Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார். தேசத்தை முன்னிலைப்படுத்தாமல் குடும்ப அரச…

  2. இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் – மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நேபாள பிரதமர் இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, மீண்டும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார். இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு நாடாளுமன்றம் மு…

  3. வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …

  4. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தொடங்க தீர்மானித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை க…

  5. உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது. …

    • 0 replies
    • 306 views
  6. பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய மத்திய அரசு: ஆர்டிஐ தகவல் கோப்புப் படம். புதுடெல்லி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 …

  7. இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல் இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார். பதிவு: ஜனவரி 06, 2021 15:52 PM மாற்றம்: ஜனவரி 06, 2021 16:12 PM பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மே 23, 2017 அன்று பெங்க…

  8. விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம் தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். குளிரைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நெருப்பை எரியவிட்டு அதன் வெப்பத்தில் ஏழை முதியவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். பால் வாங்க வந்த எஜமானர்களுடன் குளிருக்குக் கதகதப்பாக ஸ்வெட்டர் அணிந்து கம்பீரமாக நம்மை வேடிக்கை பார்த்தபடி செல்லும் வளர்ப்பு நாய்களையும் காலையிலேயே பார்க்க முடிகிறது. சென்னையில் காணப்படும் நாய்களைவிட இரண்டு மடங்கு தடிமன் கொண்டு போஷாக்காகத் தெரிகின்றன புதுடெல்லி நாய்கள். அதிகா…

  9. டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு! துரை.நாகராஜன் போராட்டம் போராட்டம் பிரீமியம் ஸ்டோரி இந்தப் போராட்டத்தை நிலைகுலைய வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் விளையாட்டுக் காட்டுவதுபோல தந்திர வேலைகள் சிலவற்றை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கையில் எடுத்தது. ஆனால், அவையெல்லாம் துளியும் பலன் கொடுக்கவில்லை. உறுதியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர் விவசாயிகள். வழக்கம்போல ஆன்ட்டி இன்டியன் உள்பட பல்வேறு சித்துவேலைகளைக் காட்டியும் விவசாயிகளிடம் மோடியின் பாச்சா பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமே... தற்போது விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வடிவமே! எப்போதுமே போராட்டம் …

  10. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் அபாயம் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தட…

  11. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் 5 ஜனவரி 2021 பட மூலாதாரம், GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொட…

  12. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று இன்னும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் கொரோனாவின் முன் மண்டியிட்டே கிடக்கின்றன. அதேநேரம் இந்தியாவோ கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 16,504 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ந்தேதி கண்டறியப்பட்ட (97,894 பேர்) பாதிப்பை ஒப்பிடுகையில், இது சுமார் 6 மடங்கு குறைவாகும். 35 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட வல்லரசான அமெரிக்காவிலேயே 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 3½ லட்சத்துக்கு அதிகமானோர் உயிர…

  13. இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி பட மூலாதாரம், OM BIRLA OFFICIAL TWITER PAGE இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டட திட்ட வடிவமைப்பின், அமலாக்கத்தில் விதி மீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜனவரி 5) வழங்கியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற புதிய கட்டடம் மற்றும் அதையொட்டிய…

  14. எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா : நவீன இராணுவ டாங்குகளை எல்லையில் நிறுத்தியது! எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சீனா தனது இராணுவ டாங்குகளை எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது. ரெசாங் லா, ரெச்சின் லா, முகோசிரி ஆகிய மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் 30 முதல் 35 இராணுவ டாங்குகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்திய நிலைகளை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் டாங்குகள் இலகுரக நவீன ரகத்தை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் சீனா வாலாட்டினால் நமது இராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்க 17 ஆயிரம் அடி உயரத்தில் நமது டாங்குகளும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிர…

  15. 1.1 டிகிரி குளிர் வாட்டிய டெல்லி புத்தாண்டு நாள்: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பனி-தூசி மூட்டத்தில் டெல்லி இந்தியா கேட் பகுதி. 2021 புத்தாண்டு தினம் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நடுங்கும் குளிர் நாளாக இருந்தது. அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது. சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது. காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின…

