Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் எழுதியவர், ஷுப்ஜோதி கோஷ் பதவி, பிபிசி செய்திகள் வங்காள சேவை, டெல்லி 14 ஆகஸ்ட் 2024, 02:43 GMT சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோதி முதல்முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றபோது அவர் பல அண்டை நாடுகளின் அரசு அல்லது நாட்டின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பதவியேற்ற …

  2. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை! ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரியைப் படுகொலை செய்த 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாகத் தேடிவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1395697

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செபி தலைவர் மதாபி புச் (கோப்புப்படம்) 49 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பெர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர்…

  4. 11 AUG, 2024 | 01:08 PM இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நட்வர் சிங் நேற்று (ஆக.10) சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95. முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "ஸ்ரீ நட்வர் சிங்கின்…

  5. ”ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ” – ட்ரெண்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி. இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார். அதன்படி, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவரது எக்ஸ் தளத்தில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனும் பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதன் தொடக்கமான எனது எக்ஸ் தளத்தின் முகப்பில் தேசியக்கொடியை வைத்துள்ளேன். நீங்களும் அவ்வாறு செய்வதொடு தேசியக் கொடியு…

  6. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத நட்ட நடு வயலில் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர்! நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக சாலைகளை கட்ட முடியாமல் போய்விட்டது. போனால் போகட்டும் என்று கிடைத்த கொஞ்ச நிலத்தில் ஒரு பாலத்தை கட்டி விட்டனர் அம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ..........🫣. https://minnambalam.com/india-news/35-ft-bridge-built-in-open-field-in-araria-bihar-without-road-access-dm-seeks-report/

  7. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:11 AM பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார்,யூனுஸ் தற்போது ஆறு மாத பிணையில் விடுதலையாகியுள்ளார். ஹசீனாவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் யூனுசின் பெயரை முன்மொழிந்திருந்தனர். …

  8. ‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் பட மூலாதாரம்,SHARIER MIM படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல் பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத். போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழ…

  9. வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரச…

  10. படக்குறிப்பு,போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆத…

  11. தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி! கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்க…

  12. படக்குறிப்பு,விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீட்பு குழுவினர் 24 ஜூலை 2024, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர். …

  13. ராஜிவ் நோக்கி வந்த 3 தோட்டாக்கள், இந்திரா மீது வீசப்பட்ட கற்கள், காத்திருந்த மோதி - பிரதமர்களை பாதுகாப்பது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 25 ஜூலை 2024, 02:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். எந்தவொரு பாதுகாப்பு கட்டமைப்பும், தாக்குபவர்கள் ஊடுருவும் வரை முற்றிலும் உஷார் நிலையில் இருப்பதாகத் தோன்றும். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப…

  14. அம்பானி வீட்டு கல்யாண செலவு மட்டுமல்ல பரிசுகளும் கோடியில் தான் கிடைத்துள்ளது! ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இவர்களது திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும், முக்கிய பிரபலங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தனர். திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சார்பாக விலையுயர்ந்த கார், நூறு கோடி ரூபாய் வைரம் மற்றும் முத்துக்கள் அடங்கிய நகைகள் பரிசளிக்கப்பட்டது. அத்தோடு, Palm Jumeir…

  15. ஐபோன் உற்பத்தி, ஆண் - பெண் பருமன்: தமிழ்நாடு பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2024 இந்தியாவின் நிதி நிலை அறிக்கைக்கு முன்னாட்டமாகக் கருதப்படும் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கை நாளை (23.07.2024) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளி…

  16. நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு! தமிழகத்தைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்துள்ளது. மாநில அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் அளித்துள்ளார். இதேவேளை நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, “தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார். அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டு…

  17. 22 JUL, 2024 | 10:45 PM மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விப…

  18. இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில…

  19. பட மூலாதாரம்,ANI 12 ஜூலை 2024 இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தும் என பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தெரிவித்தார். ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோதி இக்கருத்தை தெரிவித்துள்ளார். “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது” என காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது. …

  20. உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது , அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அம…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES AND SOCIAL MEDIA 11 ஜூலை 2024 "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்." பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிட…

  22. 10 JUL, 2024 | 11:31 AM புதுடெல்லி: சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக போலீஸார் இது தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் அமித் கோயல் கூறும்போது, “சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மூளையாக செயல்பட்டுள்ளார். உடல் உறுப்பு தான…

  23. மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது! பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இன்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும், அதன் பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாகவும், ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://at…

  24. 08 JUL, 2024 | 11:14 AM மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 😎 காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில்…

  25. உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.