நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
வாசுதேவனின் கவிதைத் தொகுப்பு: தொலைவில் பாரிஸ் அகிலன் என்ற புனைபெயரில் சில காலம் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதியர் வாசுதேவன். வாசுதேவனின் கவிதை உலகம் தத்துவ நதியில் கால் நனைத்துச் செல்வது. இன்றைய தன்னுணர்வுக் கவிதைகளின் கழிவிரக்கம்இ பச்சாதாபம்இ முரண்தொடைத் துயரங்கள் போன்ற சமாச்சாரங்கள் இவரது கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். உலக இலக்கியப் பரப்பில் சில தேர்தெடுத்த படைப்புக்களின் உட்பொதிந்த சுருக்கம்இ காட்சிகள் மற்றும் அதில் வருகின்ற பாத்திரங்களினது பெயர்கள் போன்றவை பொருத்தமான தருணங்களில் தவிர்க்கமுடியாத கூறாகி வாசுதேவனின் கவிதைகளில் இடம்பிடிக்கின்றன. இத் தேர்வு வெறும் தற்செயலானதும் அல்ல. கவர்சிக்காக அணியப்பட்டவையுமல்ல. மாறாக இக் குறிப்பான்கள் வாசுத…
-
- 0 replies
- 1.9k views
-
-
மிலான் குந்தேராவின் 'அறியாமை' Ignorance by Milan Kundera மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட,அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இ…
-
- 0 replies
- 750 views
-
-
அல்பேர் காமு: தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை -தேவகாந்தன்- அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது. வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்க…
-
- 0 replies
- 750 views
-
-
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. யாரும் பேசத் துணியாத விஷயத்தை முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன் என்றுதான் சொல்லவேண்டும். . தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய் இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று. . ”ஒரு சின்ன நூல் வெளியீடு…. ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும் உடனே சரியென்று தலையாட்டினேன். . ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும் எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது. அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை. ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. . அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை. . அவரது…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…
-
- 0 replies
- 966 views
-
-
உலகத்தரம் வாய்ந்த "பயங்கரவாதி" நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றது. அண்மைய நாட்களில் உலகெங்கும் பல நாடுகளில் பயங்கரவாதி நாவல் அறிமுகமாகிறது. லண்டனில் மக்களின் பேராதரவுடன் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா இடம்பெற்ற நிலையில் வரும் மாதம் 22ஆம் திகதி பிரான்ஸில் அறிமுக நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 30ஆம் திகதி கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் பயங்கரவாதி நாவலின் அறிமுகவிழா இடம்பெறுகின்றது. அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு பேரன்புடன் வேண்டுகிறோம். பயங்கரவாதி நாவலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய திறனாய்வை இந்த இணைப்பில் …
-
- 0 replies
- 398 views
-
-
ருக்மணி என்கிற பெண்ணைப் பற்றி ஓர் அரச மரம் பேசியதாக புனையப்பட்ட வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற தமிழின் முதல் சிறுகதை தொடங்கி இன்று வரை பல படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதைக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தனக்கே உரிய மொழி அலங்காரத்துடன் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார் வைரமுத்து. ஒவ்வொன்றும் வெவ்வேறான கதைக் களன்களைக் கொண்டவை. ‘மனிதர்கள் மீண்டும் குரங்குகள் ஆகிறார்கள்’ என்று ஒரு கதை. “டெல்லி நகரம் முழுதும் இருக்கிற குரங்குகளை எல்லாம் டெல்லி எல்லையை விட்டு வெளியேற்றிவிடுங்கள்’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. குரங்குகளை ஏன் அப்புறப்படுத்தச் சொன்னார் நீதிபதி என்பதற்குப் பின்னால் ஒரு சுயநலப் படுதா விரிகிறது. குரங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் விழுந்த பனை மகேந்திரன் திருவரங்கன் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திரணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல் கடந்த ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே 1985ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை கணிதத்துறை விரிவுரையாளராக ராஜன் ஹூல் கடமையாற்றினார். மனித உரிமைப் பணிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்ய முடியாத வகையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது ராஜன் ஹூலும், மற்றொரு கணித விரிவுரையாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரனும் தலைமறைவாக இருந்து, இலங்கையின் வடக…
