அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
'ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு' - CUET நுழைவுத் தேர்வு விவாதம் ஆவதன் பின்னணி என்ன? மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என இந்திய கல்வித் துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. அதுவே இப்போது விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. இந்திய கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்பட மாநில கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் கீழ் வரும் பல்கல…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்தியதா இந்தியா? உண்மை நிலவரம் என்ன? தில்நவாஸ் பாஷா பிபிசி நிருபர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. சமீபத்திய ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியா பிரிட்டனை முந்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் இதனை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் பொரு…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் - முழு விவரம் ஜுகல் ஆர் புரோஹித் பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து 31 ஆகஸ்ட் 2022 படக்குறிப்பு, விக்ராந்த் கடற்படை கப்பல் "இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?" - கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன" என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார். இந்திய கடற்படை சேவைக…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது. சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
உக்ரைன்- ரஷ்யா போரில்... இந்தியாவின் நிலைப்பாடு, கண்காணிக்கப் பட்டது. இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து சுமார் 80 கோடி பேருக்கு இந்தியா உணவளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்பினாலும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சமரசம் செய்ய முடியாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித…
-
- 0 replies
- 178 views
-
-
செர்வாவேக்: இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு மருந்து - ரூ.400க்குள் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BSIP/GETTY IMAGES படக்குறிப்பு, முக்கோணமிடப்பட்டுள்ள பகுதிதான் கருப்பை வாய். அதன் அடிப்பகுதியில்தான் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படும். செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான 'செர்வாவேக்' ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
சோனியா காந்தியின் தாயார் காலமானார் By RAJEEBAN 01 SEP, 2022 | 12:23 PM புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இந்நிலையில், சோனியா காந்தியின…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பாஜக பிரமுகர் மீது புகார்: "சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய வைத்து பணிப்பெண்ணை சித்ரவதை செய்தார்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/@AMBEDKARITEIND (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (01/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு ஆண்டுகளாக சித்ரவதை செய்துவந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக பிரமுகரை அந்தக் கட்சி இடைநீக்கம் செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செ…
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற புதிய திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உர நிறுவனங்களின் பெயர்களுக்கு பதிலாக, எல்லா நிறுவனங்களும் உர மூட்டைகளை 'பாரத்' என்ற பெயரில்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு உர நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான விவசாயிகளும் இந்த திட்டத்தால் தங்களுக்கு பயனில்லை என்கிறார்கள். ஒரே நாடு ஒரே…
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
உத்தர பிரதேசம் - "என் மகளை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தனர், பிறகு கொன்றனர்" ஷபாஸ் அன்வர் பிபிசி ஹிந்திக்காக சம்பலில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "என் மகளை அவர்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். நானும் எனது மகளும் நீதிக்காக பெரிய மற்றும் சிறிய அதிகாரிகள் என எல்லோரையும் பார்த்தோம். முதலமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை." உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த தனது 16 வயது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து விவரிக்கும் ஒரு தாயின் வரிகள் இவை. "ஆகஸ்ட் 24ஆம் தேதி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில்... தேசிய அவசரநிலை பிரகடனம்: பேரழிவு தரும் வெள்ளத்தில், ஏறக்குறைய 1,000பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிட்டத்தட்ட 1,000பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்குமிடமின்றி உள்ளனர். இந்த கன மழையைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளத்தை ‘தேசிய அவசரநிலை’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜூன் நடுப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 937 பேர் இறந்துள்ளனர். இதில் 343 குழந்தைகள் உள்ளனர். தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இது 2010ஆம் ஆண்டு பேரழிவுகரமான வெள்ளத்தின் நினைவை மீண்டும் கொண…
-
- 2 replies
- 263 views
- 1 follower
-
-
அமித்ஷா: வீட்டில் தாய்மொழியிலேயே பேசுமாறு அறிவுறுத்திய உள்துறை அமைச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(29/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) "மாணவர்களும் இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆனால், உங்கள் தாய்மொழியை பாதுகாத்திடுங்கள். வீட்டில் தாய்மொழியிலேயே பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழ…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை By RAJEEBAN 28 AUG, 2022 | 11:26 AM புதுடெல்லி: இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் நிலவுகிறது. எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி வாகனங்களை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 40 முதல் 50 டன் எடை உள்ளன. சில பீரங்கி வாகனங்கள் கைலாஷ் மலைப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பீரங்கி வாகனங்கள் குறிப்பாக சமவெளிப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் போர் நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப் பட்டவை. உயரமான மலைப் பகுதிகள…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
