நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
-
- 1 reply
- 654 views
-
-
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மரு…
-
- 0 replies
- 680 views
-
-
ஆபத்துக்களை விளைவிக்கும் அஜினமோட்டோ ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காவும் உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் மனிதர்கள். அவ்வாறு, ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும். அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டு…
-
- 1 reply
- 749 views
-
-
பொதுவாக காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்து கொள்வது உடல்ரீதியாக மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும். குறிப்பாக பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய். அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயின் மகத்துவங்கள் அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.…
-
- 0 replies
- 2k views
-
-
பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்…
-
- 1 reply
- 653 views
-
-
தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உற்சாகம் தரும் பானங்களில் ஒன்றான காபி மற்றும் டீ குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுரங்குவதால் அடைப்பு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள வேத…
-
- 1 reply
- 669 views
-
-
சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. கோடைக்காலத்தின் அதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்க…
-
- 0 replies
- 422 views
-
-
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கெட்டித் தயிருடன் சே…
-
- 0 replies
- 595 views
-
-
நோய் வந்தவுடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டே குணப்படுத்தலாம். இவை மாத்திரைகளை போல் உடனடி பலன் தரவிட்டாலும் நாளடைவில் நோய்களை குணமாக்கும் வல்லமை படைத்தது. அதுபோல் ஒரு மூலிகை தான் தூதுவளை. இதனை தூதுளம், தூதுளை என்றும் அழைப்பர். இந்த மூலிகை செடி ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும்(சுண்டைக் காய்) கொண்டது. இந்த மூலிகையின் வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும் அதிக பயன்களை கொண்டது. தூதுவளையின் மகத்துவங்கள் * தூதுவளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால், காதுவலி மற்றும் காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும். * இந்த இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாக…
-
- 0 replies
- 538 views
-
-
இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது எச்சரித்துள்ளது. எது உடல் பருமன்? ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என…
-
- 0 replies
- 711 views
-
-
கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது. 1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். 2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது. 4. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள …
-
- 0 replies
- 502 views
-
-
இதயத்தைக் காக்கும் காளான் காளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் 'டி' அதிகம் உள்ளது. காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும், இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வலிப்பு, மூளை நோய், வலிமைக் குறைவு, மஞ்சள்காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது. அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப்…
-
- 0 replies
- 445 views
-
-
பப்பாளி பழம் நல்ல சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளன. பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாக்கும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அத…
-
- 0 replies
- 419 views
-
-
பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம் மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவும் நேரிடும். சில சமயங்களில் தலை மயிரில் மா தூவி விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காது நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும். தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது …
-
- 0 replies
- 3.3k views
-
-
கல்லீரலும் அதன் பாதிப்பால் ஏற்படும் நோய்களும் நம் உடலானது நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாடி, நாளங்கள் என பலவற்றால், பிண்ணிப் பிணைக்கப் பெற்று உருவாக்கப் பெற்றதாகும். எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு உடலின் உள்உறுப்புகள் யாவும் ஒழுங்காக செயல்பெற வேண்டியது கட்டாயமாகின்றது. இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயலிழந்தால் அல்லது ஊறு பட்டால்; அது அவற்றுடன் இணைந்து செயல் பெறும் மற்றைய உறுப்புகளையும் செயலிழக்க அல்லது ஊறுபட வைத்து விடுகின்றது. எமது பழக்கவழக்கங்கள், உணவுமுறை, நாம் வாழும் சூழல் போன்ற பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 17.4k views
-
-
கிவியின் நன்மைகள் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் க…
-
- 0 replies
- 630 views
-
-
மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...... ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக…
-
- 13 replies
- 10.9k views
-
-
ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி” சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம். உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும். பொன…
-
- 1 reply
- 571 views
-
-
மேலதிக அறிவுக்கு மூலம் (Reference) கீழே இணைக்கபட்டுள்ளது. பட்டர்: பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: பட்டர் தவிர்க்க பட வேண்டியது. குறைந்த கொழுப்பு கொண்ட (polyunsaturated) பாவிக்கலாம். இறுதி ஆய்வின் முடிவு: சிறிய அளவிலான பட்டர் உடம்புக்கு நன்று. பால் பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: ஆடை நீக்கிய பால் உடம்புக்கு நன்று. இறுதி ஆய்வின் முடிவு: ஆடை நீக்காத பால் உடலுக்கு நன்று. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடம்புக்கு நன்று. முட்டை பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: முட்டை முழுவதும் கொழுப்பு. முட்டை உண்பதை மட்டுபடுத்தவேண்டும். இறுதி ஆய்வின் முடிவு: தொடர்சியான ஆய்வுகளின் படி, முட்டையில் உள்ள கொழுப்பு சிறிய அளவிலான பாதிப்பை தான்…
-
- 0 replies
- 1.5k views
-
-
எனது வெள்ளைக்கார நண்பர் மரதன் ஓடுபவர். மாதம் ஒருமுறை என்றாலும் எங்காவது போய் ஓடிப் போட்டு வருவார். கடைசியாக அமெரிக்கா டிஸ்னி மரதன் ஓடினவர். அடுத்த மாதம் பாரிஸ் மரதன் பின்பு லண்டன் மரதன், இப்படியே அவர் விடுமுறைகள் மரதனுக் காகவே செலவழிக்கப் படுகின்றது. அவர் தினமும் பல விதமான வைட்டமின் மாத்திரைகளை எடுப்பார். இப்போது தனது நாளந்த குளிசைகளுடன் tumeric 10mg தினமும் எடுக்கிறார். இது மூட்டு பகுதிகளில் உள்ள திரவத் தன்மையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் (anti biotics) விளங்குகிறது. நம் முன்னோர்கள் இதை எப்பவோ சொல்லிப் போட்டார்கள். இப்ப மேற்கத்தியர் பாவிக்க வெளிக் கிட்டினம். மஞ்சளின் மகிமை இப்ப குளிசையில். kills germs என்று spray இலு…
-
- 1 reply
- 740 views
-
-
பீட்ரூட் ஜூஸ் குடிங்க! சுருசுருப்பா இருங்க! பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்த…
-
- 0 replies
- 661 views
-
-
வெண்டைக்காய் சாப்பிட்டால் கொழுப்பு குறையும்! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. மதுப் பழக்கமுடையோர…
-
- 0 replies
- 528 views
-
-
தாவரவியல் பெயர்: Centella asiatica அடையாளம்: வல்லாரை தரையோடு படர்ந்து வளரும் செடி வகை. இலைகள் தவளையின் காலை ஒத்திருக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம். இனப்பெருக்கம்: கிளைகளைக் கொண்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு வாரத்தில் புதிய கிளைகள் துளிர்த்துவிடும். வரலாற்றில்: ஆசிய நாடுகளின் நீர்நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆயுர்வேதம், ஆப்பிரிக்க, சீனப் பாரம்பரிய மருத்துவங் களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைமருத்துவம்: இலங்கை சமையலில் சோறு குழம்புடன் சேர்த்து வல்லாரை சாப்பிடப்படுகிறது. அரைக்கப்பட்டுப் பானமாகவும் அருந்தப்படுகிறது. தெற்காசியச் சமையலில் சாலட், பானங்கள் செய்வதற்குப் புகழ்பெற்றது. இதில் உ…
-
- 0 replies
- 581 views
-