Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கை ஜனவரி 13, 2007 டோக்கியோ: ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுளளனர். அதே போல தைவான…

  2. புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.

  3. லண்டன்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் திடீரென கருத்து தெரிவித்துள்ளார். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்தார். சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில், சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பை…

    • 3 replies
    • 1.4k views
  4. 2006ம் ஆண்டில் ரூ.35 கோடியை தாண்டியது சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் அகமதுநகர்:மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் கடந்த ஆண்டு ரூ.35 கோடியை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சீரடி என்ற இடத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டில் இந்த கோவிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சாய்பாபா கோவிலில் உண்டியல் மூலம் 35 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 9.326 கிலோ தங்கம் மற்றும் 136.131 கிலோ வெள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டில் இரண்டு கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள…

  5. சென்னை: விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க வருவாய்துறை அதிகாரிகள் கெடு கொடுத்துள்ளனர். கோயம்போடு நூறு அடி ரோட்டில் உள்ள விஜய்காந்த் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த இடங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உள்ளிட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மண்டபத்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு வழக்கப்படும் என்றும், அதை காஞ்சிபுரம் வருவாய்துறை அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 1…

  6. வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம்பெண் இதோ இன்னொரு டயானா லண்டன், ஜன.10:{மாலைசுடர்} அவர் எங்கே போனாலும் மீடியா அவரை பின்தொடர்கிறது. அவர் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது. அவருடைய 25வது பிறந்த நாள் பிரிட்டனே எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. வருங்கால இளவரசி என பிரிட்டனே அவரை கொண்டாடுகி றது. இளவரசர் வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம் பெண்ணான கேதே மிடில்டன்தான் இப்படி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனிக்கப் படும் நபராக உருவாகியிருப்பவர். இந்த இளம் பெண்ணை சூழ்ந்துள்ள பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை பார்க்கும்போது, மறைந்த இளவரசி டயானா, சார்லசை காதலிக்கத் துவங்கியபோது உண்டான பரபரப்புதான் நினைவுக்கு வருவதாக பிரிட்டனில் பேசிக…

  7. காங்கிரஸ்க்கு ‘ஷாக்’ கொடுக்கும் விஜயசாந்தி ‘‘சோனியாகாந்தி உண்மை பேசட்டும்...’’ ‘இனி நான் நடிகை அல்ல. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகப் போராளி. புதுவருடத்தில் என் புது அவதாரம் இதுதான்!’ &ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் இறந்துபோன விவசாயி களுக்காக நீதிகேட்டு கடந்த 8&ம் தேதி ஹைதராபாத் நேரு பார்க்கில் ஒருநாள் உண்ணாவிரதமிருக்கக் கிளம்பிக் கொண்டிருந்த தெலுங்குபட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், ‘தல்லி தெலுங்கானா’ என்ற அரசியல் இயக்கத் தின் தலைவியுமான விஜயசாந்தி நம்மிடம் சொல்லிய டயலாக்தான் இது. ‘‘என்ன திடீரென்று மம்தா பானர்ஜி ஸ்டைலில் கிளம்பி விட்டீர்கள்?’’ என்ற கேள்வியுடன் அவரிடம் உரையாட ஆரம்பித்தோம். குரலில் கோபம் தொனிக்கப் பேச ஆர…

  8. பறிபோகுமா பதவி? ஆபத்தில் 5 அமைச்சர்கள்! தங்களுடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று தெரியாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் ‘திக்’கடித்தபடியே இருப்பார்கள். ஆனால், ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி! கடந்த ஆட்சிக்கு சற்றும் குறையாத நிலையில்தான் இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல அமைச்சர்கள் நகம் கடித்தபடி டென்ஷனில் இருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்படி ஒரு தவிப்பில் இருப்பதாக மாவட்டம் முழுக்க செய்திகள் பரவிக் கிடக்கிறது. இதற்கிடையில் ம.தி.மு.க&வின் அவைத் தலைவராக இருந்த(?) எல்.ஜி&யும் தனி அணி அமைத்து, தி.மு.க&வில் இணைய காலம் பார்த்துக் கொண்டிருப்பதால், தி.மு.க&வின் ம…

