Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்! பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது. உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பிடெய்ர் தனது மகனுட…

  2. Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 11:19 AM உக்ரைனின் சிறுவர் மருத்துவமனை உட்பட பல பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் மேற்கொண்ட தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதை காண்பது கடும் ஏமாற்றமளித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ரஸ்ய ஜனாதிபதியை மொஸ்கோவிற்கு வெளியே உள்ள நோவோ ஓகாரியோவோ என்ற இடத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை உக்ரைன் நகரங்களை காலைவேளையில் ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதல்கள் காரணமாக 37 கொல்லப்பட்டுள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். ரஸ்யா உக்ரைனின் மீது இரண்டு வருடங்களிற்கு முன்ன…

  3. லெபனானின் சுரங்கப் பாதை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கத்தினூடாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. நேற்றிரவு இஸ்ரேலின் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீதே வான்வழித் தாக்குதலை நடத்தியது. கடந்த நாட்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே…

  4. கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…

  5. கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வர…

  6. Published By: SETHU 17 MAY, 2023 | 01:29 PM பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது. 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி. ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது. எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதித்துறை வி…

  7. மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற…

  8. ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…

  9. இராக் போர் சட்டவிரோதம்! முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவ…

  10. Published By: RAJEEBAN 11 AUG, 2025 | 12:07 PM ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181 வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். 77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் …

  11. ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது 82 வயதான அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் மருத்துவரைச் சந்தித்த பின்னர் வெள்ளிக்கிழமை (17) புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. புரோஸ்டேட் – புற்றுநோய் என்பது புரோஸ்டேட் சுரப்பியில்/ முன்னிற்குஞ்சுரப்பியில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். 2021-2025 …

  12. ஆப்கானில் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும் - தலிபான் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அதன்படி "இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள் எஞ்சியுள்ளதாக" முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பதை அந்த செய்தியில் தலிபான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு, தலிபான்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குத…

  13. உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது. போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் ‘கருங்கடல் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியது. எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஒரு புறமிரு…

  14. வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன. வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொ…

  15. பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு தனது முன்னாள் போட்டியாளர் ஒருவரின் உரையை திருடியதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லு பென் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போட்டி வேட்பாளர் பிரான்ஸ்ஸுவா ஃபியோவின் உரையை ஒத்ததாக அவரது பெருமளவு உரை இருந்துள்ளது. பிரான்ஸ்ஸுவா பியோ ஏற்கனவே முதற்சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துவிட்டார். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  16. பட மூலாதாரம்,STEPHANE DE SAKUTIN/AFP படக்குறிப்பு, மிஷேல் பார்னியை (வலது) புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி, லாரா கோஸி பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மிஷேல் பார்னியை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். "அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்," என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார். …

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும் 15 பிப்ரவரி 2025, 01:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர். பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், "இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். …

  18. ஜேர்மனியில்... கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்ப…

  19. Published By: RAJEEBAN 18 APR, 2024 | 03:14 PM 2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். …

  20. உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு! இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ர…

  21. “இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். அத்துடன், ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொ…

      • Haha
    • 2 replies
    • 208 views
  22. உலகின் சக்­தி­வாய்ந்த பெண்­ம­ணி­யாக ஏஞ்­சலா மேர்கல் மீண்டும் தெரி­வு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக ஜேர்­ம­னியின் சான்­சலர் ஏஞ்­சலா மேர்­கல் தெரி­வா­கி­யுள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11ஆவது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் முதல் இடத்திலுள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஏஞ்சலா மேர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவத…

  23. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் டஜன் கணக்கானோர் காயம்– திட்டமிட்ட செயல் என்கிறது காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்க்க தொழில்நுட்ப உதவி: சொமாலியாவின் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவி செய்யும் ட்ரோன்கள் நீண்ட வரலாறு கொண்ட ராணுவ வாழ்க்கையை நிராகரித்து, புதிய எதிர்காலத்தை தேடும் கூர்கா இனத்தின் இளைய தலைமுறை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  24. ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…

  25. “சிறையான சொகுசு விடுதி” - மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சிறையான சொகுசு விடுதி மீண்டும் திறப்பு படத்தின் காப்புரிமைAFP/GETTY கடந்த நவம்பர் மாதம் செளதியில் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட இளவரசர்கள், அமைச்சர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.