நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச்…
-
-
- 3 replies
- 307 views
- 2 followers
-
-
காலம் : 19/11/2023 ஞாயிறு பிற்பகல் 3 மணி இடம் : கலாச்சார மண்டபம், சங்கானை
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு! PrakashOct 18, 2022 08:51AM ஷேர் செய்ய : 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றிருக்கிறார். இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதில், இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக…
-
- 0 replies
- 295 views
-
-
Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:43 PM செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இஇலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகிய விடயங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வியாழக்கிழமை செம்மணி என்ற நூல் வெளியிடப்படும்யாழ்;ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டபிறகு இந்த நூல் வெளியாகின்றது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதை…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
தடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது …
-
- 0 replies
- 291 views
-
-
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
பிரமியின் ’கனதி’ சிறுகதை நூல் வெளியீடு Posted on June 30, 2023 by தென்னவள் 11 0 ‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணாமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்திபனும், கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தமும், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் க.ராஜனும் க…
-
- 0 replies
- 286 views
-
-
அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா! ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்! தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்…
-
- 0 replies
- 285 views
-
-
ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அ…
-
- 0 replies
- 285 views
-
-
ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன் மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்கு…
-
- 0 replies
- 279 views
-
-
The Seven Moons of Maali Almeida – ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும் உரையாடலும் EditorOctober 23, 2022 தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல் அதனைச்செய்கிறது. The Seven Moons of Maali Almeida (புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம்பெற்றது) உண்மையில் இதனை ஒரு ஹூடனிட் (Whodunit) நாவலாக விபரிக்க முடியும். (Whodunit – என்பது ஒரு கொலையைப் பற்றிய கதை அல்லது நாவலாகும். ஆனால் அந்நாவலில் இறுதிவரை கொலையாளியின் அடையாளம் வெளிப்படுத்தப்படுவதே இல்லை- மொ.பெ.) 1990 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 278 views
-
-
‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ நூல் வெளியீடு இங்கிலாந்தை சேர்ந்த நூலாசிரியர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலினதும், ‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா நேற்றைய தினம் யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். அந்தவகையில் நூல்களின் முதற் பிரதிகளினை இரு நூல்களின் ஆசிரியரான என்.செல்வராஜா வெளியிட்டு வைக்க கல்வியியலாளரும், எழுத்தாளருமான நடராஜா அனந்தராஜ் பெற்றுக் கொண்டார். https://athavannews.com/2023/1340403
-
- 0 replies
- 276 views
-
-
எரித்தல் என்னும் குறியீடு! ஜூலை 5, 2023 -பெருமாள் முருகன் டானியல் ஜெயந்தன் எழுதிய ‘வயல் மாதா’ (கருப்புப் பிரதிகள், 2023) சிறுகதைத் தொகுப்புக்கு பிரான்ஸ் நாட்டில் 18.06.2023 அன்று வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அந்நூல் ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கையைத் தவறாகச் சித்தரிப்பதாக ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எழுத்தாளருக்கு மிரட்டல் விடுத்ததோடு நூல் பிரதிகளைக் கிழித்தும் எரித்தும் பிரான்ஸில் போராட்டம் நடத்தியுள்ளனர். 2015இல், எனது ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியோரும் அதன் பிரதிகளைப் பொதுவெளியில் எரித்தனர். நூல் பிரதியை எரிப்பது அதன் கருத்துகளை அழிப்பதன் குறியீடு என்று சொல்லலாம். ‘எரித்தல்’ எங்கிருந்து வந்த…
-
- 0 replies
- 275 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு சமூகமாக இருக்கலாம் என்கிறது. வேறு பல சுவாரஸ்யமான தகவல்களையும் கருத்தாக்கங்களையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. அது 4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்கள் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன. அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ …
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
பெய்ததும் பெய்வதும் பனிதான் : சாம்ராஜ் பனிவிழும் பனைவனம் நூலை முன்வைத்து தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க தங்கள் ஆணையை என் ரத்தத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் மேன்மை தங்கியவரே குதிரைகளின் புட்டங்களில் குதிரைகளின் முகங்கள் உரச தாண்டிக் கொண்டிருக்கிறோம் கடைசிக் குதிரை தாண்டியதும் பாலம் பறந்து நதியில் மூழ்கும். தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன் தங்களிடம் சேதி சொல்ல எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன் என்று அவன் கேட்கவில்லை. தான் செல்லப் பாலங்கள் இருக்குமா செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா என்று அவன் கேட்கவில்லை தன் குதிரை இருக்குமா என்று அவன் கேட்கவில்லை தாங்கள் இருப்பீர்களா என்று அவன் கேட்கவில்லை -சுந்தரராமசாமி ”உள…
-
- 1 reply
- 266 views
-
-
எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.
