உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வெள்ளம் ; 3 மாநிலங்களை சேர்ந்த மக்களை வெளியேறுமாறு உத்தரவு By T. SARANYA 14 OCT, 2022 | 01:07 PM அவுஸ்திரேலியாவில் பெய்யும் கன மழையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று மாநிலங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மேனியா ஆகிய மாநிலங்களே இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மழைவீழ்ச்சியில் 4 மடங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதனால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை மற்றொருவர் காணா…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள் வட கொரிய ஆளுங் கட்சியின் 4 நாள் கூட்டம் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் தலைநகரிலுள்ள கிம் இல் – சங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடினர். அந்நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடியிருந்த கூட்டத்தின் முன்பாகத் தோன்றி கையை அசைக்கவும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன்போது 'கொரிய தொழிலாளர் கட்சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க' என பொருள் படும் வாசகத்தைக் கொண்ட இராட்சத கொடி காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் அந்நாட்டில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின் மு…
-
- 0 replies
- 225 views
-
-
11 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த "இலக்கு வைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222297
-
- 3 replies
- 225 views
- 1 follower
-
-
புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்! திட்டமிடப்பட்ட புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளை அனுபவித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வியாழக்கிழமை (27) சிறிது நேரம் கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், வியாழக்கிழமை மதியம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவரது திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனக்கு வெளிப்படுத்தப்படாத ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், 76 வயதான சார்லஸ், சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இர…
-
- 0 replies
- 225 views
-
-
சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ. பட மூலாதாரம், REUTERS சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார். “கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது …
-
- 0 replies
- 225 views
-
-
உக்ரைனிலிருந்து தப்பி வரும் அகதிகளை... பிரித்தானியாவுக்குள் வர, அனுமதிக்க புதிய திட்டம்? உக்ரைனில் மோதலில் இருந்து தப்பி வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்க புதிய திட்டத்தை அமைக்க விரும்புவதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். தி சன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில், ‘நான் இப்போது ஒரு மனிதாபிமான பாதையை உருவாக்குவதற்கான சட்ட விருப்பங்களை ஆராய்ந்து வருகிறேன். இதன் பொருள், உக்ரைனில் உள்ள மோதலில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுடன் தொடர்பு இல்லாத எவருக்கும் இந்த நாட்டிற்கு வர உரிமை உண்டு’ என கூறினார். பிரித்தானியா ஏற்கனவே நாட்டில் குடும்பம் அல்லது விருப்பமுள்ள ஆதரவாளர்களுக்கு விசா திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால…
-
- 0 replies
- 225 views
-
-
உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய தலைவர்கள் 4 அம்ச திட்டம்! பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) உக்ரேன் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைக்க ஒப்புக்கொண்டதாகவும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இது ரஷ்யாவைத் தடுப்பதற்கு அவசியமானது என்று கெய்வ் கூறும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வொஷிங்டன் வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும். லண்டனில் நடந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதிக்கு வலுவான ஆதரவை வழங்கினர் மற்றும் அவரது தேசத்திற்கு மேலும் உதவுவதாக உறுதியளித்த…
-
- 0 replies
- 225 views
-
-
ஈஸ்டர் தீவில் 'நடக்கும்' சிலைகள் - ஆய்வாளர்களை குழம்ப வைக்கும் கேள்விகள்! சாரா பிரவுன் ㅤ 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARKO STAVRIC PHOTOGRAPHY/GETTY IMAGES நான் 15 மோவாய்கள் (மனித உருவங்கள் கொண்ட ஒற்றை கல் சிலைகள்) காண திரும்பியபோது அந்த கடலோர காற்று என் முகத்தை வருடியது. இரண்டு அடுக்குமாடி கட்டடம் அளவுக்கு உயரமும், பசிபிக் பெருங்கடலை அதன் பின்புறம் இருக்க, அந்த சிலைகளின் கண்கள், ஒரு காலத்தில் வெள்ளை பவளம் மற்றும் சிவப்பு எரிமலைக்கல் கொண்டு, ஈஸ்டர் தீவு வற்றாமல் இருக்க பார்த்துக் கொண்டன அவற்றின் முகங்கள், சீரான புருவங்கள், நீளமான முக்குகள் ஆகியவை மனிதர்களையும், த…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி! பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இ…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
