நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கண்களும் கண்ணாடியும் பற்றி செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது. ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன. நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள். காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக …
-
- 3 replies
- 2.2k views
-
-
பசியும் உணவுப் பழக்கங்களும் நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ! நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத…
-
- 0 replies
- 973 views
-
-
வணக்கம், இன்னொரு ஆராய்ச்சி... இப்ப எங்கள் எல்லாருக்கும் இருந்திட்டு தலையிடி, காய்ச்சல் வருகிது. சிலர் அடுத்தநாள் டொக்டரிட்ட போய் காட்டுவீனம். ஆனால், பலர் அப்படி செய்வதில்லை. பேசாமல் வருத்தத்தை அனுபவித்து கஸ்டப்பட்டுக்கொண்டு இருப்பீனம். இல்லாட்டி தங்கட பாட்டில ஏதாவது மருந்து குளிகைகளை போடுவீனம். இப்படி போடப்படுகிற மருந்துக் குளிகைகளில பிரபல்யமானது பனடோ, தைலனோ, அஸ்பிரின்.. இவை.. நான் உடனடியாக மருந்து குளிகைகள் போடுவதில்லை. டொக்டரிட்டையும் போவதில்லை. வருத்தம் ஓரளவு துன்பம் தரத்தொடங்கியதும் முதலில் பனடோல் அல்லது தைலனோலை நாடுவேன். வருத்தம் எக்கச்சக்கமாய் முத்தியபின் தான் டொக்டரிடம் ஓடுவது. ஆ... அந்த அனுபவம் பயங்கரமானது... உடம்பில குளிர் ஊதல் அடிக்க.. …
-
- 19 replies
- 6.1k views
-
-
வணக்கம், ஒரு சிறிய ஆராய்ச்சி.. உங்களுக்கு வாயில் சூட்டுப்பரு வருவதற்கான காரணங்கள் என்ன என்று தெரியுமா? வாய் என்றால் நாக்கு, உள்சொண்டுகள், முரசு.. இப்படி வாயினுள் காணப்படும் பகுதிகளில் காயம் மாதிரி வந்து துன்பம் ஏற்படுதல். பலர் குளிக்காவிட்டால் சூட்டுப்பரு வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள், குளிக்காவிட்டால் சூட்டுப்பரு போடும் என்று சொல்வார்கள். ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், நான் ஆகக்குறைந்தது ஒன்றுவிட்ட ஒரு நாளாவது குளிப்பேன். ஆனால், எனக்கு இருந்திட்டு சூட்டுப்பரு வரும். பல வருடங்களாக நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சூட்டுப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணங்களாக கீழ்வருபவை உள்ளன. ஆளுக்கு ஆள், இதற்கான காரணிகள் வேறுபடலாம்.…
-
- 2 replies
- 5.2k views
-
-
உண்ணாநோன்பு மருத்துவம் - பேராசிரியர் யூரி நிக்கோலயேவ் உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும். இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று நான் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர். உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது. வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல் நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுக…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீரிழிவு நோய்க்கும் வைட்டமின் B1 க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்னும் அரிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். மருத்துவ வரலாற்றிலேயே நீரிழிவு நோய்க்கும் ஒரு வைட்டமின் சத்துக்கும் இடையே உள்ள தொடர்பைச் சொல்லும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து இந்த உயிர்ச்சத்து பதினைந்து மடங்கு அதிகமாய் வெளியேறுவதால் தான் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த சத்து நீரிழிவு நோயாளிகளை விட்டு வெளியேறாமல் இருந்தால் இதயம், கண், சிறுநீரகங்கள், நரம்பு போன்ற நோய்கள் இவர்களைத் தாக்கும் பாதிப்பு குறைவு என்றும் இவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி, தானிய வகைகள் போன்றவற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஈகரை இணையதளம் வழங்கும் காய்கறி மருத்துவம் கசப்பு அமுதம் பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறhர்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறhக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை…
-
- 0 replies
- 4.3k views
-
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்! புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலு…
-
- 13 replies
- 3.1k views
-
-
-
-
இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) …
-
- 1 reply
- 1.5k views
-
-
குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு மாரடைப்பு வந்தபின்னர், ஒல்லியாக இருக்கும் நபர்களைவிட, குண்டாக இருப்பவர்களால் எளிதாகத் தாங்க முடிகிறது. அவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள டேவிட் ஷெபன் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள். ஒரு மனிதனின் பி.எம்.ஐ. என்று சொல்லப்படும், எடை, உயர கூட்டு அளவைக்கும், அவர் மாரடைப்பால் பாதிக்கும் போது அளிக்கப்படும் சிகிச்சைக்கும் தொடர்பு உள்ளது என்று இப்போது தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருந்தால், அவர்களுக்கு இருதயக் கோளாறு நிச்சயம் என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், மருத்துவமனையில் மாரடைப்புக்காக சேர்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின…
