்களில் பெண்களுக்கான ப…

  20. ரபேல் ஊழல் தொடர்பில் கேள்வி எழுப்பியதால் சி.பி.ஐ. இயக்குநர் மாற்றப்பட்டார் – மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு ரபேல் போர் விமான ஊழல் குறித்து சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா கேள்வி எழுப்பியதால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரை நீக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஜலாவர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ”ப…

  21. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது OCT 22, 2018by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாடும் உறுதி செய்ய முடியாது என்றும், அதில் தாமும் பெரிய பங்கை வகிக்க விரும்புவதாகவும், சீனக் கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஆரம்பமாகிய – சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘காலி கலந்துரையாடல்-2018’ இல், உரையாற்றிய சீன கடற்படை கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதி றியர் அட்மிரல் ஹன் ஷியாவோஹூ இதனைத் தெரிவித்தார். ”இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை மிகவும் சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இந்த நிலைமையை எந்தவொரு தனி நாடும் கையாளவோ, நிரந்தரமான பாதுகாப்பை உறுதி செய்யவோ முட…

  22. இந்தியாவில் இனிமேல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. பட்டாசு மற்றும் தீபாவளி அன்று உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களால் நாடு முழுவதும் காற்று மாசுபடுவதாகவும் மக்களுக்கு இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டுமென பொதுநல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ…

  23. பஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள் By nadunadapu - October 19, 2018 பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது. தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுக…

  24. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் – இம்ரான் கான் மீண்டும் அழைப்பு! காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உள்ளூர் மக்கள் 6 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், ”இந்திய ஆக்கிரமிப்பு…

  25. October 22, 2018 பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகினி;ற நிலையில் அண்மையில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.