அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதனூடாக கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மல்லையாவின் யு.பி.ஹெ.ச்.எல்.நிறுவனத்தின் வசமுள்ள பங்குகள் உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷா் நிறுவனத்தின் உரிமையாளா் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளாா். இந்நிலையில் அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. …
-
- 0 replies
- 251 views
-
-
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்! ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நடுநிலையான விசாரணைக்குத் தாம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்ப…
-
- 0 replies
- 123 views
-
-
மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும்விதமாக புதன்கிழமை (07) அதிகாலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான…
-
- 0 replies
- 149 views
-
-
2021-22இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்- ரிசேர்வ் வங்கி by : Litharsan எதிர்வரும் 2021-2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் சக்திகாந்த தாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கையில், “க…
-
- 0 replies
- 313 views
-
-
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர். நியூயார்க் : ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020…
-
- 0 replies
- 286 views
-
-
யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை! முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதற்கான உத்தரவை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிறப்பித்துள்ளார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்படி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221330
-
- 0 replies
- 228 views
-
-
ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை... தொடர்ந்து, கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பத்தினரை மீட்பதற்காக சி-17 என்ற விமானம் காபூலில் தரையிறங்கியுள்ளது. 500 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்காக அவ்வவ்போது அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங…
-
- 0 replies
- 215 views
-
-
கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது? - இந்திய அரசை அதிரவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GWENGOAT / GETTY IMAGES இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் மூன்றாம் பாகம் இது. அரசு விரும்பாத கருத்தைச் சொல்லும் ஊடகங்களைத் தடைசெய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1950ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அப்படிச் செய்ய முடியாது…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
முதல் வழக்கு.. மகன் பட்டாசு வெடித்ததற்கு தந்தை மீது வழக்கு போட்டது டெல்லி போலீஸ்!சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் நபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகன் வெடித்த பட்டாசுக்கு அவனது தந்தை மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது. அதன்படி தீபாவளி நேரத்தில் 2 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.இந்த 2 மணி நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்…
-
- 0 replies
- 230 views
-
-
இரு தீவிரவாத அமைப்புகளுக்கு தடைவிதித்தது பாகிஸ்தான்! மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத இயக்கம் மற்றும் பாலாஹ் ஏ இன்ஸானிட் அறக்கட்டளை (Falah-e-Insaniat Foundation) ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், லஷ்கர் ஏ தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 68 தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளன. கடந்த மாதம் 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை …
-
- 0 replies
- 248 views
-
-
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்கள், கபட வாக்குறுதிகள்': பிரதமர் மோடி தாக்கு Published : 03 Apr 2019 12:32 IST Updated : 03 Apr 2019 12:32 IST பி.டி.ஐ பாசிகட் பாசிகட் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர்மோடி பேசிய காட்சி: படம் ஏஎன்ஐ காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. …
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் சுமார் 40 இந்திய பராமிலிட்டரியினர் கொல்லப்பட்டதும், அதற்குப் பழிவாங்கலாக இந்தியா விமானப்படைமூலம் தாக்குதல் நடத்தியதும் நினைவிருக்கலாம். இத்தாக்குதலில் ஈடுபட்ட விமானத்தை ஓட்டிச் சென்ற மலையாளியான வர்தாமனை பாக்கிஸ்த்தான் ராணுவம் கைதுசெய்து, விசாரணைக்கு உற்படுத்தி பின்னர் நல்லெண்ண நோக்கத்தில் விடுதலை செய்ததும் அறிந்ததே. கைதுசெய்யப்பட்டிருந்தபொழுது இந்திய விமானியிடம் விசாரணை நடைபெறும் வேளையில் எடுக்கப்பட்ட பேட்டி பரவலாக எல்லோரும் பார்த்ததுதான். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்துவரும் இவ்வேளையில், இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் இந்திய - பாக்கிஸ்த்தானிய அணிகளுக்கிடையிலான …
