Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று! வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்தியா முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் குறித்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பையில் விளம்பரத்துக்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்…

  2. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள ராமர் பாலத்தின் தோற்றம் குறித்த ஆய்வின‍ை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் பு…

  3. விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார். குட…

    • 4 replies
    • 656 views
  4. உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான ஷிருஷ்டி கோஸ்வாமி ஷிருஷ்டி கோஸ்வாமி ஹரித்துவார், ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி. அவர் ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் உள்ளனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார். இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம…

  5. 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. …

  6. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு புதுடெல்லி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சிங்கு எல்லையில், விவசாய …

  7. குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழப்பு குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளதாக பொல…

    • 1 reply
    • 433 views
  8. கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார் தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார். இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3000 க்கும் மேற்பட்ட இடங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்படும் தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும், சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை இன்று ஜனவரி 16 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காணொள் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவது…

  9. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் 447 பேருக்கே பக்க விளைவுகள் ஏற்பட்டன – மத்திய அரசு நாடு முழுவதும் இதுவரை 2.24 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜனவரி 17 ஆம் திகதிவரை நாடு முழுவதும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி …

  10. பங்களாதேஷிடம் இருந்து கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள மைக் பொம்பியோ! பங்களாதேஷில் அல்-குவைதா பயங்கரவாதக் அமைப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிக்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஒரு மூத்த தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களையும் பொய்யையும் பங்களாதேஷ் கடுமையாக நிராகரிக்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எங்களது சாதனை உலகளாவிய பாராட்டைப் பெ…

  11. 15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இது குறித்து டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு உறுப்பினர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அவர்கள் முன்னிலையில் ஆஜராக மாட்டோம் என அறிவித்தனர். இதுபற்றிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்துகள் வருமாறு:- …

  12. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல் புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள். விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா?' என மத்திய அரசிடம் கேட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இ…

  13. கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்! ஜெ.முருகன் கிசான் சம்மான் எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டத்தைக் கொண்டுவந்தார். சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை (PM-Kissan) 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டத்துக்கு 5 ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும…

  14. அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார். தேசத்தை முன்னிலைப்படுத்தாமல் குடும்ப அரச…

  15. இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் – மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நேபாள பிரதமர் இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, மீண்டும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார். இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு நாடாளுமன்றம் மு…

  16. வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …

  17. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தொடங்க தீர்மானித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை க…

  18. உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது. …

    • 0 replies
    • 307 views
  19. பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய மத்திய அரசு: ஆர்டிஐ தகவல் கோப்புப் படம். புதுடெல்லி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 …

  20. இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல் இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார். பதிவு: ஜனவரி 06, 2021 15:52 PM மாற்றம்: ஜனவரி 06, 2021 16:12 PM பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மே 23, 2017 அன்று பெங்க…

  21. விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம் தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். குளிரைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நெருப்பை எரியவிட்டு அதன் வெப்பத்தில் ஏழை முதியவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். பால் வாங்க வந்த எஜமானர்களுடன் குளிருக்குக் கதகதப்பாக ஸ்வெட்டர் அணிந்து கம்பீரமாக நம்மை வேடிக்கை பார்த்தபடி செல்லும் வளர்ப்பு நாய்களையும் காலையிலேயே பார்க்க முடிகிறது. சென்னையில் காணப்படும் நாய்களைவிட இரண்டு மடங்கு தடிமன் கொண்டு போஷாக்காகத் தெரிகின்றன புதுடெல்லி நாய்கள். அதிகா…

  22. டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு! துரை.நாகராஜன் போராட்டம் போராட்டம் பிரீமியம் ஸ்டோரி இந்தப் போராட்டத்தை நிலைகுலைய வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் விளையாட்டுக் காட்டுவதுபோல தந்திர வேலைகள் சிலவற்றை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கையில் எடுத்தது. ஆனால், அவையெல்லாம் துளியும் பலன் கொடுக்கவில்லை. உறுதியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர் விவசாயிகள். வழக்கம்போல ஆன்ட்டி இன்டியன் உள்பட பல்வேறு சித்துவேலைகளைக் காட்டியும் விவசாயிகளிடம் மோடியின் பாச்சா பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமே... தற்போது விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வடிவமே! எப்போதுமே போராட்டம் …

  23. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் அபாயம் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தட…

  24. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் 5 ஜனவரி 2021 பட மூலாதாரம், GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.