Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது. பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர். குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் …

  2. துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க அமெரிக்காவில் கோரிக்கை, வெனிசுவேலாவில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, கம்போடியாவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றம்…. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்குப் பின், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல…

  4. ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக... பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை! கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், ‘பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்ப…

  5. எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை! http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/download-9.jpg ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செ…

  6. ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுக்கலாம்: அமெரிக்க நீதித் திணைக்களம் Published By: SETHU 03 MAR, 2023 | 05:44 PM அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…

  7. உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன. உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகி…

  8. கடமைக்குத் திரும்பினார் அங்கெலா மேர்க்கெல் ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு, தனது கடமைக்காக மீளத் திரும்பியுள்ளார். ஜேர்மனியில் அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு திரும்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பந்தமான கூட்டமொன்றைத் தலைமை தாங்கிய மேர்க்கெல், அதன் பின்னதாக விடுமுறையில் காணப்பட்டார். அதுவரை, உள்விவகார அமைச்சரான தோமஸ் டி மெய்ஸியாரேயே, நாட்டின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிரான்ஸில் தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இரண்டு பாதிரியார்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஒலாண்டோ சென்றிரு…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவைத்தேடி புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தபோது, போர்ச்சுகல் மன்னர் ஜான் இந்தியாவை அடைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முன்முயற்சி எடுத்தார். இந்த நோக்கத்திற்காக மூன்று பெரிய கப்பல்களை உருவாக்க மன்னர் உத்தரவிட்டார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டார். இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் முன்பே அவர் காலமானார். ஆனால் அவரது வாரிசு இம்மானுவேலிடமும் இந்தியாவை அடைவதற்கான உற்சாகம் அதே அளவுக்கு இருந்தது. இந்தப்பணியை மேற்கொள்ள அவர் வாஸ்கோடகாமாவை கமாண்டராக தேர்ந்தெடுத்தார். வாஸ்கோ தன்னுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு தனது சகோதரர் பாவ்லோ மற்றும்…

  10. ஃபுளோரிடா தாக்குதல் தொடர்பாக முன்னாள் படை வீரர் மீது வழக்குப்பதிவு வெள்ளியன்று ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில் ஐந்து பேரை கொன்றதாக போர் வீரர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எஸ்டீபன் சாண்டியாகோ எஸ்டீபன் சாண்டியாகோ துப்பாக்கிச்சூட்டில் கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாக நிருபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து பல கேள்விகளை சந்தித்து வருகின்றனர் நவம்பரில் அலாஸ்காவில் உள்ள எஃப்பிஐ அலுவலகத்திற்கு வந்த சாண்டியாகோவிற்கு மனநல மதிப்பீடு பரிந்துரைக்கப்பட்டதாக எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மதிப்பீட்டிற்க…

  11. இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் உடல்களை துண்டாக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ராஜ் தாக்கரே கூறியதாவது, பாலியல் பலாத்காரம் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.மேலும் அகமது நகரில் ஒரு சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக பலாத்காரம் செய்தனர், இதில் மாநில அரசு செயலிலந்து கிடக்கிறது.மேலும் கடந்த காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் அரசுகளின் நடவடிக்கையை விட தற்போதைய பாஜக அரசு சிறப்பாக செயல்படவில்லை மேலும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை போல கடுமையான இஸ்லாமிய சட்டம் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும்,…

  12. உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இராணுவமே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அந்த கறுப்பு பெட்டியில் உள்ள தகவல் பரிமாற்றம் மூலம், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய…

  13. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்க…

  14. அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார். படத்தின் காப…

  15. மாலியில்... இடம்பெற்ற, பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான வீதிகளை கொண்டுள்ள மாலியில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 26 இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. https://athavannews.c…

  16. தென்னாபிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலி : 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம் தென்னாபிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணம் குவாஹுலு-நடாலா நகரில் (10) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. வீதிகள் துண்டிக்கப்பட்டன. இதற்கிடையே வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மாயமான பலரை த…

  17. இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நட…

  18. இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மேற்­கொண்ட பிர­தான தேடுதல் நட­வ­டிக்­கையின் போது, 2000 க்கு மேற்­பட்ட குடி­யேற்­ற­வா­சி­களை மீட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இந்த தேடுதல் நட­வ­டிக்­கையின் போது லிபி­யா­வி­லி­ருந்து அதி­வேக பட­கு­களில் இத்­தா­லியை நோக்கி வந்த துப்­பாக்­கி­களை ஏந்­திய குழு­வொன்றால் கரை­யோர காவல் படை­யினர் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. கடந்த வாரம் மத்­தியதரைக் கடலில் பட­குகள் மூழ்­கி­யதால் குறைந்­தது 300 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­…

  19. "சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…

  20. கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிய ஐரோப்பிய நாடுகள் …

  21. Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 01:08 PM அவுஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 மில்லியன் வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான வர்த்தகங்களையும் கொண்டுள்ள ஒப்டஸ் நிறுவனத்தின் வலையைமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் மருத்துவமனைகளில் தொலைபேசி சேவைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மக்…

  22. முடிவுக்கு வந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய மாநாடு! அதிபர் ஷி கட்டமைக்க விரும்பும் உன்னத சீனாவில் பெண்களின் பங்கென்ன? ஆராய்கிறது பிபிசி!! மியன்மாருக்கான இராணுவ உதவிகள் சிலதை நிறுத்தியது அமெரிக்கா! ரோஹிங்ஞா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடவடிக்கை!! மற்றும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சி! நைஜீரிய தேசியவிளையாட்டான கால்பந்தாட்ட அணியை புதுப்பிக்கும் பயிற்சி குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் கோப்புப் படம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. …

  24. பிரெக்சிற் குறித்து பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்களே வெளி வருகின்றன – பிரான்ஸ் அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து தெளிவற்ற கருத்துக்கள் வெளியாவதாக பிரானஸ் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் இணை அமைச்சருமான பெஞ்சமின் கிரீவொக்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியா மேலும் தெளிவான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரான்ஸ் அமைச்சர் இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் ஐரோப்பா முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளதுடன் பிரித்தானியாவே மோசமான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட…

  25. வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாகாது... ரஷ்யா பதிலடி! வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் வடகொரியா நிறுத்துவதாக இல்லை. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்திருந்தார். இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கையும், பொருளாதாரத்தடையும் தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. http://www.vikatan…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.