-
- 0 replies
- 435 views
-
-
தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தி…
-
- 0 replies
- 305 views
-
-
தற்சார்பு இந்தியா போன்ற கொள்கைகள் கடந்த காலத்தில் பலனளிக்கவில்லையே; மேக் இன் இந்தியாவின் மறுவடிவம்தானே: ரகுராம் ராஜன் கருத்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஐசிஆர்ஐஇஆர் நிறுவனம் சார்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்தரங்கு காணொலியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வளர்ந்து வரும் நாடுகள் அதிகமா…
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு! இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும். எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள…
-
- 0 replies
- 347 views
-
-
கிருமி ஆயுதம்: 1933ல் இந்தியாவில் நடந்த ஜமீன்தார் கொலை - உலகம் கவனித்த வழக்கு செளதிக் பிஸ்வாஸ் பிபிசி இந்தியா செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அமரேந்திர பாண்டே 1933 நவம்பர் 26ஆம் தேதி மதியம், உருவத்தில் சிறிய மனிதர் ஒருவர், ஓர் இளம் ஜமீன்தாரை கொல்கத்தா (அன்று கல்கத்தா) ரயில் நிலையத்தில் சட்டென உரசிச் சென்றார். 20 வயதான அமரேந்திர சந்திர பாண்டேவின் வலது கையில் ஊசி குத்தியது போல ஒருவித வலி ஏற்பட்டது. காதி ஆடை அணிந்திருந்த அந்த மனிதர் ஹவுரா ரயில் நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கரைந்து போனார். "யாரோ என்னைக் குத்தி இருக்கிறார்கள்" என ஆச்சர்…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தேடுதல் நோட்டீஸ்: “எங்கு வரவேண்டும் என சொல்லுங்க மோதிஜி” என பதில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானவுடன், மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கை குறித்து விசாரிக்குமாறு நேரடியா…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம் : இன்போசிஸ் தலைவர்! Nov 16, 2022 09:14AM IST ஷேர் செய்ய : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானம் என்று இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான மருந்து நிறுவனம் ஹரியானாவில் உள்ள மைய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஆகும். இதுகுறித்து நேற்று (நவம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்ற இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ப…
-
- 0 replies
- 206 views
-
-
வாரணாசியில் இருக்கும் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்து, ஆற்றின் அகலம் வழமையான 70-80 மீட்டரிலிருந்து 30-35 மீட்டராக குறைந்துள்ளது. கங்கையில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருக்கும்போது, அங்கிருக்கும் குப்பைகள் வெளியே தெரிவதில்லை. ஆனால், தற்போது வெப்பத்தின் காரணமாக, நீர்மட்டம் குறைந்திருப்பதால், கங்கையின் யதார்த்த நிலை தெரியவந்துள்ளது. அத்துடன், ஆற்றின் கரைகளிலும் குப்பைகள் நிறைந்து கிடைக்கின்றன. https://tamil.news18.com/photogallery/trend/record-drop-in-gangas-water-level-what-is-the-reason-1499663-page-3.html ************** மோடிஜீ வேற தன்னை கங்கா தேவி மகனாக தத்து எடுத்து விட்டார் என்று தேர்தலிற்கு முன்னும்…
-
- 0 replies
- 362 views
-
-
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இத…
-
- 0 replies
- 202 views
-
-
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்ட…
-
- 0 replies
- 63 views
-
-
பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2022, 10:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பதவி விலகிய கையோடு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கே …
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை – பாகிஸ்தான் : February 15, 2019 ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வேகமாக வந்து மோதியதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த nநிலையில் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்…
-
- 0 replies
- 568 views
-
-
குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வைத்த விருந்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு விவகாரங்களில் ஒருவரையொருவர் அமித் ஷாவும், மம்தாவும் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வரத்தில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாதலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந…
-
- 0 replies
- 194 views
-
-
இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் 5 ஜனவரி 2021 பட மூலாதாரம், GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொட…
-
- 0 replies
- 302 views
-