அம்பலமாகிய காதல் விவகாரம்: சபாநாயகர், பெண் எம்.பி. இராஜினாமா தமது முறையற்ற காதல் விவகாரம் அம்பலமானதால் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகரும் பெண் எம்.பி ஒருவரும் பதவியை இராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் என்ற எம்.பியுமே இவ்வாறு தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் லீ சியென் லூங் “மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது…
-
- 0 replies
- 225 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சர்வதேச விமானம் நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரொக்கெட் உந்து கணைகள் மற்றும் தன்னியக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடொன்றை ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனைத்து ஆயுததாரிகளும் வேறு நகரங்களை நோக்கி துரத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் குறிப்பிடுகின்றன. எனினும் இந்தத் தாக்குதலில் விமான நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கான் உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுhttp://www.pathivu.com/news/32499/57//d,article_full.aspx
-
- 0 replies
- 225 views
-
-
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் ப…
-
- 0 replies
- 225 views
-
-
ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்! ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே மிஷுஷ்டின் இதனை தெரிவித்தார். அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன எனவும் இதற்கான சின்னமாகவே புதிய பாலம் திகழும்,” எனவும் மிஷுஷ்டின் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜய…
-
- 0 replies
- 225 views
-
-
இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.
-
- 0 replies
- 225 views
-
-
ரஷ்யாவுடனான மோதலில்... இதுவரையில் 1,300 படையினர், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எ…
-
- 0 replies
- 225 views
-
-
அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அனைத்து-விமான-சேவைகளும்/
-
- 0 replies
- 225 views
-
-
ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்! மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது. மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா காலக்கெடு விதித்தது. உக்ரைனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், உக்ரைனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர். இதுகுறிறத்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் கூறுகையில், ‘தொடர் சண்டையால் பொதுமக்க…
-
- 0 replies
- 225 views
-
-
உலகப் பார்வை: சிரியா அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் 77 பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர்: போராளிகள் மீதான அரசு தாக்குதலில்77 பொதுமக்கள் பலி படத்தின் காப்புரிமைMOHAMMED EYAD/AFP/GETTY IMAGES Image captionசிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு கிழக்கே உள…
-
- 0 replies
- 225 views
-
-
அல்ஜீரியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் நைஜீரிய பாலைவனத்தில் கண்டுபிடிப்பு அல்ஜீரியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 சிறார்கள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின்னர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்திருக்கல…
-
- 1 reply
- 225 views
-
-
போர் நிறுத்தம்: துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதங்கள் மட்டுமன்றி உலகளவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. போர் நிறுத்தம் தொடர்பாக முன்னதாக பெலராஸில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நட…
-
- 1 reply
- 225 views
-
-
பட மூலாதாரம்,NASA 6 மார்ச் 2025, 12:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வ…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலி தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர். அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெ…
-
- 1 reply
- 224 views
-
-
04 FEB, 2025 | 11:10 AM அமெரிக்க இறக்குமதி பொருட்களிற்கு புதிய வரிகளை விதிப்பதாக சீனா சற்று முன்னர் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205763
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீவிபத்து January 2, 2022 தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறி, வானத்தில் தோன்றியுள்ள கரும் புகை வீடியோ காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கூரை மற்றும் தேசிய சட்டமன்ற கட்டிடம் ஆகியன தீப்பிடித்துள்ளது எனவும் தீ கட்டுக்குள் வரவில்லை எனவும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நகரின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா். பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு நாடாளுமன்…
-
- 0 replies
- 224 views
-
-
12 JUL, 2024 | 12:10 PM ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிஸ்பேர்னில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியினருக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். கு…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-