நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
-
தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!! குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிட்டு வந்தால், உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் ச…
-
- 0 replies
- 398 views
-
-
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழன் கண்ட தோப்புக்கரணம் ..! சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் வாங்கிய அமெரிக்கா.! கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள். ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார…
-
- 0 replies
- 689 views
-
-
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது.? சாத்தியக்கூறுகள் என்ன .? மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர். மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர். எனவே, பக்கவாதம்…
-
- 0 replies
- 700 views
-
-
கல்லீரல் சுருக்கம்...தடுப்பது எப்படி? "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமா…
-
- 0 replies
- 2k views
-
-
உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'…
-
- 0 replies
- 1.7k views
-
-
இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை சகலரும் பொதுவாக கவலைப்படும் ஓர் விடயம் தலைமுடி உதிர்வு அதிலும் அண்மைய நாட்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் கவலைப்படுகின்றனர். காரணம் தலைமுடி என்பது ஒருவரது பால் வேறுபாட்டை வெளிக்காட்டும் ஆளுமை மற்றும் கம்பீரத் தன்மை என்பதனை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமாகவும் அமைகிறது என்கிறார் வைத்தியர் சிவஞான சுந்தரம். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பொதுவாக நம்மில் பலர் தமது பற்களுக்கு கொடுக்கும் கவனிப்பையே தமது தலைமுடிக்கு கொடுக்கின்றனர். அதாவது பல்வலி வரும்வரை அவர்கள் தமது பற் சுகாதாரம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அதை போல் தான் தலைமுடி அதிகம் உதிரத் தொடங்கும் வரை தலை முடியின் பராமரிப்பை பற்றியோ அதன் நிலையைப் பற்றியோ அதிக கவனம் ச…
-
- 1 reply
- 4.6k views
-
-
மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இவற்றில் சிலரது நட்பு ஆரோக்கியமானதாகவும், சிலரது நட்பு ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றது. எது எவ்வாறெனினும் இளம் வயதினரின் நட்பானது வயதான காலத்தில் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவிலுள்ள Rochester பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காக 20 வயதை அடைந்த பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் 30 வயதை அடையும் வரை கண்காணிக்கப்பட்டுவந்தனர். ஆரம்பத்தில் இவ் ஆய்வில் 222 பேர் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் ஆய்வு முடிவடையும் தருணத்தில் 133 நபர்களே கண்காணிக்கப்பட்டிருந்தனர். இவ் ஆய்வின் முடிவில் நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தை செலவிடுபவர்கள் தமது பின்னைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் சி…
-
- 1 reply
- 858 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது காலிபிளவரில் உள்ள சத்துக்கள். காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது. மருத்துவ பயன்கள்: இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ …
-
- 0 replies
- 985 views
-
-
ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை. இதற்கு என்னதான் சிகிச்சை? சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது என்று கண்டறிந்துவிட்டால், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்துவிடலாம். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை, மருந்து, மாத்திரைகள் மூலமாகவே கரைத்துவிடலாம். பெரிய கற்களுக்கு வே…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் "செக்ஸ்" ஹாமோன்கள்: எச்சரிக்கை இரவு நேரத்தில் பணிபுரிவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த Pompeu Fabra University இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதற்காக 100 பேரை தெரிவுசெய்து 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது. அதில், செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த…
-
- 11 replies
- 3.8k views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவதன் காரணம் என்ன? நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும்.அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது, கடுக்கிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவ…
