அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
கனிமொழி ஆவேசம்: குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? இதுதான் ஜனநாயகமா? என தெரியவில்லை என்றும் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 170 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் க்ரிகரி பதவி, பிபிசி செய்திகள் 12 டிசம்பர் 2023 பிபிசி தனது இந்தியச் சேவைகளை மறுசீரமைப்பு செய்கிறது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு இணங்கும் வகையில் பிபிசியின் இந்த மறுசீரமைப்பு அமையும். இதன்படி, பிபிசியின் நான்கு ஊழியர்கள் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, பிபிசியின் ஆறு இந்திய மொழிச் சேவைகளைக் கொண்ட, ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்ற இந்திய நிறுவனத்தை உருவாக்குவார்கள். பிபிசி இந்தியாவின் ஆங்கில மொழிச் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகள் பிபிசியிடமே இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் இருக்கும் பிபிச…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 10 டிசம்பர் 2023 இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு கூறியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில் (Indian Ocean Region Forum) மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தில் சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. …
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
மோடி வென்ற கதை! Dec 03, 2023 18:49PM IST ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கினர், இந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்காளர்கள். ஆகவே, ஐந்து மாநில தேர்தல் என்பது ஒரு மினி ந…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
29 NOV, 2023 | 03:11 PM புது டெல்லி: சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. தத்தம் மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன. கர்நாடகாவில், பருவகால புளூ (seasonal flu) வைரஸின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், "பருவகால காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயாகும். இது பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியை மணந்ததால் தலைகீழாக மாறிய விகே பாண்டியன் வாழ்க்கை.. புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணந்த தமிழனான விகே பாண்டியனை ஒடிசா அரசியலுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் எப்படி தேர்வு செய்தார் என்தை பார்ப்போம். அக்டோபர் மாதம் ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற விகே பண்டியன், திருகார்த்திகை நன்னாளில், நேரடியாக ஒடிசா முதல்வரின் வீட்டிற்கு சென்று, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "ஜெய் ஜகநாத்" என்று முழக்கமிட்டு, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் எனப்படும் விகே பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதி…
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிபுணர்கள் தரப்பு பீதி சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. @getty இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட…
-
- 0 replies
- 130 views
-
-
எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுடன் மாலைதீவின் வெளியுறவுக் கொள்கையை ஈடுபடுத்த விருப்பம் இல்லை என்றும் புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொள்ள மாலைதீவு மிகவும் சிறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலைதீவு ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1359020
-
- 2 replies
- 218 views
- 1 follower
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச…
-
- 0 replies
- 210 views
-
-
19 NOV, 2023 | 10:48 AM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டிக்கும் வகையிலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் காசர்கோடு ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் ஏற்பாட்டில் காசர்கோட்டில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய காசர்கோடு காங்கிரஸ் எம்பியும், நட…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? KaviNov 17, 2023 12:02PM ஐந்து மாநில தேர்தல் அனல் பறக்கும் நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் பரப்பளவில் பெரிய மாநிலம், மத்திய பிரதேசம்தான். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் அதிக தொகுதிகளை (230) கொண்ட மாநிலமும் இதுதான். இன்று (நவம்பர் 17) மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான். இவர் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இன்று வரை முதல்வராக நீடிக்கிறார். அதாவது 18 ஆண்டு காலமாக முதல்வர் (இடையில் ஒரு 15 மாத இடைவெளி மட்டும்) பாரதிய ஜனதாவின் வரலாற்றில் மிக நீண்ட கால முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்தான். முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், இந்தமுறையு…
-
- 0 replies
- 301 views
-
-
