அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்? நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள் உள்ளதாகவும், பயனாளர்களின் தரவுகளைத் திருடும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1266867
-
- 0 replies
- 167 views
-
-
குவாட் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு: சீனா மீது கடுமை; உக்ரைன் விவகாரத்தில் அமைதி; மியான்மர் குறித்து எச்சரிக்கை Quad Meeting : விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான பகிரப்பட்ட பார்வையை பின்பற்றுகின்றோம் என்ற ஒரு தெளிவான சமிக்ஞையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்னில் குவாட் கூட்டம் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பல்வேறு ராஜதந்திர விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். …
-
- 0 replies
- 248 views
-
-
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்! உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகி மார்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்திலுள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்…
-
- 0 replies
- 154 views
-
-
கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு 9 பிப்ரவரி 2022, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மலைப் பிளவில் சிக்கிய பாபு மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த கேரள இளைஞர் இந்திய ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து,…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்! இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப…
-
- 0 replies
- 164 views
-
-
நீட்: ராகுல், டி.ஆர். பாலு எழுப்பிய 'ஒன்றிய' பிரச்னை - "தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது" 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னர் போல மோதி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு புகார் தெரிவித்தார். மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு இன்று இரவு பேசினார்கள். அப்போது ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் நீட் விவகாரம் …
-
- 4 replies
- 436 views
- 1 follower
-
-
பட்ஜெட் 2022-23: டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே வெளியிடும் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிடல் ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும். 2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான 10 அறிவிப்புகள். 1. பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியே …
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை விநியோகித்தது ரஷ்யா! AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 70 ஆயிரம் துப்பாகிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், முதல் கட்டமாக 70 ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் INSAS துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த துப்பாக்கிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் 300 மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லி…
-
- 3 replies
- 541 views
- 1 follower
-
-
இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 183 views
-
-
கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்த பொதுநல வழக்கு ஒன்றில் கருத்து கூறிய நீதிபதிகள், திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதுவது பற்றி ஆலோசித்தனர். அதை சட்டப்படி குற்றமாக்குவது குறித்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் கூறியிருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. Sexual Harassment (Representational Image) இதனைத் தொடர்ந்து, இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன் பதிலைச் சமர்ப்பித…
-
- 1 reply
- 740 views
-
-
பெகாசஸ் வழக்கு விவகாரம் : உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என அறிவிப்பு! பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலமாக தனிநபர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த விடயம் பொது விவாதத்திற்கு வந்துவிட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக…
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
குடியரசு தினம்: இந்தியாவுக்கு இந்த மாபெரும் அணிவகுப்பு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? ஷரண்யா ரிஷிகேஷ் பிபிசி நியூஸ், டெல்லி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்தியா தனது 73ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசாங்கம் ஒரு அசாதாரண செய்திக்குறிப்பை வெளியிட்டது. அது... இந்த ஆண்டு அணிவகுப்பில் பாலிவுட்டின் பாடல் இடம்பெறாது என்பதுதான்.உண்மையில், குடியரசு தின அணிவகுப்பில் ஒருபோதும் பாலிவுட் மெட்டு இடம்பெற்றதில்லை.…
-
- 6 replies
- 504 views
- 1 follower
-
-
உலகளவில் இந்தியா சரியான இடத்தைப் பிடிக்கும்: குடியரசுத் தலைவர் மின்னம்பலம்2022-01-26 இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தைப் பிடிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாட்டின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று தெரிவித்த அவர், இரு நாட்களுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். இவர்தான் ‘ஜெய்-ஹிந்த்’ என்ற உற்சாகமான வணக்கத்தைப் பின்பற்றியவர். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவைக் கவுரமான நாடாக்க…
-
- 0 replies
- 202 views
-
-
