Jump to content

ஆந்திரா ரயில் விபத்து: உண்மையில் என்ன நடந்தது? - கள நிலவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆந்திரா ரயில் விபத்து
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்ரீனிவாஸ் லக்கோஜு
  • பதவி, பிபிசிக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் ஸ்ரீனிவாஸ் லக்கோஜு தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்:

இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நானே அங்கு 11 சடலங்களை பார்த்தேன். நசுங்கிய பெட்டிகளில் ஒருவர் காணப்படுவதாகவும், அந்த நபரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் நிவாரணப் பணியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மீட்புப் பணியாளர்கள் ரயிலின் பெட்டிகளைத் துண்டித்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்ததையறிந்த கண்டகாபள்ளி மற்றும் அலமாண்டா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அங்கு வருவதற்கு முன், அந்தப் பகுதி பொதுமக்கள் அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.

 
ஆந்திரா ரயில் விபத்து
படக்குறிப்பு,

இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறினாலும், பிபிசி செய்தியாளர் 11 சடலங்களைப் பார்த்ததாகக் கூறுகிறார்

பாலசோர் ரயில் விபத்தை நினைவூட்டும் சம்பவம்

விபத்து நடந்த இடத்தை அடைய, கண்டகாபள்ளியிலிருந்து வயல்வெளிகள், தோட்டங்கள் வழியாகச் செல்லும் சிறிய மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

ஒரு கிலோமீட்டர் தொலைவில், சிவப்பு மற்றும் நீல விளக்குகளுடன் பத்து ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டன. அவர்களுக்கு இடையே தரையில் கிடந்த இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிறிது தூரம் சென்றதும் மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதில், விபத்தின் அளவு புரிந்தது.

அங்கிருந்து இன்னும் கால் கிலோமீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி நடந்தபோது விபத்து நடந்த இடம் தெரிந்தது. சிறிது தூரத்தில் இருந்து காட்சியைப் பார்த்தபோது, இந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய ரயில் விபத்துகளில் ஒன்றான ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து நினைவுக்கு வந்தது.

பாலசோரைப் போலவே, இங்கும் ரயில் பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே சறுக்கியிருந்தது. இது ஒரு மினி பாலசோர் ரயில் விபத்து என்று உணர்ந்தேன்.

சம்பவ இடத்தை அடைந்து, அங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்களும் இந்த விபத்தை பாலசோர் ரயில் விபத்துடன் ஒப்பிட்டுப் பேசினர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 
ஆந்திரா ரயில் விபத்து
படக்குறிப்பு,

போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அங்கு வருவதற்கு முன், அந்தப் பொதுமக்கள் அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்

ஐந்து நிமிடம் சென்றிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார்

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது, அதே தண்டவாளத்தில் வந்த ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த ரவி என்பவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் கண்டகாபள்ளி அருகே இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இறந்தவர்களில் முதலில் அடையாளம் கண்டந்து தங்களது சகோதரரும் நண்பருமான ரவியை.

“ரவியும் நாங்களும் தினமும் பலாசா பாசஞ்சரில் ஏறி விசாகப்பட்டினத்துக்கு வேலைக்குச் செல்வோம். வேலை முடிந்ததும், மாலையில் மீண்டும் பலாசா பாசஞ்சரில் ஏறி எங்கள் ஊரான கந்தகப்பள்ளியை அடைவோம். விபத்து நடந்த இடத்தில் இருந்து எங்கள் ஊர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இன்னும் ஐந்து நிமிடம் சென்றிருந்தால் எங்கள் ஊரில் ரயில் நின்றிருக்கும். ரவி பத்திரமாகக் கீழே இறங்கியிருப்பான்,” என அவரது தோழி கவுரி நாயுடு பிபிசியிடம் கண்ணீருடன் கூறினார்.

பிபிசி களத்தை அடைந்த போது கௌரி நாயுடுவும் வேறு சில நண்பர்களும் ரவியின் உடல் அருகே காத்திருந்தனர்.

 

ஞாயிற்றுக்கிழமை வந்த அலுவலக அழைப்பு

கண்டகாபள்ளியில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

அவர்களில் ரவியும் ஒருவர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலை. ஞாயிறு விடுமுறை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்றும் வேலைக்குச் சென்றதனால் இந்த விபத்தில் அவர் உயிர் இழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் கண்ணீர் விட்டனர்.

