உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…
-
- 0 replies
- 200 views
-
-
“சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது” - சிரியா மருத்துவர் வேதனை தாக்குதலில் மரணமடைந்தவர்கள் சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கிளர்ச…
-
- 0 replies
- 200 views
-
-
* அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 200 views
-
-
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்…
-
- 0 replies
- 200 views
-
-
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி 12 Jan, 2026 | 03:50 PM “காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) தெரிவித்துள்ளார். “இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
டாவோஸில் ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி விமர்சித்தார்: "நீங்கள் 40 வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பினீர்கள். அது என்ன செய்தியை அனுப்புகிறது?" Olha Kovalchuk, Alona Mazurenko - 22 ஜனவரி, 17:04 டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 110917 தமிழ் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது உரையின் போது, கிரீன்லாந்து உள்ளிட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஐரோப்பாவின் அணுகுமுறையை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்தார் . ஆதாரம்: ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: நேட்டோ தனது இராணுவ வலிமையை நடைமுறையில் ஒருபோதும் பயன்படுத்தாத போதிலும், அமெரிக்காவின் கீழ் நேட்டோ பாதுகாப்பை ஐரோப்பா நம்பியிருப்பதாக ஜெலென்ஸ்கி விமர்சித்தார். " இன்று, ஐரோப்பா ஆபத்து வந்தால், நேட…
-
- 2 replies
- 200 views
-
-
ஐரோப்பா வரும் நோக்கில் உயிரை பணயம் வைத்து மத்தியத் தரைக்கடலை கடக்க முயற்சிக்கும் வங்கதேசத்தவரின் அவல நிலை குறித்த செய்தித் தொகுப்பு; உலகில் பல்லாயிரக்கணக்கானோரின் மனதை கவர்ந்த இளவரசி டயனாவின் நினைவு தினம் இன்று மற்றும் தன்ஸானிய அரசாங்கத்துக்கும் மாசாய் மக்களுக்கும் இடையிலான நிலத்தகராறு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 200 views
-
-
பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, குவாங்சோ அருகில் அமைந்திருக்கும் பன்யூ பகுதி ஷையன் கிராம் என்று அழைக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர், குவாங்சோ தெற்கு சீனாவின் 'பேர்ல்' நதிக்கரையில் அமைந்திருக்கும் துறைமுக நகரமான குவாங்சோவின் (Guangzhou) பல பகுதிகளில் தையல் இயந்திரங்களின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த தையல் இயந்திரங்களின் சத்தம், தொழிற்சாலைகளின் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக, காலை துவங்கி, நள்ளிரவு வரை கேட்கும். மக்கள் அங்கு ஆயத்த ஆடைகளான டி-சர்ட், கால்சட்டை, மேலாடை, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை தைத்து 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். …
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
மாயமான மலேஷிய விமானத்தை மீண்டும் தேட முடிவு ; களமிறங்கும் அமெரிக்க நிறுவனம் நடுவானில் மாயமான மலேஷிய விமானத்தை மீண்டும் தேடுவதற்கான பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கவுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370), மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது, நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியை மலேஷியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் நடத்தின. இந்தியப் பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு தேடியும், மாயமான அந்த விமானத்தைக் கண்…
-
- 0 replies
- 200 views
-
-
அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு வரும் ஆண்டுகளில், தனது அரியணையிலிருந்து விலகிட ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ 82 வயதாகும் ஜப்பான் பேரரசர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். அகிஹிட்டோவின் பதவி விலகல், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ ஜப்பான் பேரரசரின் அரியணையான, கிரிஸான்தமம் அரியணையிலேற வழிவகுக்கும். 1989-ஆம் ஆண்டில் தனது தந்தை ஹிரோஹிட்டோவை தொடர்ந்து, பேரரசர் அகிஹிட்டோ அரியணைக்கு வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டில், பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, இது …
-
- 0 replies
- 200 views
-
-
-
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்றனர். பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் …
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேற்றைய லண்டன் தாக்குதலில், தாக்குதலாளி பிரட்டனில் பிறந்தவர் என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தாக்குதலாளி உட்பட இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான புலன்விசாரணையில் இதுவரை எட்டுப்பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் மேலதிக விவரங்களையும் நேயர்கள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 199 views
-
-
பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார் தெரஸா மே மற்றும் ஆண்ட்ரியா லீட்சும் இன்னும் சில மணி நேரங்களில் அல்லது வரக்கூடிய நாட்களில் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர் தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார். தெரஸா மேவை எதிர்த்து களத்தில் நின்ற எரி சக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சும் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தலைவர் மிக அவசரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தேசிய நலனுக்காக இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லீட்சும் தெரிவித்துள்ளார். இச்சூழலில், பிரிட்டனின் இரண்டாவது பெண் பிர…
-
- 0 replies
- 199 views
-
-
உக்ரைனுக்கு.. 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பாதுகாப்பு உதவியை வழங்கும் அமெரிக்கா! உக்ரைனுக்கு கூடுதல் 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதுகாப்பு உதவியை, அமெரிக்கா அனுப்பும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில், நடுத்தர தூர ரொக்கெட் அமைப்புகள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் உள்ளடங்கும். நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்ட மொத்த அமெரிக்க பாதுகாப்பு உதவியை 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கொண்டு வருகின்றது. மேலும், மே மாதம் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனுக்கான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியாக 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக செலுத்தப்படுகிறது…
-
- 1 reply
- 199 views
-
-
சிரியா ரசாயனத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டால் தாமதமாகும் சர்வதேச ஆய்வுப் பணி YouTube சிரியாவின் டவுமா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் சர்வதேச குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் ஆய்வுப் பணி தாமதமாகியுள்ளது. சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து…
-
- 0 replies
- 199 views
-
-
டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி 12/29/2025 அன்று இரவு 07:02 மணிக்கு AEDT வெளியிடப்பட்டது - 12/29/2025 அன்று இரவு 08:48 மணிக்கு AEDT திருத்தப்பட்டது. ராய்ட்டர்ஸ் பகிர் பிட்காயின் (BTC/USD) -0.09% US 10Y பணம் -0.235 என்பது யூரோ / அமெரிக்க டாலர் (EUR/USD) -0.15% பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் -0.13% நியூயார்க், டிசம்பர் 29 (ராய்ட்டர்ஸ்) - ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'விடுதலை தின' கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க பத்திர சந்தையை கிளர்ச்சியில் தள்ளியதிலிருந்து, அவரது நிர்வாகம் மற்றொரு வெடிப்பைத் தடுக்க அதன் கொள்கைகளையும் செய்திகளையும் கவனமாக வடிவமைத்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது என்று சில முதல…
-
- 1 reply
- 199 views
-
-
ட்ராம்பின் முன்னாள் ஆலோசகர் தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைன் ( Michael Flynn ) தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் எப்.பி.ஐ இற்கு தாம் பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். ரஸ்ய தூதுவருடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையை பிழையாக வழிநடத்திய காரணத்திற்காக மைக்கேல் ஃப்ளைன் பணி நீக்கப்பட்டிருந்தார். ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொள்ள முன்னதாகவே அவர் பணி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெரிந்து கொண்டே தாம் போலியான, பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒ…
-
- 0 replies
- 199 views
-
-
25 NOV, 2024 | 11:07 AM லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
புட்டினை... சந்தித்து பேசுகின்றார், ஐ.நாவின் பொதுச்செயலாளர் ரஷ்யா சென்றுள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இன்று புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் மொஸ்கோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். 60 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி சமாதானம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குட்டாரஸ், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைதித் தீர்வு காண்பதற்கு ஐநா.சபை மிகுந்த முயற்சிகள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை குறை…
-
- 0 replies
- 199 views
-
-
காபூல் விமான நிலையத்தை... கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தலிபான்கள் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராக…
-
- 0 replies
- 199 views
-
-
உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர். அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். என…
-
- 0 replies
- 199 views
-
-
பிரித்தானியாவில் உடல் பருமனை அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள்! சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு. பிரித்தானியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குள் சாக்லேட், பர்கர்கள், குளிர்பானம், கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பிஸ்கட், இனிப்பு சாறுகள், சிப்ஸ்கள் மற்றும் பீஸ்ஸாக்கள் அடங்கும். முன்னதாக குறித்த விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாட்டின் படி, இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்லைன் விளம்ப…
-
- 0 replies
- 199 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில்... பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட, 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில்…
-
- 0 replies
- 199 views
-