    • 2 replies
    • 954 views
  9. சோமாலியாவின் பிரதி பிரதம மந்திரி தனது நாட்டில் உள்ள அல்கைதா உறுப்பினர்களை வெளியேற்ற அமெரிக்கப்படைகளின் உதவியை கோரியுள்ளார். சோமாலியாவின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா விமானப்படையின் தாக்குதல்கள் ஊடகங்களில் சொல்லப்படுவது போல் அதிக அளவில் நடக்கவில்லை என்று கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விசேட படைகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். அதே வேளை அமெரிக்கா சோமாலியாவில் விமானத் தாக்குதல்களை முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்கா சோமாலியாவில் களம் திறப்பதற்கான காரணம் என்ன? ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு வடமேற்கு கரைகளில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கம்? ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு கரையில் சீனா ஒரு கடற்படைத்தளத்தை நிர்மானிக்க அண்மையில் ஆரம்பித்துள்ளது. …

  10. லண்டன்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ள செய்தி: ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்க இரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது. இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது. யுரேனியம் செறிவூட்டும் த…

  11. ஜனவரி 09, 2007 சென்னை: சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்ஏதொய்பா தீவிரவாதிகள். இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி வந்த இவர…

  12. மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்! புற்றீசல் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வருவதைக் கண்டித்து செஞ்சட்டை காம்ரேட்கள் சிவப்பாய் வெடித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இன்னொரு அதிர் வெடியைத் தூக்கிப்போட்டிருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை எல்லாம் நவீனப்படுத்த, அவற்றை தனியார் களிடம் ஒப்படைக்கப் போகிறோம்’ என்பதுதான் அந்த அதிர்வேட்டு. ஏற்கெனவே இந்த அதிர்வேட்டின் திரி, மும்பை மற்றும் டெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விஷயத்தில் கொளுத்தப்பட்டும் விட்டது. மேற்படி விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த வரிசையில் அடுத்துத் தனியார் கைகளுக்குப் போகப்போவது... சென்னை விமான நி…

  13. அமெரிக்கா,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியாகள் இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு பின்பு அமெரிக்கா சென்று விட்டு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என காரணம் கூறி இப்பெண்களை ஏமாற்றி அங்கே உல்லாசமாக வாழ்கிறார்கள்.ஏனெனில் இந்திய சட்டங்கள் இந்நாடுகளில் செல்லுபடியாகது. இதனை பயன்படுத்தி ஏமாற்றுகாரர்கள் தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பஞ்சாப் , கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் அதிகஅளவில் உள்ளனர். இதனை தடுக்க இந்திய அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசாங்களுடன் ஏற்கெனவே இந்நாடுகளுடன் இந்திய செய்துகொண்டிருக்கும் சாசனத்தில்(treaty), இந்திய சட்டங்கள், இந்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர்க்கு பொருந்துமாறு(applicab…

  14. புலிகளிடம் பணம் பெற்று கிளேமோர் பொருத்திக் கொடுத்த கிராம சேவையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறும் இடத்தில் இராணுவத்தினரை குறி வைத்து கிளேமோர் குண்டுகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு கிராம சேவையாளர்களை வெலிக்கந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 4 ஆம் திகதி வெலிக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு இவர்களை இரண்டு கிளேமோர் குண்டுகளுடனும் மற்றும் அவற்றை வெடிக்க வைக்கும் ஐந்து டெட்டனேற்றர்களுடனும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர். இந்த இரண்டு கிராம சேவையாளர்களிடம் வெலிக்கந்த பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப, இவ்வாறு கிளேமோர் குண்டுகளை புலிகள் இயக்கத்தினரின் அறி…

  15. சன்னை: பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர் விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருது கா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது…

  16. சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராக விமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல் தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர். பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய் திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை…