  16. ``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம் சிந்து ஆர்ரா.ராம்குமார் பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன் ( படம்: விகடன் / ரா.ராம்குமார் ) திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் மிகவும் வயது குறைந்த மேயர், சி.பி.எம் கட்சியின் சாதாரண தொண்டனின் மகள் எனப் பல பெருமைகளோடு மதிப்புமிக்க மேய…

  17. போர்க்கால அடிப்படையில் இராணுவத்தினருக்கு பதுங்கு குழிகள்- மோடி அறிவிப்பு காஷ்மீர் எல்லையில் இராணுவத்தினருக்காக போர்க்கால அடிப்படையில் பதுங்கு குழிகள் அமைக்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி சபைத் தேர்தலில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வாக்களித்துள்ளனர். மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்யம் என்ற கொள்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் வென்றெடுத்துள்ளனர். பஞ்சாயத்து தேர்தலை நடத்தி மக்களுக்கு நல்லது செய்ய மறுத்ததால் ஜம்மு காஷ்மீர் அரசில் அங்கம் வகித்த பா.ஜ.க. அதனை…

  18. காதலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான பயங்கரவாத சட்டமே “லவ் ஜிகாத்” அருண் நெடுஞ்செழியன் December 26, 2020 இந்தியாவிலே உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டமானது, இயற்கையான காதல் திருமணத்தை தடை செய்வதன் வழியே இயற்கையான மானுட உணர்வுக்கும், காதல் வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்துகிறது. அங்கே போலீசாருக்கு தினசரி யார்,யாரை காதலிக்கிறார்கள் என தேடியலைந்து காதலர்களை கைவிலங்கிட்டு பிடிப்பது தான் பிரதான வேலையாகிவிட்டது! ஜனநாயக குடியரசு ஆட்சியில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமையை இந்த சட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது உ.பிஅரசு. …

  19. பலோச்சிஸ்தான் பிரிவினைவாதி கரீமா மெஹ்ராப் ரொறோண்டோவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் மீது சந்தேகம் பிரபல பலோச்சிதான் பிரிவினைவாதியும், செயற்பாட்டாளருமாகிய, கரீமா பலொக் என அழைக்கப்படும் கரீமா மெஹ்றாப் ரொறோண்டோவில் இறந்திருக்கக் காணப்பட்டார். இவரது மரணம் குறித்துச் சந்தேகங்கள் உள்ளதாகவும் புலன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது. பலோச்சிஸ்தான் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான மெஹ்றாப் ஒரு தினத்துக்கு முதல் காணாமற் போயிருந்ததாகவும் மறுநாள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தெரித்துள்ளது. மரண பரிசோதனைகள் நடைபெற்று முடிந்தபோதிலும் அதன் பெறுபேறுகள் இன்னும் அறிவிக்கப்படவில்…

  20. மற்றுமோர் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1-720x450.jpg விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநில கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானத்தை அடுத்ததாக ஏவப்ப…

  21. வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் – நரேந்திர சிங் தோமர் by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D--720x450.jpg வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லி தெற்காசிய வெளிநாட்டு நிருபர்கள் மன்ற உறுப்பினர்களு…

  22. நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” இரத்தத்தால் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்! 12 Views டெல்லியில் 27 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று இரத்தத்தால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது எங்களுடைய இரத்தம். எங்கள் உரிமைகளைப் பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப் பெரிய பாவம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர்கள் பறி…

  23. இலங்கையின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்- இந்திய முப்படைகளின் பிரதானி நேபாளத்திற்கு அறிவுரை நேபாளம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட, இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் என இந்திய முப்படைகளின் பிரதானி ஜெனரல் பிபின் ராவட் தெரிவித்துள்ளார். நேபாளம் சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக செயற்படலாம் ஆனால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவு இமயமலை போன்று உயர்ந்தது என தெரிவித்துள்ள பி…

  24. அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் அயோத்தி, அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தான்னிப்பூர்…

  25. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.