“ரவி விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரிக்கல் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தில் இருந்து ரவிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவசர வேலை இருப்பதால், இந்த லீவை இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளச் சொல்லி அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கூறினர்,” என்கின்றனர் அவரது நண்பர்கள்.

“பத்து வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் ரவி உடனே வேலைக்குச் சென்றான். ரவியைப் போல வேறு சிலரும் கம்பெனி அழைத்தால் உடனே செல்கின்றனர். காலையில் சென்ற ரவி மாலையில் உயிர் இழந்தார். இது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்,” என்று கிராம மக்கள் வேதனையில் கூறுகின்றனர்.

ஆந்திரா ரயில் விபத்து
படக்குறிப்பு,

உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளிடம் இந்த விபத்தை பாலசோர் ரயில் விபத்துடன் ஒப்பிட்டுப் பேசினர்

‘என்னுடன் வந்தவர்களைக் காணவில்லை’

ரவியைப் போலவே சிப்புருபள்ளியைச் சேர்ந்த நாகேஸ்வரராவும் அவரது மைத்துனரும் வேலைக்காக தினமும் விசாகப்பட்டினம் செல்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக பலாசா பயணிகள் ரயிலில் விசாகப்பட்டினம் சென்று வருகின்றனர். நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வேலைக்கு வாருங்கள் என்று கண்டகாபள்ளியைச் சேர்ந்த ரவிக்கு வந்தது போலவே நாகேஸ்வராவுக்கும் அவரது மைத்துனருக்கும் அழைப்பு வந்தது. இருவரும் விபத்தில் சிக்கியதில் நாகேஸ்வர ராவின் மைத்துனர் உயிரிழந்தார். நாகேஸ்வரராவ் உயிர் தப்பினார்.

பிபிசியிடம் பேசிய நாகேஸ்வரராவ், “நாங்கள் அனைவரும் கொத்தனார்கள். ரயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது. எல்லாம் கீழே சரிந்து விழுந்தது. அப்போது உற்றுவான அதிர்வில் என் மைத்துனர் கீழே விழுந்தார். இறந்துவிட்டார். மற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து பிழைத்தோம். எங்கள் பெட்டியில் இருந்த மற்ற மூவரையும் காணவில்லை. மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர்,” என்றார்.

நாகேஸ்வர ராவ் காணாமல் போன தன் சகாக்களைத் தேடி வருகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cm5k4d81kxlo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 MAY, 2024 | 04:07 PM   கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்  உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும்  பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/183882
    • சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்! 18 MAY, 2024 | 03:36 PM   (நெவில் அன்தனி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன. இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும். உதாரணத்திற்கு வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாக இருந்தால் பெங்களூர் 2 18 ஓட்டங்களால் வெற்றிபெறவேண்டும். பதிலளித்து துடுப்பெடுத்தாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றிபெற வேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகள் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த 5 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே ஒரு தடவையே சென்னையை வெற்றிகொண்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டி நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும். இரண்டு அணிகளினதும் இந்த வருட ஐபிஎல் முடிவுகளைப் பார்க்கும்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் கடந்த 5 போட்டிகளில் மேடு பள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த போட்டி முடிவுகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது. இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியுடன் சென்னை வெளியேறினால் அப் போட்டி 43 வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் மஹேந்த்ர சிங் தோனிக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என கருதகப்படுகிறது. ஆனால், அது நிச்சயம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருவேளை இது அவரது கடைசியாகப் போட்டியாக இருந்தால் தோனியும் கோஹ்லியும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும் கடைசிப் போட்டியாகவும் இது அமையும். அணிகள் (பெரும்பாலும்) சென்னை சுப்பர் கிங்ஸ்: ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), ரச்சின் ரவிந்த்ரா, டெரில் மிச்செல் அல்லது அஜின்கியா ரஹானே, ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி, மிச்செல் சென்ட்னர், ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்ஷன, துஷார் தேஷ்பாண்டே. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), க்ளென் மெக்ஸ்வெல், ரஜாத் பட்டிடார், மஹிபால் லொம்ரோர், கெமரன் க்றீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், கரண் ஷர்மா, மொஹமத் சிராஜ், லொக்கி பேர்கசன். https://www.virakesari.lk/article/183877
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • எலுமிச்சை, இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு! சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/301947
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.