-
- 0 replies
- 516 views
-
-
இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய், 19 ஏப்ரல், 2022 கறுப்பு : அறிஞர் தொ.பரமசிவன் இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந்தன. இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது. எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறுபாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்கும…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
இந்த உலகம் எப்பொழுதுமே அப்படியே இருப்பதில்லை, அது காலம் காலமாக மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டேஇருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு மூலப்பொருளாக உழைப்பும் உழைப்பு சுரண்டலும் இருந்துகொண்டே இருக்கின்றது. அது சுற்றுப்புறச்சூழலில் மட்டும் அல்ல சமூகம் மற்றும் தனிமனித உறவுகளுக்குள்ளும் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. தந்தை என்ற உறவே தனி சொத்துடமை என்னும் உழைப்பு சுரண்டலின் வித்தாக அமைந்தது. அப்படி சீனாவின் கிராமம் ஒன்றி காலம் முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்து போன அந்தப் பெண்ணை குத்தகைபணம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டிக் களவாடி சென்றான் அந்தக் கிழட்டு பண்ணையார். மற்றவர்களிடம்இருந்து தான் சுரண்டிய சொத்தை யாருக்க கொடுப்பது எனத் தெரியாமல் இரந்த அவனுக்கு இந்த இளம் பெண் பிள்…
-
- 0 replies
- 803 views
-
-
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது. சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி. சிதிலமாக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்டது மாயக்குதிரை சிறுகதை மூலம் கவனிக்க வைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ்நதி. போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலிமையான தனது எழுத்தின் மூலம் மனிதம் பேசியிருக்கிறார் தமிழ்நதி. ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்…
-
- 0 replies
- 804 views
-
-
ஒரு உளவாளியின் கதை உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல. தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க…
-
- 0 replies
- 791 views
-
-
கங்கணம் - திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள் வா.மணிகண்டன் இப்பொழுதெல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கல்யாணம் ஆகாத ஆடவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது. நாற்பது வயதிலும் தனியாகப் படுத்து பாயை பிறாண்டிக் கொண்டிருக்கும் கவுண்டப் பையன்களைக் கணக்கெடுத்தால் ஒரு தனி சாதிப்பிரிவே உருவாக்கலாம். அத்தனை பேச்சிலர்கள். கடந்த இருபது முப்பது வருடங்களாக கவுண்டர் சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. குறையாமல் என்ன செய்யும்? திருமணம் ஆனவுடன் முதல் குழந்தை பையனாக பிறந்துவிட்டால் போதும். ‘ஒன்றே போதும்’ என நரம்பைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தப்பித்தவறி முதலில் பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு பெண் வாரிசு. இப்படி…
-
- 0 replies
- 3.2k views
-
-
ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நியம் புத்தக வெளியீட்டுவிழா சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 21:42 மாவீரர் நாளுக்கு முன்பாக வரும் நவம்பர் 23-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா நடத்த உறதி செய்யப்பட்டிருக்கிறது. பழ. நெடுமாறன் வைகோ சீமான் திருமாவளவன் ஜவாகிருல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முக்கிய தலைவர்களின் விரிவான அனிந்துரையில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டிய விளம்பரம்தான் இந்த புத்தகம். விரிவான அனிந்துரைகள் புத்தகத்தில் இருக்கும். http://thaaitamil.com/?p=37665
-
- 0 replies
- 654 views
-
-
அவுஸ்திரேலியாவில் 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' நூல் வெளியீட்டுவிழா! [Thursday 2017-04-20 20:00] முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்த்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்" என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு …
-
- 0 replies
- 359 views
-
-
