Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க ஜனாதிபதிக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையைக் காட்டுகிறது – சிவசேனா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மனநிலையைக் காட்டுகிறது என சிவசேனா விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் அரசு பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் ட்ரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி…

  2. ஜம்மு – காஷ்மீருக்கென இராணுவத்தில் தனியாக ஒரு படைப்பிரிவு உருவாக்கப்படும்- பிபின் ராவத் ஜம்மு – காஷ்மீருக்கென இராணுவத்தில் தனியாக ஒரு படைப்பிரிவு உருவாக்கப்படுமென முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்தும் வகையில் அந்த பிராந்தியத்துக்கென, இராணுவத்தில் தனி படைப்பிரிவு அமைக்கப்படும். விமானப் படைக்கான தனிப்பிரிவு, அடுத்தாண்டு ஆரம்பத்தில் செயற்படுத்தப்படும். இதனூடாக நீண்ட துார ஏவுகணை மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் அனை…

  3. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவிற்கு உதவ இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விமானம் இந்தியா திரும்பும்போது விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1770 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,048 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்…

  4. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு! நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் மரண தண்டனையும், அதன்பின் பெப்ரவரி 1ஆம் திகதி 2 ஆவது மரண தண்டனைக்கானக்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தங்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையைத் தள்ளிப்போட்டனர். இறுதியாக ஜனவரி 31 ஆம் திகதி, விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்…

  5. மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த பிரிட்டன் எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், துபாயில் இருந்து நேற்று இந்தியாவுக்கு வந்தார். எனினும், விமான நிலையத்தில், அவரிடம் முறையான, 'விசா' இல்லை எனக் கூறிய அதிகாரிகள், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர் மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை க…

  6. என்னதான் நடந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாற்றப்படாது- மோடி திட்டவட்டம் எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து இரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு இரத்து ஆகியவற்றைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. …

  7. ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை …

    • 3 replies
    • 680 views
  8. தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.தலைவர்களே காரணம்- அமித்ஷா டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.தோல்வியடைந்ததற்கு பா.ஜ.க.தலைவர்களே காரணம் என அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க.வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றமை பா.ஜ.க.தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷாவிடம் டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில…

  9. இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் – இந்திய அமைச்சரவை அனுமதி இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழுத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருமான வரி மீதான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நெறிமுறையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். …

  10. பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு by : Dhackshala டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, கெஜ்ரிவால் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தி…

  11. குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்தது ஏன்? – நீதிமன்றம் கேள்வி! : Krushnamoorthy Dushanthini குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்ததன் காரணத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தொடர்பான தகவலை வெளியிடும்படி 2018-ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் செயற்படுத்தவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களில் அபாயகரமான அளவு உயர்ந்…

  12. ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்தவா்களில் 2 இந்தியா்கள் உள்ளிட்ட 74 பேருக்கு ‘கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே ஜப்பானிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ என்ற குறித்த சொகுசு கப்பல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானிய கடற்கரைக்கு சென்றது. அந்தக் கப்பலில் கடந்த மாதம் ஹொங்கொங்கில் ஏறிய பயணியொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து …

  13. இந்தியப் பிரதமருக்கு புகழாரம் சூட்டிய ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் எனவும் நல்ல நண்பர் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய வருகையின்போது ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தனது இந்திய வருகை குறித்து ட்ரம்ப் கூறுகையில், “நான் இந்தியா செல்கிறேன். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 இலட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார். பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச் சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். …

  14. ‘மக்கள் பாஜக-வை நிராகரித்து விட்டனர்’ - ஆம் ஆத்மி, கேஜ்ரிவால் வெற்றி குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது. கடும் பிரச்சாரங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிலைப் படுத்திய கேஜ்ரிவாலின் வாக்குறுதிகளுக்கும், கடந்த ஆட்சிக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து …

  15. பரணி தரன் பிபிசி தமிழ் Delhi Results ஆம் ஆத்மி -62 பாஜக-07 Cong: 0 யார் இந்த கேஜ்ரிவால்? ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. 1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகி…

  16. சபரிமலை உள்ளிட்ட அனைத்து சமய விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் – உச்சநீதிமன்றம்! சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது உள்பட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறு ஆய்வு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும். கேள்விகளை விசாரிக்க முடியாது என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வழக்கறிஞர்களின் வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி, சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் மட்டுமின்றி…

  17. வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால் பாதி வங்கதேசமே காலியாகிவிடும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் ரவிதாசர் ஜெயந்தியையொட்டி நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது, 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் வாழும் 130 கோடி இந்தியர்களுக்கும் எதிரானது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டியால் நிரூபிக்க முடியுமா?'என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பேசிய அவர், வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்தால், அந்நாட்டு மக்களில் பாதி பேர் இங்கு வந்துவிடுவார்கள்'. அதற்கு யார் பொறுப்பேற்க முடியும்? ராகுல் காந்தியா? அல்லது சந்திரசே…

    • 0 replies
    • 317 views
  18. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக தகவல்! சீனாவிலிருந்து கொரானா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 17ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்கள் வாயிலாக கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனியின் பெர்லினை சேர்ந்த ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், விமானப் போக்குவரத்தை மாதிரியாக கொண்டு, சீனாவை தவிர்த்து கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள 30 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ…

  19. கொரோனா வைரஸ் : பாகிஸ்தான் மாணவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி சார்பில் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இதற்கு எவ்வித பதிலும் வழங்காத நிலையில், குறித்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவு…

  20. ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க தயார்!- இந்தியா ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளில்லா விமானங்கள், அதிவேக ரோந்து படகுகள், இராணுவ போா் விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை அதிகரிக்க இந்தியா தயாராக இருக்கிறது. இதனூடாக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் நட்பு மேலும் வலுப்படும். இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒடுக்கி அம…

  21. மோடியை விமர்சித்தமைக்காக பாடசாலை மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை! மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தினை விமர்சிக்கும் வகையில் நாடகம் நடித்தமை குறித்து பாடசாலை மாணவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை சுமார் 85 மாணவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக பொலிஸார் தேச துரோக வழக்கினையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள சாஹீன் என்ற பாடசாலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் வகையில், மேடை நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசுவ…

  22. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தின் அவசியம் தொடர்பாகவும் பேசியுள்ளார். பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்ததாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை மறைமுகமாக விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவரது உரை பரபரப்பை ஏற்படுத்தி வரகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக உரை நிகழ்த்திய பிரதமர் மோடி அதற்கு ஜவகர்லால் நேரு, இந்திய பிரிவினை, 1975-ல் ஏற்பட்ட நெருக்கடி நிலை, 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் உள்ளிட்டவற்றை மேற்கோ…

    • 0 replies
    • 447 views
  23. புற்றுநோய்த் தடுப்பே சிறப்பு! By மருத்துவர் சோ. தில்லைவாணன் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய்க் கண்டுபிடித்தலை ஊக்குவிக்கவும், தடுக்கவும், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் மட்…

  24. நிர்பயா வழக்கு – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், மத்திய அரசின் மனு மீது, டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் தொடர்ச்சியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை அடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த முதலாம் திகதி சந்தேகநபர்களை திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய…

  25. சீனாவில் இருந்து பயணிகளை ஏற்றி வர விமானங்களுக்கு தடை: மத்திய அரசு உத்தரவு ! புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தியா வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின், ஹூபெ மாகாணத்தில் கரோனா வரைஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை, ஏர் இந்தியா போயிங் 747 ரக சிறப்பு விமானத்தின் மூலம் சனிக்கிழமை தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் தனி மருத்துவ முகாம்களு…

    • 0 replies
    • 322 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.