அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
பஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனி மற்றும் இத்தாலி சென்று திரும்பிய பல்தேவ் சிங், ஒரு மத போதகர். அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும் அந்த முதியவர் அதனை கேட்கவில்லை என பிபிசி பஞ்சாபி சேவை செய்தியாளர் அர்விந்த சப்ராவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பஞ்சாபில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று இரு…
-
- 0 replies
- 247 views
-
-
பட மூலாதாரம்,ANI 12 செப்டெம்பர் 2024, 11:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதாக பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புண்யாவதி தெரிவித்தார். செப்டம்பர் 10 அன்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கை…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
தங்கள் விமானங்களில் பயணிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் புனித நீரான ஜம் ஜம் நீரை எடுத்து வரக்கூடாது என ஏர் இந்தியா அறிவித்திருந்தது விமர்சனத்துக்கு ஆளான நிலையில், ஜம் ஜம் நீரை எடுத்துவரலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி ஏர் இந்தியா அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜெட்டாவில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இயங்கும் தங்கள் நிறுவன விமானங்களில் ஹஜ் யாத்திரையின் புனித நீரான ஜம் ஜம் நீரை கொண்டு செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ம் தேதிவரைக்கும் இந்த தடை நீடிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தேர்க்கு இந்தியாவை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம…
-
- 0 replies
- 246 views
-
-
மஹராஷ்டிராவில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனாவுக்கு இலக்கு! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 53 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உடபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முன்னின்று செயற்படும் அதேவேளை, ஊடகங்களும் இந்த இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றன. இதன்போது செய்தியாளர்கள் களத்திற்கு நேராகச் சென்று ச…
-
- 0 replies
- 246 views
-
-
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் இந்துக்களை குடியேற்றி, முஸ்லிம்களை சிறுபான்மையாக்க இந்தியா முயற்சிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்தை பாகிஸ்தான் பிரதமர் தடுத்து நிறுத்துவார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப…
-
- 0 replies
- 246 views
-
-
பிரதிநிதித்துவப் படம். மொரேனா துபாயிலிந்து திரும்பி வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா நகரில் நடந்துள்ளது. இதுகுறித்து மொரேனா மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.எஸ்.பக்னா நிருபர்களிடம் கூறியதாவது: ''மொரேனா நகரைச் சேர்ந்த நபர் துபாயில் ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் தாய் இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அவரின் தாய் இறந்தபின் 13-வது நாளில் அவர் சார்ந்திருக்கும் மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-…
-
- 0 replies
- 246 views
-
-
கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 08:34 AM பாட்னா பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை…
-
- 0 replies
- 246 views
-
-
அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்! தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்கள் பதற்றங்களை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் புதன்கிழமை (15) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன்படி, எல்லைப் பதற்றங்களைத் தணிக்க ஆப்கானிஸ்தான் தரப்பு வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இஸ்லாமபாத் வெளிவிவகார அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அதே நாளில் சமூக ஊடகங்களில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாக…
-
- 0 replies
- 246 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது. மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் …
-
- 0 replies
- 246 views
-
-
அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு! கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும். அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247151
-
- 0 replies
- 246 views
-
-
இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…
-
- 0 replies
- 246 views
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது. எனினும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமூக மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுத்தது. எனவே மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இந்து மக்களுக்கு குடியுரிமை அளிக்க ராஜஸ்தான் அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் சட்டப்பேரவ…
-
- 0 replies
- 246 views
-
-
பால்கரில் சாதுக்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரி மனு: மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இரு சாதுக்கள் உள்பட 3 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கும்பலால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை காண்டிவாலி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் சிக்னே மகராஜ் கல்பவிருக்சகிரி (வயது 70), சுஷில் கிரி மகராஜ் (வயது 35) ஆகியோர் ஓட்டுநர் நிலேஸ் டெல்கடே (வயது 30) உடன் சேர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ந்த ஒரு இறுதிச்சடங்கிற்கு காரில் கடந்…
-
- 0 replies
- 245 views
-
-
போரிஸ் ஜான்சன் - நரேந்திர மோதி சந்திப்பு: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம்? ககன் சபர்வால் தெற்காசிய செய்தியாளர், பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த இரு நாள் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த இரு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரிட்டன் எடுத்துள்ள நிலையில் பிரிட்டன் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. யுக்ரேன் போர் தொடங்கியதி…
-
- 3 replies
- 245 views
- 1 follower
-
-
25 APR, 2025 | 10:11 AM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தட…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…
-
- 0 replies
- 245 views
-
-
முதல் வழக்கு.. மகன் பட்டாசு வெடித்ததற்கு தந்தை மீது வழக்கு போட்டது டெல்லி போலீஸ்!சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் நபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகன் வெடித்த பட்டாசுக்கு அவனது தந்தை மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது. அதன்படி தீபாவளி நேரத்தில் 2 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.இந்த 2 மணி நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்…
-
- 0 replies
- 245 views
-
-
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் ஜேர்மனிக்கு இடையில் காற்றாலை, சூரிய ஒளி திட்டம் என பல ஒப்பந்தங்கள்…
-
- 0 replies
- 245 views
-
-
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஜெகன்மோகன் சந்திப்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக் கிறார். அப்போது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தும் அவர் பேசவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பே ரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். இது போல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் கட்சி வெற்…
-
- 0 replies
- 245 views
-
-
மலிவு விலை செயற்கை சுவாசக் கருவி ‘ஜீவன்’: கரோனா நோயாளிகள் உயிரைக் காக்க ரயில்வேயின் புதிய முயற்சி: ஐசிஎம்ஆர் ஒப்புதலுக்காக காத்திருப்பு ரயில்வே தயாரித்த செயற்கை சுவாசக் கருவியின் மாதிரிப் படம். புதுடெல்லி கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக மலிவு விலையில் செயற்கை சுவாசக் கருவியை ரயில்வேயின் கபூர்தலா ரயில் தொழிற்சாலை தயாரித்துள்ளது. இந்த மலிவு விலை செயற்கை சுவாசக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்தால், ரயில்வே உற்பத்தியைத் தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு 100 கருவிகளைத் தயாரிக்க முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு தீவி…
-
- 0 replies
- 244 views
-
-
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மனு - விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA (இன்று 04/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.) ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோ…
-
- 1 reply
- 244 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் முழுவதும் இருந்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நோக்கி பேரணியாக செல்கின்றனர். 8 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதனால், அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், பதிலடியாக காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முழுவதும் இருந்து இஸ்லாமாபாத்தில் பல ஆயி…
-
- 3 replies
- 244 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் : அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலேயே அதிக நோயாளர்கள் பதிவு! by : Krushnamoorthy Dushanthini அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளதாக பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளதாக இந்துஸ்தான் புள்ளிவிபர பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. இதன்படி “அமெரிக்காவில் 16, 923 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ள அதேவேளை இந்தியாவில் 8, 944 பேர் உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்க…
-
- 0 replies
- 244 views
-
-
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.. January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்ச…
-
- 0 replies
- 243 views
-