குலாத்தியாச்சே போர்( ஒரு குலாத்திக் குழந்தை) இந்த புத்தகம் மிகவும் வினேதமான சமூகத்தை அறிமுகப்படுத்தியதால் அதை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன். குலாத்தியாச்சே போர்: மராத்திய மொழியில் உருவான ஒரு தலித் காவியம். ஆசிரியர்: மறைந்த டாக்டர் கிஷோர் சந்தாபாய் காலே. ஆங்கில மொழிபெயர்ப்பு: சந்தியா பாண்டே தமிழில்: குலாத்தி ( தந்தையற்றவன்). ஆங்கிலம் வழி தமிழில்: வெ. கோவிந்தசாமி. “ வித்தியாசமான முரசொலியை கேட்பதால்தான் ஒரு மனிதனால் தன் சக நண்பர்களுடன்சமநடை போடமுடியவில்லை போலும்” என்று தோரோ எழுதியுள்ளார். வித்தியாசமான முரசொலியை கேட்கும் திறன் பெற்ற, அதன் இசைக்கு எதிர்வினை செய்கின்ற, மனிதர்களால் மட்டுமே தாங்கள் …
-
- 0 replies
- 735 views
-
-
ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம். எஸ். வாசன் தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும…
-
- 0 replies
- 616 views
-
-
பல வருடங்கள் முன்பே எண்ணற்றவர்கள் படித்து இருக்கும் அற்புத நாவலான “பொன்னியின் செல்வனை” தற்போது படிக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் கூறினேன். “என்னது இப்பத்தான் படிக்கறியா?! நிஜமாவா?!” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இது போல ஒரு நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அதனால் என்ன?! எப்போது படித்தாலும் அதன் சிறப்புக் குறைந்து விடப்போகிறதா என்ன! புத்தகம் எடுத்தால் வைக்கவே முடியாது என்று நண்பர்கள் கூறிய போது நம்பச் சிரமமாக இருந்தது, மிகைப்படுத்திப் பேசுகிறார்களோ! என்று நினைத்தேன். ஆனால், அது 100% உண்மை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. Image Credit– ponniyin-selvan-translation.blogspot.com படிக்கத் தோன்றவில்லை தம்பி ராஜ்குமார் சிங்கப்பூர் வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
,கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல். தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயி…
-
- 0 replies
- 346 views
-
-
http://kuppilanweb.com/program/sivamahalingambook2013.html
-
- 0 replies
- 3.4k views
-
-
சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு . இராஜ்கௌதமன் அவர்களின் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும், நுட்பமாகவும், தனித்தன்மையோடும் இருக்கின்றன. தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் தனது கருத்துகளோடு வினை புரியவேண்டும் என்கிற அவருடைய நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்கி அவர் சங்ககாலம் பற்றியும், அக்கால வேந்தர்களின் காலம் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களுக்கு வினை ஆற்றியுள்ளேன். “பதிற்றுப் பத்து - ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்” என்கிற தனது நூலில் திரு.இராஜ்கௌதமன் கீழ்க்கண்ட 9 விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தரை மற்றும் கடல்வழி வணிகம், வேளாண் மற்றும் தொழில்சார்ந்த பொறியியல், அரசாட்சி, நி…
-
- 0 replies
- 2k views
-
-
ஷேக் அப்துல்லா புகழின் உச்சியில் இருந்ததிலிருந்து ஆரம்பித்து இந்திய எதிர்ப்பு அலை ஓங்கி ஒலித்தது வரையிலான காலகட்டத்தை சோஃபி குலாம் முகமது கடந்துவந்துள்ளார். தன் இளமைக்கால அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் விருப்பத்துக்குப் பெரும்பாலான காஷ்மீரிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தால் ஏரிக்கு அருகில் இருக்கும் தன் அருமையான வீட்டின் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு பேசும்போது அவர் சொன்னார்: பெரும்பாலான காஷ்மீரிகள் இப்போது சுதந்தரமான ஒரு நாட்டில் வாழவே விரும்புகிறார்கள். காஷ்மீர் மீது கண் பதித்திருக்கும் பிராந்தியச் சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கா…
-
- 0 replies
- 674 views
-
-
வினோதினியின் 'முகமூடி செய்பவள்' எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன். அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத…
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=4][/size] [size=4]ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி காபி சாப்பிட்டு நம் ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறோம். [/size] [size=4]ஆனால் நமக்கு மிகவும் வேண்டப்பட்ட உறவினரோ அல்லது நெருங்கிய நண்பரோ மரணமடையும்போது அது செய்தியாக இருப்பதில்லை – நம் மனதைத் துயரம் புகையாய் சூழ்கிறது. அவர்களின் நினைவுகள்…
-
- 0 replies
- 679 views
-