அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை... தொடர்ந்து, கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்பதற்காக சி-17 என்ற விமானம் காபூலில் தரையிறங்கியுள்ளது. 500 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவ்வவ்போது அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங…
-
- 0 replies
- 215 views
-
-
ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படையினரின் தாக்குதலில் திருமண இல்லத்திலிருந்த 40 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் அரச படைகள் உள்ளிட்ட கூட்டுப்படையினர் பயங்கரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் திருமண இல்லத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் நேற்று (திங்கட்கிழமை) செய்தி வௌியிட்டிருந்தன ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மையில் மேலோங்கியுள்ள நிலையில், தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. அதேவ…
-
- 0 replies
- 261 views
-
-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- அரச படையினரிடையே உக்கிர மோதல்! ஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 இராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 5 இராணுவ அதிகாரிகள் உட்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், இராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே தலிபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நடந்த மோதலில் தலிபான் குழுக்களை…
-
- 0 replies
- 172 views
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்த…
-
- 0 replies
- 242 views
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை! ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். …
-
- 0 replies
- 181 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை வழங்கியது இந்தியா ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் நான்கு ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியிருந்தது. அத்துடன், அவற்றுக்கு மாற்றாக நான்கு அதிநவீன எம்ஐ-24 ரக அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை பரிசாக வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இந்தநிலையில் இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகொப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய எஞ்சியுள்ள இரண்டு அதிநவீன ஹெலிகொப்டர்களை இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் இராணுவத்திடம் வழங்கியுள்ளார். http://athavannews…
-
- 0 replies
- 216 views
-
-
ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரச அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந…
-
- 0 replies
- 187 views
-
-
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீ…
-
- 0 replies
- 51 views
-
-
ஆப்கான் விவகாரம் குறித்து, ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு! ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அங்குள்ள கள நிலைவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா -ஜெர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி…
-
- 0 replies
- 218 views
-
-
ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா! பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பிரான்சின் முதன்மை ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையின்படி, போர் விமானங்களின் விற்பனை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு இராணுவ போர் விமானத்தை வாங்குவதை நாடுகளை நிறுத்த வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஃபேல் ஜெட் விமானங்களின் விற்பனை மற்றும் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டை வழிநடத்த சீன…
-
- 0 replies
- 87 views
-
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (07) அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது தளங்களை எல்லை தாண்டிய நடவடிக்கை குறிவைத்தது. இந்திய மூத்த அதிகாரிகளின் கூற்றுப்…
-
-
- 13 replies
- 739 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
ஆயுத உற்பத்தியில்... தன்னிறைவை, நோக்கி நகரும் இந்தியா! ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வது 47 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம் உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் இறக்குமதி 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் 69 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1272036
-
- 0 replies
- 214 views
-
-
ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி by : Dhackshala சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு …
-
- 1 reply
- 356 views
-
-
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல்- இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பயிற்சி பெறவும், அறுவை சிகிச்சை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது அறுவை, காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம், முட நீக்கியல், பல்மருத்துவம் ஆகியன சார்ந்த அறுவைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அரசின் அறிவிப்பு அதைச் சட்டப்படி ஏற்பதற்கானது என்றும் நாட்டு மருத்துவ மத்தியக் குழுத் தலைவர் தெ…
-
- 0 replies
- 263 views
-
-
``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம் சிந்து ஆர்ரா.ராம்குமார் பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன் ( படம்: விகடன் / ரா.ராம்குமார் ) திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் மிகவும் வயது குறைந்த மேயர், சி.பி.எம் கட்சியின் சாதாரண தொண்டனின் மகள் எனப் பல பெருமைகளோடு மதிப்புமிக்க மேய…
-
- 0 replies
- 505 views
-
-
ஆற்றில் மிதக்கும் சாமி சிலைகள் இந்தியாவின் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றிருந்த போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர். ஆற்றில் கிடைக்கப்பெற்ற விஷ்ணு , சிவலிங்கம் , மற்றும் இரண்டு நந்தி சிலைகள் என்பவற்றை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல , சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதையின் கற்சிலை குவியல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு சென்ற தொல்லியல் நிபுணர்கள் 50ற்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகளை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவை , எந்த நூற்றாணடை சேர்ந்தவை என்ற ஆய்வினை நடத்தி வருகின்றனர். ஆற்று வெள்ளத்தில் ச…
-
- 0 replies
- 326 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்கடல் சுரங்கம் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் , பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இ…
-
- 0 replies
- 931 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெர…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம் உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே இவ்வாறு ஆழ்துளை்க கிணற்றில் விழுந்துள்ளார். கோதுமை வயலுக்கு இன்று (புதன்கிழமை) குடும்பமாகச் சென்றிருந்த நிலையில், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆழ்துளைக் கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத…
-
- 0 replies
- 201 views
-
-
ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த குழந்தை 36 மணிநேரத்தின் பின்னர் உயிருடன் மீட்பு! ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றிற்குள் வீழ்ந்து இருநாட்களாக தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றிற்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்பு படையினர் மீட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் பராமரிப்பின்றிக் காணப்பட்ட ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது. குறித்த பகுதியில் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகாமையில் புத…
-
- 2 replies
- 726 views
-
-
ஆவண சரிபார்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு! மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி அமல்படுத்தப்பட்டஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அதைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் நிா்மலா சீதாராம…
-
- 0 replies
- 383 views
-
-
ஆஸி. பிரதமருடன் மோடி இன்று பேச்சு: தமிழக சிலைகளை ஒப்படைக்க வாய்ப்பு புதுடெல்லி கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் சோக்ட் மோரிஸன்இந்திய பயணம் மேற்கொள்ள இருந்தார். கரோனா வைரஸ் பரவலால் அவரது வருகை ரத்தானது. இதையடுத்து, மோரிஸன் - பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, மரியாதை நிமித்தமாக இந்தியாவில் திருடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள பழங்கால சிலைகளை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் வெளிர் சிகப்பு நிற மணற்கல்லால் ஆன நாகராஜா சிலையும் உள்ளது. இது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை 6 முதல் 8-ம் நூற்றாண்டு வரை ஆண்ட பிரத்திஹாரா வம்சத்தை சேர்ந்ததாகக…
-
- 0 replies
- 235 views
-
-
இ-ரூபாய் இந்தியாவில் விரைவில் அறிமுகம் - டிஜிட்டல் கரன்சியை எப்படி பயன்படுத்துவது? தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி யை அறிமுகப்படுத்தவுள்ளது. இ-ரூபாய் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நடப்பு நிதியாண்டிற்கான (2022-23) பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் மின்னணு ரூபாய் அதாவது CBDC ( சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் நாணயம்) அறிமுகப்படுத்தப்படும் என்று வெள்ளியன்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மி…
-
- 0 replies
- 215 views
-