குஜராத் கலவர வழக்குகளின் சாட்சிகள் நிலை என்ன? "எங்களுக்கு பயமாக இருக்கிறது" ராக்ஸி காக்டேகர் சாரா பிபிசி நிருபர், அகமதாபாத் 28 ஆகஸ்ட் 2022, 01:24 GMT நரோதா பாட்டியா வழக்கில் சலீம் ஷேக் என்பவர் முக்கிய சாட்சி. அவரது சாட்சியத்தின் உதவியுடன், அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அப்போதைய பாஜக எம்எல்ஏ மாயா கோட்னானிக்கும், மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. அடையாள அணிவகுப்பில் நீதிமன்றத்தில் ஷேக், கோட்னானியை அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சாட்சியங்கள் பத…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக சனிக்கிழமை பதவியேற்கவுள்ள யு.யு. லலித்துடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற என்.வி. ரமணா இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார். உச்ச ந…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் டெல்லியில் 12 விநாடிகளில் எப்படி இடிக்கப்படும்? இதனால் ஏற்படும் விளைவு என்ன? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விதிகளை மீறியுள்ளதாகக் கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் 12 விநாடிகளில் இடிக்கப்படும். ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
முத்தலாக்: முஸ்லிம் பெண்களின் நிலை இந்த 5 ஆண்டுகளில் மாறியதா? நியாஸ் ஃபரூக்கி பிபிசி, புது டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முஸ்லிம் பெண்கள் - கோப்புப்படம் 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உடனடி முத்தலாக், அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அஃப்ரீன் ரெஹ்மான்,இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு முத்தலாக் கொடுத்திருந்த கணவர் அவருடன் சமாதானம் செய்ய மறுத்துவிட்டார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. எனி…
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
பிகார் அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ் குமார் அரசு - 10 தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பிகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதன்கிழமை வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 243 உறுப்பினர்கள் கொண்ட பிகார் சட்டசபையில் 164 உறுப்பினர்களின்…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
அதானி வசமாகும் என்டிடிவி பங்குகள் - கார்ப்பரேட் கையில் இந்திய செய்தி நிறுவனம் 23 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அதானி (இடது), பிரனாய் ராய் (வலது) என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வரும் பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அந்தப் பங்குகளை கார்ப்பரேட் பெரு நிறுவனமான அதானி மீடியா குழுமம் வாங்க உள்ளது. இப்படி ஒரு நிறுவன பங்குகளை அதன் நிறுவனங்கள், பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கப்படும் செயலை 'முறையற்ற கையகப்படுத்துதல்' அல்லது ஆங்கிலத்தில் 'ஹோஸ்டைல் டேக்ஓவர்' என்று தொழிற்துற…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
டெசா வாங் ஆசியா டிஜிட்டல் செய்தியாளர், பிபிசி ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. தன்பாலின உறவு தொடர்பான தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள தன்பாலின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், "இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி" என தெரிவித்துள்ளனர். பழமைவாத நடைமுறைகளுக்காக அறியப்படும் நாடு சிங்கப்பூர். ஆனால், காலணியாதிக்க சட்டம் 377ஏ-ஐ நீக்க வேண்டும் என, சமீப ஆண்டுகளாக பலரும் வலியுறுத்தி வந்தனர். …
-
- 0 replies
- 294 views
-
-
இந்தியாவில்... புலிகளை பாதுகாக்க, நடவடிக்கை. 2018-2019 கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2,997 புலிகள் காணப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இயற்கை-இந்தியாவுக்கான உலகளாவிய நிதியம் பல்வேறு நிலப்பரப்புகளில் கள அளவிலான செயற்பாடுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தலையீடுகள் மூலம் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டங்கள் வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் மீது அதிகளவில் கவனம் செலுத்துகின்றன. வேட்டையாடுதல், மனித-வனவிலங்கு மோதல், வனவிலங்கு பாகங்கள் வர்த்தகம், வாழ்விட அழிவு மற்றும் சட்ட ஆதரவு ஆகியவை இதில் முக்கி…
-
- 0 replies
- 196 views
-
-
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தேடுதல் நோட்டீஸ்: “எங்கு வரவேண்டும் என சொல்லுங்க மோதிஜி” என பதில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானவுடன், மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கை குறித்து விசாரிக்குமாறு நேரடியா…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை". ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ - 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
உத்தரகாண்டில்... இந்தியா, அமெரிக்கா கூட்டுப் போர்ப் பயிற்சி. இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான ‘யுதாபியஸ்’ தொடர் போர்ப் பயிற்சிகளை உத்தரகாண்டில் உள்ள சீனா எல்லைக்கு அருகில் உள்ள அவுலி பகுதியில் நடத்தவுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சியானது, இரு நாட்டுப் படைகளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதல் துருப்புக்கள் மற்றும் தளவாடங்கள் குவிக்கப்பட்ட பகுதியாக இந்த மலைப்பகுதி காணப்படுவதோடு அங்கு ஒக்டோபர் 18முதல் 31வரை பயிற்சி நடைபெறும் என்று அதிகா…
-
- 0 replies
- 282 views
-
-
உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு By Vishnu 19 Aug, 2022 | 08:58 PM உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் கடந்த 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் குறித்த ரயில் பால கட்டுமான பணி கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017 ஆம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. இரும்பு மற்றும் கொங்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதன்…
-
- 0 replies
- 149 views
-