-
- 0 replies
- 307 views
-
-
பெண்களளுக்கு ஏற் படும் வயிற்று வலியானது பல காரணங்களுக்காக வர முடியும். ஆனால் பல பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க அதனை எண்ணி அது எதனால் வருகிறது என நினைத்து பலதையும் யோசித்து பயப்படுவது இன்னொரு புறமாக உள்ளது. அதிலும் பெண்களது வயிற்று வலி அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தின் சமநிலையையும் குழப்பி விடக்கூடியதாக அமைந்து விடுகின்றது. அதாவது குடும்ப பெண் வயிற்று வலியால் துன்பப்படும் போது அவரை சார்ந்த மற்றைய குடும்ப அங்கத்தவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே பெண்களுக்கு வயிற்று வலி ஏன் ஏற்படுகின்றது? இதற்கான பின்னணி என்ன? இதற்கு தீர்வுகள் எவை என்பது குறித்…
-
- 0 replies
- 25.9k views
-
-
நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? ஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என்ன காரணம்? உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ண…
-
- 8 replies
- 15.2k views
-
-
கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் காணாமல் போய், நம் வயிற்றை நிரப்பிவரும் பாக்கெட் உணவுகள் நோயைப் பரவலாக்கிவருகின்றன. அதற்கு மாற்றாக நமது சிறுதானிய உணவுகள் எப்படி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கின்றன என்பது பற்றி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதை, மூலிகை, வேளாண் திருவிழா கவனப்படுத்தியது. இதன் காரணமாக, திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் மரங்களின் நிழலில் ஜூலை 11, 12 ஆகிய இரண்டு நாட்களும் இயற்கை மணம் வீசியது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகள், வரகு, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், அரிய மூலிகை மருந்துகள், பாரம்பரிய விதை ரகங்கள் குவிந்திருந்தன. பசுமை சிகரம், கவிமணி பாரதி உழவர் மன்றம், கிரியேட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந…
-
- 0 replies
- 381 views
-
-
புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை 16 ஜூலை 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:14 ஜிஎம்டி இருதயப் பகுதியை திறக்காமலேயே வயதான பெண்மணி ஒருவருக்கு சென்னையிலுள்ள மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேற்குலக நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் அபூர்வமாகச் செய்யப்படும் சூழலில், இந்தியாவில் முதல் முறையாக நவீன முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதைச் செய்த டாக்டர் ராஜாராம் அனந்தராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சென்னியிலுள்ள ஃப்ராண்டயர் லைஃப்லைன் மருத்துவமனையில், 81வயது பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சேதமடைந்த ரத்தக்குழாய்க்கு பதிலாக செயற்கை வால்வை மற்…
-
- 1 reply
- 243 views
-
-
ஆச்சர்யம் அன்லிமிடெட்! ஆன்டிஆக்ஸிடன்ட் `கிரீன் டீ சாப்பிடுங்க, அதுல நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கு’. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். நிறையப் பேருக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் உடலுக்கு நல்லது என்று தெரியும் ஆனால், அது என்னவென்று தெரியாது. டாக்டர்கள், உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம் ஆன்டிஆக்ஸிடன்ட். வயதாவதைத் தாமதப்படுத்துவது, புற்றுநோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது என உடல் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிவது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான். நம் உடல் பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. நோய்த்தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் செல்களைப் பாதிக்கின்றன. உணவை ஆற்றலாக, ஊட்டச்சத்தாக மாற்றும்போது உருவாவதுதான் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free…
-
- 0 replies
- 487 views
-
-