பிபின் ராவத், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்! மின்னம்பலம்2022-01-26 குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 128 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சேவைகளைப் புரிந்தவர்களுக்குப் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கு 128 பேருக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 228 views
-
-
பிரபாகரன் சண்முகநாதன் News தேசியக்கொடி பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் ( amazon ) சமீபத்தில் ட்விட்டரில், இந்திய தேசிய கொடியை Amazon அமவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்திய தேசிய கொடி அச்சிடப்பட்ட டீ-சர்ட், கப், கீ செயின், சாக்லேட் போன்ற பொருள்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில், இது விற்பனையை அதிகரிக்க செய்யப்படும் கீழ்மையான செயல் என்றும் இதன் மூலம் தேசபக்தி ஒருபோதும் அதிகரிக்க போவதில்லை எனவும் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் சிலர்,…
-
- 0 replies
- 372 views
-
-
டாடா குழுமத்தின் வசமாகும் ஏர் இந்தியா விமான நிறுவனம்! ஏர் இந்தியா விமான நிறுவனம் வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா ஏஸ்ஏடிஎஸ் சேவை வழங்கல் நிறுவனத்தின் 50 சதவீதமான பங்குகள் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் எதிர்வரும் 3 ஆவது விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது. ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், டலேஸ் நிறுவனமும் கடந்த ஒக்டோபர் மாதம் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1263534
-
- 1 reply
- 220 views
-
-
ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ - யார் இவர்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கைக் கதை இந்தியில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த இளம் முதன்மைச் செயல் அதிகாரி 480 கோடி ரூபாய் (48 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார். ஸ்ரீகாந்துக்கு கண் தெரியாது என்பதால், பதின்ம வயதில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. அதை எதிர்த்து ஒரு மாநிலத்தின் மீது வழக்கு தொடுத்து, படித்துக் காட்டினார். ஸ்ரீகாந்த் ஆறு வயதாக இருக்கும் போது, கிராமப்புறத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் பல கிலோ மீட…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MONDADORI VIA GETTY IMAGES படக்குறிப்பு, நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெளியே வந்தபோது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றார். 38 வயதான அவர் ஒரு வலதுசாரி கட்சியான இந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார். முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும்…
-
- 2 replies
- 904 views
- 1 follower
-
-
அருணாச்சல இளைஞரை தேடும் இந்திய ராணுவம் - எந்த வேகத்தில் முயற்சி உள்ளது? திலீப் குமார் சர்மா பிபிசி இந்திக்காக 21 ஜனவரி 2022 பட மூலாதாரம்,TWITTER@TAPIRGAO படக்குறிப்பு, மிரம் தரோம் அசாமின் தேஜ்பூரில் உள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இது குறித்து, "அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் தரோம், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியதால் சீன ராணுவமான பிஎல்ஏவால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. விதிமுறைகளின்படி, அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம் – இந்திய இராணுவம் குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்போது, நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். அதன்பின்னர், ஜனவரி 29ஆம் திகதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர், டெல்லிக்கு வந்திருந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படு…
-
- 0 replies
- 198 views
-
-
உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம் 22 ஜனவரி 2022, 06:38 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று ( 22-1-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம். உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு என்று மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையின் சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர, தந்தை உயில் எழுதாத நிலையில், மகள்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ள…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 26 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/126312…
-
- 0 replies
- 160 views
-
-
5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து! Posted on January 20, 2022 by தென்னவள் 13 0 5ஜி தொழில்நுட்பத்தால் விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றன. 5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி ச…
-
- 4 replies
- 802 views
- 1 follower
-
-
பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு! புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திறன்களை நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1262888
-
- 2 replies
- 689 views
-
-
டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து டெல்லி பொலிஸ் அதிகாரி தீபக் யாதவ் தெரிவிக்கையில், குடியரசு தின விழா நடைபெறும் பகுதி முழுவதும், முக அடையாளத்தை காண்பிக்கும் மென்பொருளுடன் கூடிய கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு பணியில் துணை இராணுவப்படையினர், உள்ள10ர் பொலிஸார், சிறப்பு பிரிவு பொலிஸார், தனிப்பிரிவு பொலிஸார், ஆயுத பொலிஸார் மற்றும் ஸ்வா…
-
- 0 replies
- 200 views
-