-
- 33 replies
- 10.2k views
-
-
அழகுக் குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். -------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். -------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். -----…
-
- 4 replies
- 2.3k views
-
-
120 நாட்களாக செயற்கை இதயத்துடன் புதன், 29 ஆகஸ்ட் 2007( 15:55 ஈஸ்T ) Wஎப்டுனிஅ செயற்கை இதயத்துடன் 120 நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். செயற்கை கை, கால்கள், செயற்கை எலும்பு என மனிதனின் எத்தனையோ பாகங்கள் செயற்கையாக வந்து விட்டன. மனிதனின் உயிராகக் கருதப்படும் இதயமும் தற்போது செயற்கை எனும் அதிசயத்திற்கு தலை வணங்கிவிட்டது. ஆம் செயற்கை இதயம்தான். அந்த செயற்கை இதயத்தைப் பொருத்திக் கொண்டுள்ள ஒரு சிறுவன் லண்டனில் 120 நாட்களாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்பது மற்றுமொரு அதிசயமே. பிறந்த 8 மாதங்களே ஆன ஜாக் வெலம் என்ற குழந்தைக்கு இதய தசைகள் வீக்கமடைந்து மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நம் சருமம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும். தேன் தரும் அற்புத நனமைகளை சற்று தெரிந்து கொள்வோம். தோல் தொய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டதே என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது. இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன், ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சோப்புத் துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கு…
-
- 9 replies
- 6k views
-
-
பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்! லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். · கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது. குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும். · மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில…
-
- 50 replies
- 8.9k views
-
-
ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர். சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சாக்கலேட்டுகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வுபூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பரம்பரையில் யாருக்க…
-
- 0 replies
- 4.7k views
-
-
நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி! தினமும் காலையில் ஈரமான புல்வெளியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் நாம் நடப்பது என்பது எல்லோர் வாழ்விலும் ஏற்படும் ஒரு அனுபவமாகும். இந்த `நடக்கும்' தியானத்தை நாம் தினமும் செய்து வந்தாலே போதும். நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம். நடப்பது என்ற செயல் ஒரு உடற்பயிற்சி தொடர்புடைய செயல் ஆதலால் நம்முடைய தினசரி பழக்கங்களுடன் இதையும் நாம் சுலபமாக நுழைத்து விடமுடியும். தினமும் சில மைல்கள் நடக்க வேண்டுமா? கீழ்வரும் ஒரு 10 வழிகளை கடைபிடியுங்கள் : முதலில் அனுமதி பெறுங்கள் : நீங்கள் இதுவரை உடற்பயிற்சியோ அல்லது நடப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்யாதவராகவோ இருந்தால், …
-
- 1 reply
- 2.6k views
-
-
வயதைச் சொல்லும் கழுத்து வியாழன், 9 ஆகஸ்ட் 2007 ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். தினசரி கழுத்துப் பயிற்சி தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை …
-
- 15 replies
- 5.1k views
-
-
புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் உலகில் அதிகம். இங்கிலாந்தில் மட்டும் நாளொன்றுக்கு 24பேர் புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிக்கை ஒன்று சொல்கிறது. இதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் வரவில்லை. அப்போ ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் கல்யாணகுமார் எப்படி புற்று நோயாளியான முத்துராமனைக் குணப்படுத்துகிறார் என்று கேட்டு விடாதீர்கள். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து அவ்வப் போது ஏதாவது அறிவித்துக் கொண்டிருப்பாhகள். சமீபத்தில் 1300 பேரைப் பரிசோதித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். பழவகைகள், காய்கறி வகைகளை உட்கொண்டால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உடலில் அதிகரிக்கும் என்ற கதை ஏற்கனவே அறிய…
-
- 6 replies
- 2.1k views
-
-
பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை…
-
- 3 replies
- 2.8k views
-
-
அஜினோமோட்டோ : ஒரு வரலாறு! குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது. சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர். ‘இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே’ என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர். சில மாதங்கள், வர…
-
- 3 replies
- 2.9k views
-