அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி சித்தரிக்கும் படம் மட்டுமே டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்…
-
- 0 replies
- 380 views
-
-
சிறுவர்களை... கொத்தடிமைகளாக, விற்க முயற்சி! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226314
-
- 0 replies
- 376 views
-
-
ராஜஸ்தானில்... மின்னல் தாக்கி, 18 பேர் உயிரிழப்பு! ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கோடா, ஜலாவர், பரண் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228107
-
- 0 replies
- 575 views
-
-
எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 வங்கதேச படகுகளை ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் கைப்பற்றிய நிலையில், படகில் இருந்த சுமார் 360 கிலோகிராம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 88 வங்கதேச மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ச்சியாக வி…
-
- 0 replies
- 174 views
-
-
நடப்பாண்டில்... "40 ஆயிரம் கோடி டொலரை" தாண்டியது, இந்தியாவின் ஏற்றுமதி! இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டொலரை தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், இந்தியா முதன்முறையாக நாற்பதாயிரம் கோடி டொலர் என்னும் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மதிப்பில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 740 கோடி ரூபாயாகும். இந்தச் சாதனையை எட்டியமைக்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், …
-
- 0 replies
- 128 views
-
-
உள்நாட்டு தொழிநுட்பத்தில்... தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை, வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு! நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததுடன், சுவீடன் தயாரிப்பான Bofors பீரங்கிகளுக்கு பதிலாக இது பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டு தொழிநுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பீரங்கியை தயாரித்து உள்ளது. டாடா மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்களின் உதவியுடன் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279654
-
- 0 replies
- 169 views
-
-
டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…
-
- 0 replies
- 164 views
-
-
இந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானுக்கு வழங்கிய சிப்பாய் கைது October 18, 2018 1 Min Read இந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றும் அவரது பெயர் மற்றும் தகவல்களை ராணுவத் தரப்பு வெளியிடவில்லை. அவர் அடிக்கடி பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசியதனையடுத்து ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டதனை தொடர்ந்து …
-
- 0 replies
- 342 views
-
-
உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி…
-
- 0 replies
- 962 views
-
-
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் 129 பேரையும் விடுவிக்குமாறு அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் விடுதலை குறித்த கடிதமொன்றை டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இந்திய அரசு அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் நலன் மற்றும் மரியாதை ஆகியவை குறித்து கவலையடைகிறோம். இதனால் இந்திய தூதரக அதிகாரிகள், கைது செய்யப்பட்டோரை சந்திக்க தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் மேலும் கைது செய்யப்பட்டடுள்ள மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராக இந்தியாவுக்கு அனு…
-
- 0 replies
- 877 views
-
-
இந்தியாவில் இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கும் ராஜஸ்தான் இளைஞன் இந்தியாவில் மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் (21 வயது), தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார். இந்நிலையில் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதனூடாக அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக இருந்த 23 வயதை …
-
- 0 replies
- 307 views
-
-
சீனா, பாகிஸ்தானுடன் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.! பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டதாக உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்தது போல் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனும் போர் புரிவதற்கான தேதியை …
-
- 0 replies
- 305 views
-
-
இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ள சீனா, மாசுபட்ட தண்ணீரால் வுகான் வரை பரவியதாக கூறியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட…
-
- 0 replies
- 540 views
-
-
பிரபல தொழிலதிபர்களின் சொத்துக்கள்... பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு! பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக அமுலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 18 ஆயிரத்து 170 கோடியே 2 இலட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதில் 329 கோடியே 67 இலட்சம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 9,041.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வழங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விஜய்மல்லையா வழக்கில் 25 ஆம் திகதிக்…
-
- 0 replies
- 172 views
-
-
ரஷ்யாவுக்கு எதிராக... மோடியை அழைக்க, தீர்மானம்? ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 26 ஆம் திகதி பவேரியன் ஆல்ப்ஸில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279544
-
- 0 replies
- 458 views
-
-
இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆசிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வரும் இந்தோனேசியாவின் லெம்பெக் தீவில் நேற்று மாலை மீண்டும் 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லெம்பெக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீ…
-
- 0 replies
- 435 views
-
-
எம்என்சி நிறுவனங்களிடம் கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை கேட்கும் அமைச்சர் – தமிழர்களுக்கு பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024 கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது உண்மையில் சாத்தியமா? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்? சமீப காலமாகவே கர்நாடக மாநிலத்தில…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது. எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 666 views
-
-
மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்! பதிவேற்றுனர்: தமிழ்விழி திகதி: 09 Jun, 2025 மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் . வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொ…
-
- 0 replies
- 154 views
-
-
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்…
-
- 0 replies
- 173 views
-
-
அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் …
-
- 0 replies
- 292 views
-
-
டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு! துரை.நாகராஜன் போராட்டம் போராட்டம் பிரீமியம் ஸ்டோரி இந்தப் போராட்டத்தை நிலைகுலைய வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் விளையாட்டுக் காட்டுவதுபோல தந்திர வேலைகள் சிலவற்றை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கையில் எடுத்தது. ஆனால், அவையெல்லாம் துளியும் பலன் கொடுக்கவில்லை. உறுதியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர் விவசாயிகள். வழக்கம்போல ஆன்ட்டி இன்டியன் உள்பட பல்வேறு சித்துவேலைகளைக் காட்டியும் விவசாயிகளிடம் மோடியின் பாச்சா பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமே... தற்போது விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வடிவமே! எப்போதுமே போராட்டம் …
-
- 0 replies
- 327 views
-
-
காஷ்மீர் அரசியல் மாற்றத்தைக் காணுமா? ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவா…
-
- 0 replies
- 393 views
-
-
அருணாச்சல இளைஞரை தேடும் இந்திய ராணுவம் - எந்த வேகத்தில் முயற்சி உள்ளது? திலீப் குமார் சர்மா பிபிசி இந்திக்காக 21 ஜனவரி 2022 பட மூலாதாரம்,TWITTER@TAPIRGAO படக்குறிப்பு, மிரம் தரோம் அசாமின் தேஜ்பூரில் உள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இது குறித்து, "அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் தரோம், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியதால் சீன ராணுவமான பிஎல்ஏவால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. விதிமுறைகளின்படி, அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அவரது நினைவு தினம், ஆப்கானிஸ்தான் முழுவதும் 'மசூத் தினமாக' கொண்டாடப்பட்டு வந்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 10 செப்டெம்பர் 2023, 04:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும். இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய போக்குவரத்து வட்டத்திற்…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-