Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்... கொல்கத்தா: லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்க…

  2. அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்த படை தளபதிகளுக்கு அனுமதி! லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த விதிகளில் இந்திய இராணுவம் மாற்றம் செய்துள்ளது. இதன்படி அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ரா…

  3. சிக்கிமின் பனி மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மீண்டும் மோதல் சிக்கிமின் மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 06:25 AM புதுடெல்லி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மற்றும் 76 பேர் காயமடைந்தனர். சீனர்கள் ஒரு கூடாரத்தை அகற்ற மறுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் இருதரப்பிலும் ராணுவ குவிப்பு நடந்து வந்தாலும், பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராணுவ கமாண்டர…

  4. கழிவு நீரில் கொரோனா வைரஸ் பரவுகிறது -இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதை இந்திய விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். பதிவு: ஜூன் 23, 2020 04:15 AM புதுடெல்லி, கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.அந்த ஐ.ஐ.டி.யின் புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை ச…

  5. எல்லைப் பிரச்சினை விவகாரம் : பாதுகாப்பு துறைக்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கியது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கு அவசரகால நிதியாக 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்காக மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத…

    • 0 replies
    • 370 views
  6. எல்லைப் பிரச்சினை:சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மராட்டிய அரசு எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மராட்டிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பதிவு: ஜூன் 22, 2020 12:04 PM மும்பை சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கைய்யெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியதாவது:- மத்திய அரசுட…

  7. அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரொனா ; 5 பேர் கர்ப்பம் அதிர்ச்சி தகவல் உத்தரப் பிரதேசம், கான்பூர் அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரொனா ; 5 பேர் கர்ப்பம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 22, 2020 12:49 PM கான்பூர் உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமிகளில் ஐந்து பேர் கர்ப்பமாக இருப்பதும், ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "முசாஃபர்பூ…

  8. ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின்…

  9. பாகிஸ்தானின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா – ஆயுதங்களும் மீட்பு! பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இந்த விமானத்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன. …

  10. தாகா; நேபாளத்தை தொடர்ந்து, வங்கதேசத்தையும் தன் வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வர்த்தக துறையில், வங்க தேசத்துக்கு பல வரிச்சலுகைகளை சீனா அறிவித்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, சில சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்த சீனா, அந்த நாட்டை, சிறிது சிறிதாக தங்களுக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. இதையடுத்து, சீனாவின் பார்வை, மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி திரும்பி உள்ளது.வங்கதேசத்திலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 97 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், 8,526 பொருட்களுக்கு சீனாவில் வரி விதிக்கப்படாது.இது குறித்து, சீன வரி ஆணைய…

    • 2 replies
    • 666 views
  11. "எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது" - இந்திய அரசு பதில் Getty Images மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீன எல்லைப்புறத்தில் இருநாட்டுப் படையினர் இடையே நடந்த கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பு சேதாரம் பற்றி அதிகாரபூர்வத் தகவல் இல்லை. இந்த மோதல் சம்பவத்தில் நடந்தது என்ன என்ப…

    • 1 reply
    • 516 views
  12. இந்திய இளைஞர்களை குறி வைக்கும் கொரோனா! மின்னம்பலம் இளம் நோயாளிகளைக் கொண்டிருப்பதால் இந்தியா மற்ற நாடுகளை விட நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், எதிர்பார்த்ததை விட மிக அதிகமான விகிதத்தில் இளம் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவான கருத்து என்னவென்றால், இந்தியாவில் கோவிட் -19 இறப்பு விகிதம் அநேகமாக உலகிலேயே மிகக் குறைவு என்பதே. இந்தியாவின் இறப்பு விகிதம் 2.8 சதவிகிதம், இது இத்தாலியுடன் ஒப்பிடும் போது (இத்தாலி 14.3சதவிகிதம்) மிகக் குறைவு. முதல் பார்வையில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் (concurrent cumulative case fatality rate- CCCFR) நிச்சயமாக பலரையும் விட மிகக் குறைவாக இருப்ப…

