தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…
-
- 25 replies
- 6.9k views
-
-
http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49 எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன் Friday, 09 June 2006 சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
-
- 4 replies
- 2.1k views
-
-
பேரன் பேர்த்தி ..! கதை பற்றி :: பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.. மேலதிக விபரம்:: புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகார…
-
- 11 replies
- 3.9k views
-
-
எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார் திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்ற…
-
- 2 replies
- 4.5k views
-
-
நீரைக்காணாத வேர்கள் http://www.londonbaba.com/neeraki/player.swf
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு செய்து உருவாக்கி அனுப்பியுள்ள "காதல் வளர்த்தேன்........." என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள் :arrow: http://www.firefoxhosting.com/song_vijay.mpg camera and editing : Vijay Ratnavel காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன் ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............ இனிய வாழ்த்துகள் ........... தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.
-
- 7 replies
- 3.5k views
-
-
இயக்குனர் பாரதிராஜா! - சின்னராசு செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள். அதுவரை சென்ன…
-
- 17 replies
- 6.4k views
-
-
சலனம் பற்றி வணக்கம் தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும். கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம். புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது. பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம். நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பத…
-
- 6 replies
- 2.5k views
-
-
North Country (திரைப்படம்) - டிசே தமிழன் நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது. தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க ந…
-
- 0 replies
- 1.6k views
-
-
78வது ஓஸ்கார் திரைப்பட விழா பற்றிய தகவல்களுக்கு :- http://www.oscars.com/ http://www.oscars.org/ http://www.oscar.com/nominees/list.html
-
- 2 replies
- 1.9k views
-
-
-
சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்…
-
- 5 replies
- 2.4k views
-
-
மா(!)த்ருபூமி அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து... ' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எ…
-
- 16 replies
- 4.5k views
-