  17. கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது! சர்வதேச ரீதியில் கிரடிட்கார்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மூவரை தாய்லாந்து புக்கெட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடை த்த தகவலையடுத்து புக்கெட் நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5,000இற்கும் அதிகமான கிரடிட் கார்ட்கள் மூலம் பல மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் வாடகைக் காரிலிருந்து 1750 கிரெடிட் கார்ட்களை கைப்பற்றியதாக புக்கெட் பொலிஸ் லெப்டினன்ட் கேர்ணல் பூன்லெட் ஒன்ங்கெலன்ட் தெரிவித்தார். அதோடு, இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரடிட் கார்ட்கள் …

  18. துபாயில் ஒரு ‘சீட்டிங்’ தமிழன் ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்பதை ‘திருடு’ என்று கில்லாடித்தனமாக மாற்றிப் போட்டு தமிழர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானிகள், துபாய்காரர்கள் என பல இனத்துக்காரர்களின் நெற்றியில் பட்டைநாமம் போட்டு ஏமாற்றியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இவரிடம் சீட்டுப் போட்டும், இவர் நடத்திய நிதி நிறுவனங்களில் பணம் கட்டியும் ஏமாந்தவர்கள் இப்போது துபாயில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன, மொழி பேதமின்றி பலரையும் சீட்டிங் செய்திருக்கும் அந்த பலே கில்லாடி யின் பெயர் குணசேகரன். சீட்டிங் கேஸில் தற்போது சர்வதேச போலீஸ் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட குணசேகரன், கடந்த இருபத்தைந்து வர…

  19. சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் பிரவேசித்த இலங்கையர் உட்பட 57பேர் கைது. எழுதியவர் துரை Sunday, 07 January 2007 சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் பிரவேசித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 57பேர் வடக்கு கிறிஸ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கிறிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பர்மா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவர்கள் சட்டவிரோதமாகப் பயணம் செய்வதற்கு உதவி புரிந்ததாக உள்ளுர் வாசிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி வழியாகவே வடக்கு கிறிஸ்நாட்டிற்குள் பிரவேசித்ததாகவும் லண்டன், சுவிஸ்லாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் கைது செய்யப…

  20. இளவரசர் வில்லியத்துக்கு திருமணம் மெட்ரோ நாளேடு இங்கிலாந்து இளவரசர் சார்ள்சின் மூத்த மகன் வில்லியம். இவரது காதலி கேத்மிடில்டன். ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒரே வீட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. லண்டன் அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளுமாறு காதலி கேத் மிடில்டனுக்கு அரச குடும்பத்தின் சார்பில் அழைப்பு வந்தது. ஆனால் இதை கேத் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வில்லியம் கேத் திருமணம் ஜூலை 19 ஆம் திகதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண திகதி தொடர்பாக கோடிக்கணக்கில் பணம் கட்டி சூதாட்டமும் தொடங்கி விட்டது. திருமண திகதி பற்றி அரண்மனை …

  21. சென்னை: சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும். ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமை அதிகாரியின் இமெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும்.…

  22. தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்! ஜனவரி 05, 2007 கன்னியாகுமரி: அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரிய வியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்த வியாதி முற்றிவிட்டது. அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக கேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் இந்த மாவட்டத்…

  23. பாக்தாத்: தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் சிறையிலிருந்து புறப்பட்ட இராக் முன்னாள் அதிபர் சாதம் உசேன், தனக்குப் பாதுகாப்பு அளித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் வில்லியம் கால்ட்வெல் நிருபர்களிடம் கூறியதாவது, சதாம் உசேன் இராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயை அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னர் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். தூக்கில் இடப்படும் சில மணி நேரத்துக்கு முன் சிறையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு …

  24. தர்மபுரி: குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டது. தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகே ரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கேட் கீப…

  25. சென்னை: துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின் மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிடிஎம்ஏ உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீராம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், சென்னை சிபி ராமசாமி சாலையில் ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிறுவனம் மூடப்பட்டதால் அது விற்கப்பட்டது. அதை நான் ரூ. 10.75 கோடிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.