ஆண்கள், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய.... அழகு பராமரிப்பு குறித்த உண்மைகள்!!! அழகு பராமரிப்பு குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளது. மேலும் இன்றைய காலத்தில் அக அழகை விட, புற அழகைத் தான் பலரும் பார்க்கிறார்கள். அத்தகைய புற அழகிற்கு கேடு விளைவிக்கும் சில செயல்களை பலரும் தெரியாமல் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் அரைகுறையாக கேட்டுக் கொண்டு அவற்றைப் பின்பற்றி தங்களின் அழகை கெடுத்துக் கொண்டு வருகின்றனர். அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!! அதை ஒவ்வொரு ஆணும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தங்களின் அழகை எளிதில் மேம்படுத்தலாம். சரி, இப்போது அழகு பராமரிப்பு குறித்த உண்மைகளைப் பார்ப்போமா!!! ஷேவிங் செய்த பிறக…
-
- 4 replies
- 810 views
-
-
மன அழுத்தத்தைக் குறைக்கும் மல்லிகைப்பூ! மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலையை நன்றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்தாகப் பயன்படுத்தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் உடனடியாக வீக்கம் குறையும். மல்லிகை பூ ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்டத்தில், மல்லிகை பூவைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, பனங்கல்கண்டு சேர்த்து, கஷாயமாகக் குடிக்கலாம். தாய்ப்பால் அதிகம் சுரப்பதால் அவதிப்படும் தாய்மார்கள், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பகத்தில் வைத்துக் க…
-
- 1 reply
- 3.4k views
-
-
ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், அதை மேலும் இன்பமாகக் கொண்டாடவே மனம் விரும்பும். இது மனித இயல்பு, இந்த நிலையில், எண்ணெய் தேய்த்து குளித்த அன்று தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா? அல்லது கூடாதா? எனப் பலருக்கும் பெரும் சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் நல்லெண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். தலைக்கு மட்டும் இன்றி உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சனி மற்றும் புதன் ஆகிய இரு கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். அது போல், பெண்கள் செவ்வாய…
-
- 10 replies
- 9.8k views
- 1 follower
-
-
நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால் செரிமானம் நடைபெறுகிறது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு செரிப்பது எப்படி?நாம் உண்ணும் உணவானது, நாக்கில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. நாக்கினால் உணவை புரட்டி, பற்களால் அரைத்ததும், தொண்டை வழியாக இரைப்பைக்கு செல்கிறது.இரைப்பைக்குள் உணவு குறைந்தது 4 மணி நேரமாவது இருக்கும். இரைப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள் பல்வேறு மடிப்பு நிலையில் காணப்படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்குமாக சூழ்ந்திருக்கும். அந்த தசைகளின் உதவியால், இரைப்பைக்குள் இருக்கும் உணவ…
-
- 0 replies
- 350 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
முக்கனிகளில் இரண்டாவது பழமான பலா! - நோய் தீர்க்கும் மருந்து [Wednesday 2015-06-24 18:00] முக்கனிகளில் இரண்டாவது பழமான பலா ருசி மிக்கக் கனிகளை தருவதுடன் ஆடுகளைக் கொழுக்க வைக்கும் தழை. இசைக் கருவிகளுக்கான மரம், கறியாகச் சமைத்திடப் பிஞ்சு மற்றும் விதை, மருத்துவப் பயனுடைய பல்வேறு பகுதிகள் ஆகிய அனைத்தையும் உடையது.பணம் காய்க்கும் மரமான இந்த பலா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உற்றதுணையாக இருக்கிறது. கோடைகாலங்களில் மட்டும் கிடைக்கும் இந்த சீசன் பழத்தை எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு பதப்படுத்தி சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அவ்வளவாக நம்மிடம் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் பலாவை பதப்படுத்தி எல்லா நாட்களிலும் அதை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். பலாபழத்தின் விலை கோடையில் குறைவாகவும் …
-
- 0 replies
- 920 views
-
-
பொதுவாக பெண்கள் தங்கள் உடம்பை பிதுக்கிக்காட்ட ஸ்கின்னி ஜீன்ஸ் போடுவது வழக்கம். இப்போ அதுவே அவங்களுக்கு ஆபத்தாக வந்து சேர்ந்துள்ளது. ஸ்கின்னி (skinny) ஜீன்ஸ் போடுவதால்.. கொம்பாட்மென்ட் சின்றோம் (Compartment syndrome) எனும் நிலைமை ஏற்படுகிறது. இது தசைநார்களிடையே இரத்தக் கசிவை ஏற்படுத்தி.. வலி.. வீக்கம்.. தசைசெயலிழப்பு வரை உபாதைகளை ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின் அறிவித்துள்ளனர். இந்தப் பாதிப்புக் கண்ட பெண்கள்.. சரிவர நடக்க முடியாமல் தடக்கி விழுவது.. எழும்ப இயலாமை.. வலி போன்ற நோய் தாக்கங்களை அனுபவிக்க நேரிடும். இப்ப எங்கட தமிழ் ஆன்ரிமாரும்.. தங்கட சள்ளைத் தசைகளை தூக்கி நிறுத்த ஸ்கின்னி ஜீன்ஸ் போடினம் கண்டியளோ. சேலைக்கு எப்பவும் ஒரு மதிப்பிர…
-
- 3 replies
- 603 views
-