உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
அமெரிக்காவில் பெரும்பனிப்பொழிவு, கடுங்குளிர் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழப்பு;45 பேர் பலி வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும்பனிமழை பெய்து வருகிறது. வீதியெங்கும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மேலும் அங்கு இடை க்கிடையே பனிப்புயலும் வீசிவருகின்றது, இம்மோசமான காலநிலைகாரணமாக அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள ஒக்லாகொமா மாநிலத்தில் ஜனாதிபதி புஷ் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடும்பனிப்பொழிவு காரணமாக இடம் பெற்ற வீதி விபத்துக்களால் கடந்த நான்கு நாட்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டி க்கப் …
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை: பாஜகஜெயலலிதாவிஜய்காந்த் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என 'துக்ளக்' சோ கூறினார். துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாஜக தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதீபா, பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினி காந்த், நடிகர் நாகேஷ், அதிமுக சார்பில் மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர். அதை முழுமையாக செய்ய முடியாமல் பார்ட் பார்ட்டாக செய்கிறார்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கருணாநிதி, இப்போது உள்ளங் கை அளவேனும் தருவேன் என்கிறார். இலவச திட்டங்களால் பிக…
-
- 1 reply
- 971 views
-
-
நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…
-
- 5 replies
- 3.8k views
-
-
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோது பர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது. துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார். இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரச…
-
- 0 replies
- 931 views
-
-
உலகின் முதல் 'டெஸ்ட் ட்யூப் பேபிக்கு' பிரசவம்! ஜனவரி 14, 2007 லண்டன்: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்கு அழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது. பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை உருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக்ö காண்டிருந்தது. இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் ராபர்ட்…
-
- 0 replies
- 872 views
-
-
தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரம் கடலுõரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி கடலுõர்:கடலுõரில் தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரத்தை கின்னஸ் சாதனையாளர் ஜெயராமன் நேற்று துவக்கினார். கடலுõர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(79). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஜெயராமன் உலக அமைதிக்காக வட சென்னையில் தொடர்ந்து 200 மணிநேரமும், கோல்டன் பீச்சில் 360 மணிநேரமும் பேசி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக அமைதி வேண்டி சிதம்பரத்திலிருந்து தரையில் உருண்டபடி (அங்கபிரதட்சணம்) சென்னை வரை 250 கி.மீ., துõரம் சென்றும், மெரினா கடற்கறையில் ஆயிரத்து 8 மணிநேரமும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் 508 மணி நேரமும் தொடர்ந்து பேசி சாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்.. எழுதியவர் துரைரத்தினம் Monday, 15 January 2007 - தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''... தொடர்ந்து படிக்க......................... http://tamilnews24.com//index.php?option=c...06&Itemid=2
-
- 0 replies
- 876 views
-
-
சோமாலியாவில் இஸ்லாமிய கடும்போக்குப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்க ஏசி 130 ரக விமானம் கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. கடந்த சில வாரங்களாக சோமாலியப்படைகளும் எதியோப்பியப் படைகளும் இணைந்து சோமாலியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்திப் பல பிரதேசங்களை மீட்டும் இருந்தன. இன்னும் அவற்றின் தாக்குதல் தொடரும் தறுவாரில் அமெரிக்க இராணுவத் தலையீடு திடீர் என்று முளைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 27 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்களும் இதில் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அல் கொய்டா தீவிரவாதிகளுக்கும் தொட…
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னை வான் வெளி இப்போது பண்பலை வரிசை வெள்ளத்தில் திழைக்கிறது. • சிட்டி 91.1 MHz • ஆஹா 91.9 MHz • பிக் 92.7 MHz • சூரியன் 93.5 MHz • ரேடியோ ஒன் 94.3 MHz • மிர்ச்சி 98.3 MHz • பெயரிடப்படாதது 98.9 MHz • கோல்டு 105 MHz • ஹலோ 106.4 MHz • ரெயின்போ 107.1 MHz
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆக்கிரமிப்புக்கெதிரான நோர்வேயின் ஆயுதம் தாங்கிய போராட்டம் யேர்மனியப்படைகளுக்கான விநியோகத்தைத் தடுக்கும்முகமாக நோர்வேஜிய கடற்பரப்பிலே கண்ணிவெடிகளை தாம் விதைத்துள்ளதாக பிரித்தானியாவும் பிரான்சும் அறிவித்த மறுநாளே ஹிட்லர் தலைமையிலான யேர்மனியப்படைகளால் 1940 ஏப்ரல் 9 அன்று நோர்வே தாக்கப்பட்டது. 2ஆம் உலகயுத்தத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இத்தாக்குதலானது அரசியல் மையங்களை மட்டுமன்றி சாதாரண நோர்வே தேசத்துப் பொதுமக்களைக்கூட வியப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் 1ஆம் உலகயுத்தத்தைப்போலவே 2ஆம் உலகயுத்தத்திலும் எந்தத் தரப்பையும் சாராது நடுநிலமை பேணுவதனூடாக யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற அவர்களின் கணிப்புகளை முற்றிலும் பொய்யாக்கும்…
-
- 2 replies
- 1k views
-
-
ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கை ஜனவரி 13, 2007 டோக்கியோ: ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுளளனர். அதே போல தைவான…
-
- 0 replies
- 782 views
-
-
புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.
