Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார். உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள…

  2. இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில் தங்கியுள்ள பதினைந்து லட்சம் ஆப்கானிய அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * போக்கோ ஹராமிடமிருந்து தப்பிய இவர்கள், பட்டனியின் பிடியில் சிக்கியுள்ளனர்! ஒரு லட்சம் நைஜீரியர்களுக்கு உடனடியாக உணவு தேவை என ஐ நா கூறுகிறது. * புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறது?ஆராய்கிறது பிபிசி.

  3. டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறை…

  4. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி March 8, 2025 12:40 pm உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://oruvan.com/russian-strike-kills-11-in-town-near-donetsk-ukraine-says/

  5. ஓமான் கடற்பரப்பில் இஸ்ரேலிய பிரஜைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமான தாக்குதல் By RAJEEBAN 16 NOV, 2022 | 03:54 PM இஸ்ரேலின் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஓமான் கடற்பரப்பில் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் இஸ்ரேல் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓமான் கடலோரத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நாங்கள் இதனை விசாரைணை செய்து வருகின்றோம் என குறிப்பிட்ட பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. லைபீரிய …

  6. போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்தார் இன்னிலையில் போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடியஜானாதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்…

  7. மரியுபோல் நகரில்... பொதுமக்கள் தங்கியிருந்த, திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,000 முதல் 1,200 பேர் வரை இந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்ததாக, துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,400பேர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது. நகருக்குள் சுமார் 300,…

  8. புதின், ஜார் மன்னர் மகா பீட்டர்: யுக்ரேன் பற்றிய உரையில் ரஷ்ய அதிபர் தம்மை ஜார் மன்னருடன் ஒப்பிட்டுக் கொள்வது ஏன்? சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கிழக்கு ஐரோப்பிய செய்தியாளர் 11 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜார் மன்னர் மகா பீட்டர் தனது முன்மாதிரி என்று புதின் கூறி வருகிறார். ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்…

  9. ரஷ்ய தாக்குதலை தடுத்து நிறுத்த ஐரோப்பா தாமதித்துவிட்டது : உக்ரேன் ஜனாதிபதி உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பேசிய உக்ரேன் ஜனாதிபதி , ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் தனது நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை அவர் கோடிட்டுக் காட்டினார், மேலும் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பா ஒன்றுபட்டதற்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதில் அவர்கள் மிகவும் தாமதமாக செயல்பட்டதாக ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்தார். நீங்கள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளீர்கள். அதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். இது சக்திவாய்ந்த நடவடிக்கை. ஆனால் சிறி…

  10. அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்கையில் சிக்கியது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். படகில் 232 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணயில் அந்த போதைப் பொருள் இந்தியா வழியாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தான் சுமார் 200 டன் ஹெராயினை கடத்தி உலக நாடுகளில் விற்பனை செய்க…

    • 0 replies
    • 223 views
  11. புதுடெல்லி, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் ம…

  12. புதுடில்லி: "பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., மீண்டும் விசாரிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கடந்தாண்டு ஜூலையில், மாயாவதிக்கு எதிரான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உ.பி.,யைச் சேர்ந்த, கமலேஷ் மேத்தா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள், பி.சதாசிவம், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தாஜ் வணிக வளாகம் தொடர்பான வழக்கை மனதில் வைத்த…

  13. அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய இந்த அமைதிப்படையை மேம்படுத்த ஐநா திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆய்வு செய்து 119 பரிந்துரைகளை அளித்துள்ளனர். முக்கியமாக ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்வதால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என சி…

  14. அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்…

  15. பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா : பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி - வீடியோ ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. சீனா இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.) http://www.virakesari.lk/article/8602

  16. மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1484 கோடி செலவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநா…

  17. ஆப்கானிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா வரும் வழியில் லாகூர் நகரில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார். பாகிஸ்தானின் முரட்டுப் பிடிவாதத்தால் இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்த நிலையில் எல்லைப்பகுதியில் சில்லுண்டித்தனம் செய்து, பூச்சாண்டி வேலையால் இந்தியாவை பணியவைக்கும் பாகிஸ்தானின் முயற்சி மண்ணைக் கவ்வியது. இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இனி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒட்டுமில்லை; உறவுமில்லை என்ற நிலை நீடித்தபோது சமீபத்தில் லண்டன் தலைநகர் பார்சில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டின்போது, எதிர்…

  18. சிரியாவில் மகப்பேற்று வைத்தியசாலை மீது விமான குண்டுத்தாக்குதல் 2016-07-29 21:36:20 சிரியாவில் சேவ் த சில்ரன் அமைப்பின் உதவியுடன் நடத்தப்படும் மகப்பேற்று வைத்தியசாலையொன்றின் மீது விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என அவ்வமைப்பு கூறியுள்ளது. நோயாளிகளின் உறவினர்களே கொல்லப்பட்டுள்ளனர் இந்த வைத்தியசாலையை நிர்வகிக்கும் சிரியா ரீலிவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்திலுள்ள இந்த வை…

  19. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…

  20. இன்றைய நிகழ்ச்சியில், * பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள். போரின் கொடூரங்கள் இனி கூடாது என்கிறார் ஜப்பானியப் பிரதமர். * பிரிட்டனிலும் தேர்தல் முறைகேடுகள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் மீதும் பெரும் குற்றச்சாட்டு. * வெளியே தெரியா பொக்கிஷங்கள் இவை. சீனா மக்களின் வன விலங்குகளை ஆராதிக்கும் படங்கள் பற்றிய சில தகவல்கள்.

  21. எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது. பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன வி…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - பெயருக்காக நடக்கும் பல்லாண்டுகால போராட்டம் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு பனிப்பொழிவிற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவை மாஸ்கோ சந்தித்துள்ளதால் அந்நகரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, விமானப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கான …

  23. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை கலாநிதி மாறனிடமிருந்து, அதை தொடங்கியவரும் முந்தைய உரிமையாளருமான அஜய் சிங்குக்கு கை மாறியுள்ளது. குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டை 2004ஆம் ஆண்டு அஜய் சிங் தொடங்கினார். பின்னர் இதன் பெரும்பகுதி பங்குகளை கலாநிதி மாறன் வாங்கினார். நிதிச் சிக்கலில் தவித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதற்கு தீர்வு காண கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு போதிய பலன் கிடைக்காத நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை கலாநிதி மாறனிடமிருந்து, அதை தொடங்கியவரும் முந்தைய உரிமையாளருமான அஜய் சிங்குக்கு கை மாறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு ‌அளித்த அறிக்கையில் இத்தகவலை ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு புத்துயிர் தரும் …

  24. உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் த…

  25. உக்ரேன் மோதல் : கொத்துக் குண்டுகள் பயன்படுத்தியது ரஷ்யா - சர்வதேச மன்னிப்புச் சபை உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 110 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், குறித்த மோதலில் வட கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவில் கண்மூடித்தனமான ஷெல் மற்றும் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி ரஷ்யா நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் 9N210/9N235 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் சிதறக்கூடிய வெடிமருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.