அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
ரபேல் விமானம்: என்ன தேவை? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின…
-
- 0 replies
- 523 views
-
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வாக இருக்கும் என்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுடன் மோடி அரசு நெருக்கம் காட்டிவருகிறது. மோடி கடந்த வாரம் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்…
-
- 0 replies
- 178 views
-
-
சபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு December 1, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தினதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் திகதிp வரை நீடித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். http://globaltamilnews.net/2018/10…
-
- 0 replies
- 865 views
-
-
புற்றுநோயை உண்டாக்கும் பாணிபூரிக்கு தடை. கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள 250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோலி பிளவரை வைத்து செய்யப்படும் கோபி மஞ்சூரியன் மற்றும் சிக்கன் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து …
-
- 0 replies
- 184 views
-
-
இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம். இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397047
-
- 0 replies
- 257 views
-
-
இந்தியாவின் எல்லைப் பகுதியில் குடியேற்றங்களை அமைத்துள்ள சீனா. இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா…
-
- 0 replies
- 156 views
-
-
CAB என்றால் என்ன? NRC என்றால் என்ன? CAB என்றால் என்ன? NRC என்றால் என்ன? மிக அருமையான எளிமையான விளக்கம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ, அதனை முழுமையாக புரிந்து தங்களின் நிலைபாட்டை எடுக்கவும். அஸ்ஸாம் மக்களை பொறுத்தவரை, பங்களாதேஷ்-இல் இருந்து குடியேறிய இந்து, முஸ்லிம் என யாருக்கும் குடியுரிமை அளிக்க கூடாது என்பது. பாஜகவை பொறுத்தவரை இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்போம் என்பது; காங்கிரசை பொறுத்தவரை அகதிகளாக வரும் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பது. ஆனால், காங்கிரஸ் / பாஜக இருவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிப்பதை பற்றி எதுவும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக க…
-
- 0 replies
- 966 views
-
-
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின…
-
- 0 replies
- 320 views
-
-
250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி டெல்லியின் ஆக்ராவிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு 250 கி.மீ. தூரம் நடந்தே சென்ற ஒருவர் செல்லும் வழியில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளை தவிர பெரும்பாலான தொழில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. பணம் இல்லாமலும் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுவிட்டது.இதையடுத்து அண்டைய மாநிலங்களுக்கு தொழில் நிமித்தமாக வந்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்றனர். அந்த வகையில் போக்குவரத…
-
- 0 replies
- 358 views
-
-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தீவிர திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு! கொரோனா தொற்று உள்ளவர்கள் இதுவரை 274 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது. H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த …
-
- 0 replies
- 223 views
-
-
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர் டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 971 கோடி ரூபா செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. 4 தளங்களுடன் அமையவுள்ள புதிய கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பே…
-
- 0 replies
- 282 views
-
-
பாகிஸ்தானில் தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்? பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் உள்ள சொகுசு விடுதியில், தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் அதிஷ்டவசமாக தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்ததாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 11பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த பிறகு, இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வர…
-
- 0 replies
- 305 views
-
-
இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம் மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலும், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்திலும் கூறியுள்ளது. நிலநடுக்கம் தொடர்பிலான உயிர் அல்லது உடைமை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. https://www.virakesari.lk/article/117892
-
- 0 replies
- 162 views
-
-
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182…
-
- 0 replies
- 189 views
-
-
டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு! டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.கடமை பாதை என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள ராஜபாதையில் கண்க…
-
- 0 replies
- 295 views
-
-
அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளி; மோடி வாழ்த்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். இத் தீபாவளி மிகவும் சிறப்பானது. சுமார் 500 வருடங்களுக்குப் பின்னர் கடவுள் ஸ்ரீ ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். எனவே, இத் தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் பிரம்மாண்ட…
-
- 0 replies
- 317 views
-
-
முடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல்களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 454 views
-
-
பாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://…
-
- 0 replies
- 320 views
-
-
இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…
-
- 2 replies
- 419 views
-
-
பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 21 வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன் பயங்கரத்தை, அண்மைய நிகழ்வொன்று காட்டி நிற்கின்றது. அண்மையில், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான, உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு, பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இராமர் பிறந்த இடத்தில், மசூதி அமைக்கப்பட்டுள்ளது என்ற பிரசாரமும…
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…
-
- 0 replies
- 241 views
-
-
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று ப…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - படையினருக்கு சிறப்பு அதிகாரம் டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு கோரிக்கை நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போரா…
-
- 0 replies
- 446 views
-
-
கடத்தப்பட்ட சிலைகளை... மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க, அவுஸ்ரேலியா முடிவு! தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், ஆறு பழமையான ஓவியங்கள், இரண்டு கற்சிலைகளை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் தீர்மானித்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறித்த சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அவுஸ்ரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231442
-
- 1 reply
- 967 views
-
-
இந்த ஆண்டின் இறுதிக்குகள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு! கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை…
-
- 0 replies
- 222 views
-