படக்குறிப்பு, மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102. என். சங்கரய்யா 102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமையன்று ச…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,INDIAN EMBASSY IN ISRAEL படக்குறிப்பு, அல் அக்ஸா மசூதிக்கு வெளியே பணியில் இந்திய வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் லயால்பூரின் பால் சிங், பாட்டியாலாவை சேர்ந்த ஆஷா சிங், அஜ்னாலாவை சேர்ந்த மகர் சிங், குவாலியர் படையை சேர்ந்த சீதாராம் மற்றும் காஜியாபாதை சேர்ந்த பஷீர் கான் ஆகியோரின் கல்லறைகள் அல்லது நினைவு சின்னங்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் ஜெருசலேமின் கல்லறைத் தோட்டத்தில் காணப்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாவது உலக போர்களின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் பங்கு வகித்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் பாலத்தீனம் மற்றும் மத்திய க…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SHUBHAM VERMA/BBC படக்குறிப்பு, அயோத்தியின் ராமர் பாதை அமைக்கப்படும் பகுதியில் பத்ர் மசூதி அமைந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஆனந்த் ஜானானென் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வளாகத்திற்கு அருகில் 'பத்ர் மஸ்ஜித்' என்ற சிறிய மசூதி உள்ளது. அரசு நிலப் பதிவேடுகளில் அதன் மனை எண் 609 ஆகும். ராமர் பாதை அமைப்பதற்காக இந்த மசூதியின் சில பகுதியை அரசு ஏற்கனவே சட்டப்பூர்வமாக கையகப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது இந்த மசூதியை அகற்றி வேறிடத்திற்கு மாற்றுவதற்கான உடன்படிக்கை மேற்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்…
-
- 6 replies
- 926 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 13 NOV, 2023 | 03:58 PM காலநிலை மாற்றம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐ.நா சபை இன்று (13) தெரிவித்துள்ளது. அதன்படி, உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 11:50 AM 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேது நடைபெற்றது. அதேபோல மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நவம்பர் 7அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 70தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய பி…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
07 NOV, 2023 | 11:14 AM காஷ்மீரில்பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 14 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 5000 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 740 பேர் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். வழக்கு விசாரணையின்போது சில தீவிரவாதிகள் பிணையில் விடுதலையாகின்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்ப…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RSS(RASHTRIYA SAMACHAR SAMITI/NEWS AGENCY) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியவில் உள்ள மாநிலங்களிலும் உணரப்பட்டது. பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள க…
-
- 4 replies
- 566 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதை விருந்துகளில் போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாக யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி,ㅤ 5 நவம்பர் 2023 போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாம்பு விஷத்தை வினியோகித்ததாக யூடியூபரான எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, எல்விஸ் மற்றும் அவருடன் சேர்த்து ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம் கொடுத்ததற்காக இந்த முதல் தகவல் அறிக…
-
- 1 reply
- 532 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 26, 1971. மேகாலயாவின் துராவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் 83-வது படையணியின் தலைமையகத்தில் அதிகாலை 2 மணியளவில், எல்லை பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட் வீரேந்திர குமார் கவுரை தொலைபேசியின் அழைப்பு மணி எழுப்பியது. கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் தஞ்சம் கோரி வருவதாக மங்காச்சார் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். "எல்லை பாதுகாப்புப் படைக்கு இதுபோன்ற முடிவை எடுக்க உரிமை இல்லை என்பதால் என்னால் இதை அனுமதிக்க முடியாது. இதுபோ…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிபி நிருபர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரின் பார்வையும் அதன் மீதே உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அ…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
01 NOV, 2023 | 11:55 AM டெல்லி: மணிப்பூரில் மோரே நகரில் பொலிஸார் மீது ஆயுதமேந்திய குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு பொலிஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் குக்கி மற்றும் மைதேயி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம் இன்னும் நீடித்துவருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரின் முர்ரே நகரில் தமிழர்கள் பெரும்பான்மையான அளவு வசிக்கின்றனர். அங்கு புதிதாக ஹெலிபேட் அமைக்க மாநில அ…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
கேரளாவில் குண்டு வெடிப்பு- 40 இற்கும் மேற்பட்டோருக்கு காயம். இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள மூன்று இடங்களை இலக்கு வைத்து குறித்த குண்டு தாக்குதல்; நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த தாக்குதலுக்கு இதுவரையி;ல் எந்த அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேரளா பொலிஸார் முன்னெடுத்து;ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356145
-
- 9 replies
- 571 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீனிவாஸ் லக்கோஜு பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் ஸ்ரீனிவாஸ் லக்கோஜு தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்: இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நானே அங்கு 11 சடலங்களை பார்த்தேன். நசுங்கிய பெட்டிகளில் ஒருவர் காணப்படுவதாகவும், அந்த நபரும் …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FATHIMATH KHADHEEJA/TWITTER படக்குறிப்பு, மாலத்தீவில் நடந்த 'இந்தியாவே வெளியேறு' பேரணியில் சிவப்பு சட்டை அணிந்து ஏராளமானோர் பங்கேற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா பதவி, பிபிசி செய்தியாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்த சீனாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இந்தியா…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-