Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை .! டெல்லி: லடாக் பகுதிக்கு இன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுடன், ராணுவ முகாமில் நடுநாயகமாக மோடி அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு நேரில் சென்று ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லை…

  2. மருத்துவக் கட்டணம் செலுத்தாத நோயாளி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் தில்நவாஸ் பாஷா பிபிசி இந்தி Getty Images மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் நோயாளியின் தரப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே சண்டை நடப்பது தெரிகிறது. உடல் நலம்…

  3. உத்தரப்பிரதேச காவல் துறையினர் மீது துப்பாக்கி சூடு: கான்பூர் என்கவுன்ட்டரில் 8 பேர் பலி ANI உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குற்றப்பின்னணி உடைய நபரைக் கைது செய்ய முயன்றபோது எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை விகாஷ் துபே எனும் நபரை கைது செய்ய முயன்றபோது இது நடந்துள்ளது. 60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய நபர் ஒருவரை கைது செய்யும் முயற்சியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். மோதல் நடந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். …

  4. இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியும் – ரவிசங்கர் பிரசாத் இந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியுமென மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தின் எதிரொலியாக சீனாவிலிருந்து செயற்படும் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதுகுறித்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம்உரையாற்றிய ரவிசங்கர் பிரசாத், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காகவும் இந்திய மக்களின் பாதுகாப்பு, தனிநபர் ரகசியத்தை பேணுவதற்காகவும் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். நமது நாட்டின் எல்லை மீது பார்…

  5. முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் - மத்திய அரசு ஒப்புதல் சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 05:30 AM புதுடெல்லி, லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் அங்கு அம…

  6. ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 16:52 PM புதுடெல்லி, கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 59 மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவதோடு, 12 எஸ்.யு-30 எம்.கே.ஐ ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 ரக விமானங்கள் உட்பட ரஷ்யாவிலிருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்குவ…

  7. கொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை ஸ்ருதி மேனன் பிபிசி உண்மை கண்டறியும் குழு Getty Images தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன. பிபிசியின் உண்மை கண்டறியும் குழு…

  8. சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை! இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது டிக்டொக், ஹலோ, கேம் ஸ்கானர், செயார்இட், யு.சி. பிரௌசர் போன்ற பிரபமான செயலிகள் மற்றும் கிளாஸ் ஓப் கிங்ஸ் விளையாட்டு உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்: https://newuthayan.com/சீனாவுடனான-மோதல்-டிக்/

  9. இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள் சீனாவுடன் உள்ள பொருளாதார தொடர்பை துண்டிக்க இந்தியா வேகமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை எடுத்து உள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 07:36 AM புதுடெல்லி நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியா புதன்கிழமை (ஜூலை 1) சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை…

  10. இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர். நியூயார்க் : ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020…

  11. நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - படையினருக்கு சிறப்பு அதிகாரம் டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு கோரிக்கை நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போரா…

  12. ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:25 AM புதுடெல்லி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த…

  13. கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 08:34 AM பாட்னா பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை…

  14. நவம்பர் வரை ஊரடங்கு... கோடிட்டுக் காட்டும் மோடி மின்னம்பலம் மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு முற்று முழுதாக முடிய நவம்பர் மாதம் வரை ஆகிவிடும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் பிரதமர். இன்று (ஜூன் 30) மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றும் ஆறாவது உரை இது. இந்திமொழியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், நாம் இப்போது அன்லாக் 2 காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். மேலும் சளி, காய்ச்சல் பொதுவாகவே அதிகம் வருகிற காலகட்டம் இது. அதனால் நாம்…

  15. படகு கவிழ்ந்ததில் 32 பேர் பலி ,பலர் மாயம் - பங்களாதேஷில் பரிதாபம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது படகை செலுத்தியவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷியாம்பஜார் பகுதியில் புரிகங்கா ஆற்றில் ஏறக்குறைய 100 பயணிகளுடன் காலை வேளையில் மூழ்கிய படகுக்குள் பல பயணிகள் சிக்கியுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். "இதுவரை முப்பத்திரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்புபு்பணியாளர்கள் தேடி வருகின்றனர் என பங்களாத…

  16. ஜப்பான்-இந்தியா இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகை! இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்திய கடற்படையைச் சேர்ந்த INS ராணா, INS குலிஷ் ஆகிய போர்க் கப்பல்களுடன் ஜப்பான் கடற்படையின் JS காஷ்மீர் மற்றும் JS ஷிமாயுகி ஆகிய போர்க் கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சீன இராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது முறுகல் நிலையை ஏற்படுத்திவருகின்ற நிலையில் சீனா உரிமைகோரியுள்ள சில தீவுகளில் தமது உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டோக்கியோவிலிருந்து 1931 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோனோஷிரோ என் தீவுகளின் பெயரை டோனோஷிரோ சென்காகு என ஜப்பானின் இஷிகாகி நகர சபை ம…

  17. பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.ta…

    • 0 replies
    • 371 views
  18. சீனாவுடன் போர் நடக்குமா.? | சுப்ரமணியன் சுவாமியுடன் பாண்டே நேர்காணல்

    • 0 replies
    • 368 views
  19. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?மருத்துவ நிபுணர்கள் அம்பலம் இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 07:20 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் வெளிப்படத்தொடங்கியது. ஆனால் இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தொற்று பாதித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 100 எ…

  20. லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும்’- ராணுவ நிபுணர்கள் கருத்து லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 04:15 AM புதுடெல்லி, லடாக்கின் கிழக்கில் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் சர்வ…

  21. Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் Getty Images யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர். `வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்…

  22. இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் பலி! இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது. https://newuthayan.com/இந்தியாவில்-ஒரே-நாளில்-ம/

  23. சீனாவை வம்பிழுத்து அவமானப்பட்டது இந்தியா..!! பாகிஸ்தான் அமைச்சர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லை பிரச்சினையை பாகிஸ்தானை நோக்கி திசை திருப்ப இந்தியா முயற்சித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரு…

    • 1 reply
    • 805 views
  24. டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது 7 நாட்களில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு உள்ளது. பதிவு: ஜூன் 24, 2020 06:47 AM புதுடெல்லி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாககைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர். பிடிபட்டதும் அபித் உசேனும், …

  25. கொரோனா மருந்து: பதஞ்சலிக்கு மத்திய அரசு தடை! மின்னம்பலம் கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அது ஆதாரங்களுடன் வெளியிடப்படும் என்றும், பாபா ராம்தேவால் அறியப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆச்சாரிய பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா கிட் எனப்படும் மருந்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று (ஜூன் 23) மாலை 5.39 மணிக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில நாட்களாகவே பதஞ்சலி நிறுவனம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.