-
- 1 reply
- 238 views
-
-
முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட…
-
- 3 replies
- 237 views
- 1 follower
-
-
செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்; அது மனிதபடுகொலை, யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் Published By: Rajeeban 03 Aug, 2025 | 12:33 PM நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் - இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம் - இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் கடந்தகால அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற 'வன்மம்" கிருஷாந்தி கு…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை by அரவின் குமார் 2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து உணர்வைக் கலைக்கும் எதனையும் குற்றவுணர்வாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில், ஷோபா சக்தியின் நாவல்களைப் படிக்கிற போதுதான், இலங்கையில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய மாற்றுப்பார்வைத் தெளியத் தொடங்கியது. தனிந…
-
- 0 replies
- 227 views
-
-
"கால்களின் கேள்விகளின்" வெற்றி "கால்களின் கேள்விகள்" நூலின் முதற்பதிப்பு தீர்ந்து விட்டதென அறிந்து மகிழ்கிறேன்! நான் இவ்வருடத்திற்கான நூல்களை தயார் பண்ணும் போது உயிர்மையில் வெளிவரப் போகும் நூல்களில் மோடி குறித்த நூலே கவனம் பெறுமென நினைத்தேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த விவாதங்களில் அக்கறை செலுத்துவோர் மிகவும் குறைவு என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ந்துவிட்டது. இந்த புத்தகத்தில் உள்ள உணர்வெழுச்சியான, அந்தரங்கமான பகுதிகள், இதன் கோபம், இதிலுள்ள தனித்துவமான பார்வை வாசகர்களை கவர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். மேலும் தமிழ் பிரபா கொடுத்த அற்புதமான அறிமுகம், வாசகர்களின் பரஸ்பரம் வாய்வழி பரிந்துரை இந்நூலை பரவலாக கொண்டு போயிருக்கி…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அ…
-
- 0 replies
- 211 views
-
-
வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night” குடும்பத்தை விடுமுறைக் கால அங்காடி மேய்தலுக்காக இறக்கி விட்டு பார்ன்ஸ் அன்ட் நோபிள் புத்தகக் கடைக்குள் நுழைந்து நடந்த போது தற்செயலாகக் கண்ணில் பட்டது வி.வி. கணேசானந்தனின் "Bortherless Night” என்ற நாவல். இது இந்திய எழுத்தாளரின் படைப்பா அல்லது இலங்கை எழுத்தாளரினுடையதா என்ற குழப்பத்திற்கான விடை அட்டைப் படத்திலேயே தெரிந்தது: சைக்கிளோடும் பெண்கள் எங்கள் ஊர் வர்த்தகச் சின்னங்கள், ஒரு heritage என்று கூடச் சொல்லலாம். அதிகம் புனைவுகளை வாசிக்காத நான், ஒரு ஆர்வத்தில் வாங்கி வந்து ஆமை வேகத்தில் வாசித்து முடித்தேன். இதைப் பற்றி எழுதுவதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்த போது விவிஜி யின் இன்னொரு சிறுகதை யாழில் இணைக்கப் பட்டிருந்தது நினைவி…
-
-
- 1 reply
- 190 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடுத்தபடியாக கல்கி எழுதிய நாவல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சிவகாமியின் சபதம் நாவல்தான். அந்த நாவலின் கதையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாமா? 1940களில் கல்கி இதழில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்த இந்த நாவல், பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது. இந்த நாவலின் முக்கியமான பாத்திரங்கள்: பரஞ்சோதி, ஆடலரசி சிவகாமி, அவளுடைய தந்தையும் பல்லவ நாட்டின் தலைமைச் சிற்பியுமான ஆயனர்,…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம் 18 Dec 2025, 9:48 AM பேரா. நா. மணி “முப்பது பேரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய மோட்டார் படகு 63 பேரை ஏற்றிக் கொண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடி புறப்பட்டது.” என்ற நாவலின் முதல் வரியே நெஞ்சில் படபடப்பை உருவாக்கி விடுகிறது. அடுத்து, “மண்டபத்தில் வாழும் மக்கள் உயிர் இருந்தும் உயிரற்றவர்களாக இருந்தனர்.” “இலங்கையிலோ ஒவ்வொரு வீதியிலும் உயிரின் பயம்.” “எந்த வீதியில் எந்த முகமூடி அணிந்தவன் நிற்கிறானோ? அவன் தலை அசைவைப் பொறுத்து நம் தலை தப்புவது இருக்கிறது.” என அடுத்து வரும் வரிகள் நம்மை நாவலுக்குள் சுருட்டி இழுத்துக் கொள்கின்றன. கதை வாசகனை தரதரவென இழுத்துச் செல்கிறது. நாவலைப் படித்து முடித்த பிறகும் வாசகன் …
-
- 0 replies
- 172 views
-
-
நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ——————————— நியூசிலாந்து, ஓக்லாண்ட்(Auckland) மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை…
-
- 0 replies
- 169 views
-