Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கொசு கடித்தால், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே ஏற்படும் அரிப்பை விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கும். நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும். அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்கு பிறர் சொறிந்து கொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கும் அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். …

  2. பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயம…

  3. உடலுறவும் உடல் நலமும்: பால்வினை நோய்கள் அறிகுறியே இல்லாமல் பரவினால் கண்டறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 13 ஜனவரி 2022 (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 …

  4. சில மாதங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் இன்னொரு நண்பரைச் சந்தித்ததை என்னிடம் விபரித்தார். அந்த நண்பர் முன்னர் இருந்ததை விட உடல் நன்றாக இளைத்து உற்சாகமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார். தான் உடல் இளைத்தமைக்கு இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானம் ஒன்றே காரணம் என்றும் அதை எனது நண்பரையும் பாவிக்கும்படியும் அறிவுரை கூறியுள்ளார். தாங்கள் இவ்வாறான பானங்களைப் பற்றிக் கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு ஒரு முறை வந்து பார்க்குமாறும் கேட்டுள்ளார். இச் சம்பவத்தை எனக்குக் கூறிய நண்பர் அப் பானத்தின் பெயரை மறந்துவிட்டதால் நானும் பெரிதாகப் பொருட்படுத்தாது விட்டுவிட்டேன். இன்னொரு உறவினரை அண்மையில் சந்தித்தேன். அவரும் உடல் இளைத்து உற்சாகமாக இருந்தார். உடல் இளைப்…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு சிலர் மற்றவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதிக மகிழ்ச்சியாக இருக்க வழிகள் இல்லை என்பது இதற்கு அர்த்தமல்ல கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஃப்யூச்சர் பதவி, மகிழ்ச்சி என்றால் என்ன? இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி... இதற்கு பெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா? உண்மை என்னவென்றால் சிலர் மற்றவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. …

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரேஸ் டிர்ரெல் பதவி, குளித்த பின்னர் துடைப்பதற்காக நாம் அதிகம் பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். அப்படியென்றால், அதை துவைப்பதற்கு முன் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும்? இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே ஒரு துண்டின் மூலம் உங்கள் உடலை துடைத்திருப்பீர்கள். ஆனால், அந்த துண்டு உண்மையில் எவ்வளவு சுத்தமாக உள்ளது? நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை துண்டை வாஷிங் மெஷினில் துவைப்போம். ஒரு ஆய்வில் பங்குபெற்ற 100 பேரில், மூன்றில் ஒருபங்கு மக்கள், மாதத்திற்கு ஒருமுறை தங்களது துண்டுகளை துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்ப…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் தேஷம் பி.ஆர். பதவி, பிபிசிக்காக ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார். கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உ…

  8. குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எ…

  9. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  10. "உணவூட்டம் சமநிலை பெறுமா....!" "உணவூட்டம் சமநிலை பெறுமா இன்று உடல்நலம் தேர்ச்சி அடையுமா நாளை! உள்ளம் கேட்குதே கொஞ்சம் சொல்லாயோ உண்மை உரைத்து விளக்கம் தருவாயோ!" "ஆரோக்கியம் என்றும் ஒரு புதையல் ஆரவாரம் முழங்காத மனித நலமே! ஆற்றல் தரும் ஊட்டச் சத்து ஆக்கம் அளிக்கும் உணவு மருந்தே!" "பச்சையிலை பழங்கள் பருப்பு கலந்து பற்பல கொழுப்புக்கள் சீனி தவிர்த்து பதப்படுத்தா இயற்கை ஈன்ற சாப்பாடு பக்குவமாய் சுவை ஊட்டிய அமுதமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ…

  12. பட மூலாதாரம்,KOURTNEY SIMMANG படக்குறிப்பு, கோர்ட்னி PCOS உள்ள பெண்களுக்கு அங்கீகரிக்கப்படாத சோதனைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்கிறார் கடந்த 12 வருட காலமாக சோஃபிக்கு வலிமிக்க மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. அவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 10 பெண்களில் ஒருவருக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை பெற சோஃபி போராடினார். தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதே, இதற்கான சிகிச்சை பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்தான், கோர்ட்னி ச…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், டேவிட் காக்ஸ் பதவி, பிபிசி நமது உடல் இயக்கம் குறித்து ஏராளமான தரவுகளை ஸ்மார்ட் வாட்ச்கள் சேகரிக்கின்றன. தற்போது இந்தக் கருவியை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம். ஸ்விட்சர்லாந்தின் சி.ஹெச்.யூ.வி பல்கலைக்கழக மருத்துவமனையில் (CHUV University Hospital) தலைமை மயக்கவியல் நிபுணராக இருக்கும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர், மயக்கமருந்து அளித்து நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் அனைத்து விளைவுகள் குறித்தும் அறிந்திருக்கிறார். அதிகப்படியான ரத்தப்போக்கு நோயாளியை அதிர்ச்சியில் தள்ளும். இதனால், திடீரென மோசமான அளவில் ரத்த ஓட்டம் குறையும். மேலும், ஆழ்ந்த மயக்கம் காரணமாக நோயாளிகளுக்குத் தீவ…

  14. உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா? 7 டிசம்பர் 2024 Getty Images 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள். ஆன…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது. உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின்.…

  16. குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சு…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகள் ஐராவும், தானும் கூட்டுக் குடும்பச் சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி செய்தியாளர் "நான் என் தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை, நான் சொல்வதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்." "முன்பு எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால், இப்போது இடைவெளி அதிகமாகிவிட்டது." என்ன உறவாக இருந்தாலும் இரு நபர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது, அவர்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. "நான் பல ஆண்டுகளாக எனது நண்பர்/சகோதரி/சகோதரர்/உறவினர்களுடன் பேசவில்லை," என்று மற்றவர்கள் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். தாயுடன் உடன்படவில்லை…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது எழுதியவர், ஜெஸிகா பிரவுன் பதவி, பிபிசி மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. "நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்" என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா? பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிள…

  19. உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராள…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் முதலில் வளர்கின்றன என்று மல மாதிரிகளில் இருந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்டது. (சித்தரிப்புப்படம்) எழுதியவர், ஸ்மிதா முண்டாசாத் பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி நியூஸ் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்ச…

  21. பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்? நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர். அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அற…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். இப்போது அந்தப் பட்டியலில் கிரில் சிக்கன், பூரி போன்ற உணவுகளையும் சேர்க்க வேண்டியிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. உணவை எப்படி சமைக்கிறோம் என்பது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை …

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனைன் மச்சின் பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ் 24 அக்டோபர் 2024, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது. தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிட…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆம்பர் டான்ஸ் பதவி,‎ 1 அக்டோபர் 2024, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன? நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக…

  25. மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த ஆந்திர சிறுவன் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, காலை இழந்த சிறுவன் கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 30 செப்டெம்பர் 2024, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறிப்பு: இந்த கட்டுரையின் விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.