நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு இரத்த சோகையிலிருந்து விடுபடுவது அவசியம். கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். ஓட்ஸ் ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து உள்ளதால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து வருவதால் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். உருளைக்கிழங்கு உருளைக…
-
- 0 replies
- 613 views
-
-
இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது. ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண…
-
- 0 replies
- 657 views
-
-
பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் உடனடியாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும். உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன், மாரடைப்பு வராமலும் தடுக்கலாம். பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் பசியெடுக்கும், உடலில் உள்ள கலோரிகள் கரைவதால் தான் பசியெடுக்கிறது. உடனே சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும். இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உ…
-
- 0 replies
- 511 views
-
-
பொதுவாக காலை உணவு சாப்பிடுவதை தற்போதைய காலக்கட்டத்தில் பலர் தவிர்த்துவிடுகின்றனர். அலுவலம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கின்றனர். சிலர் ஆரோக்கியமற்ற உணவை வெளியிலும் சாப்பிடுகின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே காலை உணவை தினந்தோறும் சாப்பிட வேண்டும். மேலும் சில காலை உணவுகள் நம் அரோக்கியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இட்லி இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும். தோசை இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், க…
-
- 0 replies
- 2.3k views
-
-
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவரின் இதயத்தின் இயக்கத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான முச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், நாற்பது நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத் திசுக்கள் மூ…
-
- 0 replies
- 507 views
-
-
உடல் மெலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்த பல்வேறு நோய்கள் வர நாமே காரணமாக இருக்கிறோம். அதிலும் குறிப்பாக பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது. இதற்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். தடுக்க என்ன செய்யலாம்? * தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். * சாப்பாட்டில் காரம் குறைக்கவும். * அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சா…
-
- 0 replies
- 690 views
-
-
பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். வாழைப்பழ தோல் வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும். மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும். குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை …
-
- 0 replies
- 657 views
-
-
கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளிலும் வேப்பம் மரம் இருக்கும். அதனால் தான் கிராமப்பகுதிகளுக்கு சென்றாலேயே, நன்கு குளிர்ச்சியான மற்றும் சுத்தமான காற்றினை சுவாசிக்க முடிகிறது. மேலும் கிராமப்புறங்களில் பற்களை துலக்க வேப்பங்குச்சியைத் தான் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, அக்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வேப்பிலை, வேப்பம் விதை, வேப்பம் பூ, வேப்பம் பட்டை என வேப்பம் மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இக்காலத்தில் அந்த இயற்கை வைத்தியங்களெல்லாம் மறந்து போய்விட்டன என்பதை விட நவீன மருத்துவத்தால் மறைந்து போய்விட்டன எனலாம். இருப்பினும் தமிழ் போல்ட் ஸ்கை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேப்பம் மரத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று …
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் ஒரு ஆங்கில வைத்தியத் துறை சார்ந்தவன் அல்ல எனது தந்தையார் ஒரு ஆயுர் வேத சித்த வைத்தியரே நான் படித்த 4 கட்டுரைகளின் தொகுப்பே இது இதில் இடம் பெறும் விடயங்கள் மிகவும் சிந்திக்க வைக்கிறது. இது வைத்தியத் துறை சார்ந்த எவரதும் மனதைப் புண்படுத்தும் நோக்கமல்ல இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை..! இந்த கட்டுரையை தொகுக்க உதவிய சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி. "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன். இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்... இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்…
-
- 7 replies
- 5.9k views
-
-
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமையான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும். ஆனால் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். இதற்கு நூற்கோல் என மற்றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது. நூக்கல் காயின் பயன்கள் குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்க உதவு…
-
- 8 replies
- 1.8k views
-
-
பெரியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் பாடாய் படுத்தும் வலிகளில் ஒன்று தான் மூட்டு வலி. உடல் எடை அதிகமாக இருப்பின் மூட்டு வலி ஏற்படும், முழங்கால் மூட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதே இதற்கு காரணமாகும். மூட்டுவலிக்கு எளிதான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் குறைக்கலாம். Leg Extension முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும், பின்னர் ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மடக்கவும். இதே போன்று 5-7 முறை செய்யவும், தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் வித்தியாசத்தினை காணலாம். Sit- Ups கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும். சில நொடிகள…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்கப் பெண்கள் வழமையாக தாய்மையடைவதற்கு சீரான இடைவெளியினைப் பேணி வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட வயதைக் கடந்த பெண்களும் இவ்வாறு சீரான இடைவெளியினைப் பேணி வருவதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி Idaho எனும் இடத்தில் இவ்வாறான பெண்கள் கர்ப்பமடைவதற்காக எடுத்துக்கொள்ளும் இடைவெளியின் சராசரி 25 மாதங்களாகவும், Montana, North Dakota, South Dakota, Utah and Wisconsin ஆகிய இடங்களில் 32 மாதங்களாகவும் காணப்படுவதாக அவ் ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான கர்ப்பந்தரித்தல் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறித்த ஆய்வை மேற்கொண்ட Centers for Disease Control and Prevention நிறுவனம் தெரிவித்துள்ளது. http://tech.lank…
-
- 0 replies
- 446 views
-
-
சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஆம், நீங்கள் யூகித்தது சரியே - இந்த சின்ன முத்துக்களை நாம் 'ஜவ்வரிசி' என்று அழைப்போம். பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. ஜவ்வரிசி பாயாசம் என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முத…
-
- 1 reply
- 3.8k views
-
-
பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..! புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது. ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும். ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும். இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
மனித உடல்களில் ஏற்படும் வலிகளில், தலைவலியை தாங்கி கொள்வது கடினமான ஒன்றாகும். இப்படி தலைவலி எடுக்கும் போது தைலம், மாத்திரைகள், ஒரு கப் சூடான காபி குடிக்கிறோம். ஆனால், சிலவகையான உணவுகளும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள தைரமின் எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும். இதுதவிர கேக், சைனீஸ் உணவுகள், சொக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். தினசரி நாம் உபயோகப்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட்(Nitrite) என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புக…
-
- 0 replies
- 421 views
-
-
சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள்,…
-
- 3 replies
- 1.3k views
-
-
குப்பைமேனி இலையை பயன்படுத்தி நலம் பெறுவோம். குப்பைமேனி : மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். …
-
- 0 replies
- 18.9k views
-
-
பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம். இதோ உங்களுக்கான சில பேஷியல்கள் வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை …
-
- 0 replies
- 868 views
-
-
பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். இதோ தூக்கத்திற்கான உணவுகள் பாதாம் பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தேநீர் தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில்…
-
- 0 replies
- 828 views
-
-
காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிட்டால் உடலை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறை, உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து, சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின…
-
- 0 replies
- 547 views
-
-
வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம். ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ, 1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது. 2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும். 3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும். 4. உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும். 5. எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்துவிடுங்கள். …
-
- 0 replies
- 513 views
-
-
பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மனிதர்களைத் தாக்குகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ட்டின் தொழிநுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த இந்த ஆய்வின் முடிவில், நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் கணிசமாகக் குற…
-
- 5 replies
- 2.1k views
-
-
கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில், சின்னம்மை மிகவும் அபாயகரமானது, உடல் முழுவதும் கொப்பளங்களை ஏற்படுத்திவிடுகிறது. சின்னம்மையை முதல் முதலில் அடையாளம் கண்டுபிடித்தவர் (1510-1580) மருத்துவர் Giovanni Filippo Ingrassia ஆவர். பரவும் விதம் varicella-zoster virus எனும் வைரசால் பரவும் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதால் அவர்களின் உமிழ்நீர், சளி மற்றவர்கள…
-
- 2 replies
- 2.1k views
-
-
பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை உண்பவர்கள் மத்தியில் ஆரோக்கியத்திற்காக உணவுகளை உண்பவர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அழகும் கிடைக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்துதான் உடலும், அழகும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையில் ஆரோக்கியத்துடன், அழகும் தரும் உணவுகள் உங்களுக்காக, முட்டை புரதம், வைட்டமின் மற்றும் கனிம பொருட்கள் வளமையாக நிறைந்துள்ள முட்டை, உங்கள் செறிவூட்டத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான எடையை பராமரித்து, மூளை வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. மேலும் கண் பார்வையை வலிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ர…
-
- 0 replies
- 2.3k views
-
-
கொழுப்பை குறைத்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம்! ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைத்து அழகாக இருக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும். கொழுப்புக்…
-
- 0 replies
- 709 views
-