  13. இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா? சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா. பிரீமியம் ஸ்டோரி இந்திய - நேபாள எல்லையில், இந்திய நிலப்பரப்புக்குள் 335 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சொந்தம் கோரும் வரைபடத்துக்கான சட்டத்திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது நேபாள நாடாளுமன்றம். அடுத்த இரு நாள்களில் இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்குள் கலவரம் வெடித்து, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், `நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரிவரச் செய்…

  14. கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு டெல்லி சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 16:47 PM புதுடெல்லி, டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். டெல்லி முத…

  15. பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- அ.தி.மு.க., தி.மு.க. பங்கேற்பு by : Litharsan பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார். அதேபோல், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் …

    • 0 replies
    • 269 views
  16. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். பதிவு: ஜூன் 19, 2020 13:42 PM லக்னோ உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார். நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு …

  17. ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் பாதுகாப்பு சபையின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான த…

  18. ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி by : Dhackshala சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு …

  19. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் - பிரதமர் மோடி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர் மோடி கூறினார். பதிவு: ஜூன் 18, 2020 12:30 PM புதுடெல்லி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று "ஒரு பெரிய நடவடிக்கை" எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது "ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவ…

  20. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது: பிரதமர் மோடி இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த உதவியதாகபிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “ஊரடங்கு தளர்த்த தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை …

  21. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி எப்படி முன்னுதாரணமாக மாறியது; குடிசை குடிசையாக சென்று கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்: மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் மும்பை ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவி, கரோனா வைரஸ் பரவலின் முக்கிய கேந்திரமாக இருந்து, வைரஸைக் கட்டுப்படுத்தியதில் தற்போது முன்னுதாரணமான பகுதியாக மாறி உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெய…

  22. காங்கிரஸ் கட்சியை ‘பழைய கட்டில்’ என்று வர்ணித்து சிவசேனா கிண்டல் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மகாவிகாஸ் கூட்டணியில் பிளவு இருப்பதை உறுதி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியையே கிண்டலடித்துள்ளது ஆளும் சிவசேனாக் கட்சி. காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், மற்றும் அசோக் சவான் இருவரும் மகாராஷ்ட்ரா மூன்று கட்சி கூட்டணியில் விவகாரங்கள் எழுவதற்கு அதிகாரிகளே காரணம் என்று குற்றம்சாட்டினர் இது தொடர்பாக சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் இந்த மாநிலத்தில் நன்றாகத்தான் விளங்குகிறது, ஆனால் பழைய கட்டில் சப்தம் எழுப்புவதுபோல் அவ்வப்போது தன் இருப்பைக் காட்ட பழைய கட்டிலான காங்கிரஸ் கட்சி சப்தம் எழுப்பி வர…

  23. இந்தியா குறைந்தளவான அணுவாயுதங்களை கொண்டுள்ளது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்! இந்தியா குறைந்தளவிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்தியா, சீனா இரு நாடுகளும் 2019-ஆம் ஆண்டில் கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. 320 அதன் மூலம் சீனாவிடம் இப்போது அணு ஆயுதங்களும், இந்தியாவின் கையிருப்பில் 150 அணு ஆயுதங்கள் உள்ள அதேவேளை பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி சீனாவிடம் 290 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் 130 முதல் 140 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களும் இருக்க …

  24. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு திட்டம் – ராஜ்நாத் சிங் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் “இந்த…

  25. சீனா, பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம்கூட இந்தியாவுக்கு தேவையில்லை: அமைதியும், நட்பும்தான் தேவை: நிதின் கட்கரி பேச்சு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : கோப்புப்படம் அகமதாபாத் சீனாவின், பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட இந்தியாவுக்குத் தேவையில்லை, அதற்கு ஆசைப்படவும்இல்லை. இந்தியாவுக்கு அண்டை நாடுகளிடம் அமைதியும், நட்புறவும் மட்டுமே தேவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார் இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல்நிலவி, அது தொடர்பாக பேச்சு நடந்து வரும்போது, இந்த கருத்தை மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது குறிபப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து பாஜ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.