-
- 5 replies
- 1.6k views
-
-
லண்டன்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் திடீரென கருத்து தெரிவித்துள்ளார். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்தார். சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில், சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பை…
-
- 3 replies
- 1.4k views
-
-
2006ம் ஆண்டில் ரூ.35 கோடியை தாண்டியது சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் அகமதுநகர்:மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் கடந்த ஆண்டு ரூ.35 கோடியை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சீரடி என்ற இடத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டில் இந்த கோவிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சாய்பாபா கோவிலில் உண்டியல் மூலம் 35 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 9.326 கிலோ தங்கம் மற்றும் 136.131 கிலோ வெள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டில் இரண்டு கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க வருவாய்துறை அதிகாரிகள் கெடு கொடுத்துள்ளனர். கோயம்போடு நூறு அடி ரோட்டில் உள்ள விஜய்காந்த் மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த இடங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உள்ளிட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மண்டபத்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு வழக்கப்படும் என்றும், அதை காஞ்சிபுரம் வருவாய்துறை அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 1…
-
- 0 replies
- 1k views
-
-
வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம்பெண் இதோ இன்னொரு டயானா லண்டன், ஜன.10:{மாலைசுடர்} அவர் எங்கே போனாலும் மீடியா அவரை பின்தொடர்கிறது. அவர் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது. அவருடைய 25வது பிறந்த நாள் பிரிட்டனே எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. வருங்கால இளவரசி என பிரிட்டனே அவரை கொண்டாடுகி றது. இளவரசர் வில்லியம்சின் இதயம் கவர்ந்த இளம் பெண்ணான கேதே மிடில்டன்தான் இப்படி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனிக்கப் படும் நபராக உருவாகியிருப்பவர். இந்த இளம் பெண்ணை சூழ்ந்துள்ள பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை பார்க்கும்போது, மறைந்த இளவரசி டயானா, சார்லசை காதலிக்கத் துவங்கியபோது உண்டான பரபரப்புதான் நினைவுக்கு வருவதாக பிரிட்டனில் பேசிக…
-
- 0 replies
- 809 views
-
-
காங்கிரஸ்க்கு ‘ஷாக்’ கொடுக்கும் விஜயசாந்தி ‘‘சோனியாகாந்தி உண்மை பேசட்டும்...’’ ‘இனி நான் நடிகை அல்ல. மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகப் போராளி. புதுவருடத்தில் என் புது அவதாரம் இதுதான்!’ &ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் இறந்துபோன விவசாயி களுக்காக நீதிகேட்டு கடந்த 8&ம் தேதி ஹைதராபாத் நேரு பார்க்கில் ஒருநாள் உண்ணாவிரதமிருக்கக் கிளம்பிக் கொண்டிருந்த தெலுங்குபட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், ‘தல்லி தெலுங்கானா’ என்ற அரசியல் இயக்கத் தின் தலைவியுமான விஜயசாந்தி நம்மிடம் சொல்லிய டயலாக்தான் இது. ‘‘என்ன திடீரென்று மம்தா பானர்ஜி ஸ்டைலில் கிளம்பி விட்டீர்கள்?’’ என்ற கேள்வியுடன் அவரிடம் உரையாட ஆரம்பித்தோம். குரலில் கோபம் தொனிக்கப் பேச ஆர…
-
- 0 replies
- 926 views
-
-
பறிபோகுமா பதவி? ஆபத்தில் 5 அமைச்சர்கள்! தங்களுடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று தெரியாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் ‘திக்’கடித்தபடியே இருப்பார்கள். ஆனால், ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி! கடந்த ஆட்சிக்கு சற்றும் குறையாத நிலையில்தான் இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல அமைச்சர்கள் நகம் கடித்தபடி டென்ஷனில் இருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்படி ஒரு தவிப்பில் இருப்பதாக மாவட்டம் முழுக்க செய்திகள் பரவிக் கிடக்கிறது. இதற்கிடையில் ம.தி.மு.க&வின் அவைத் தலைவராக இருந்த(?) எல்.ஜி&யும் தனி அணி அமைத்து, தி.மு.க&வில் இணைய காலம் பார்த்துக் கொண்டிருப்பதால், தி.மு.க&வின் ம…
-
- 2 replies
- 954 views
-
-
சோமாலியாவின் பிரதி பிரதம மந்திரி தனது நாட்டில் உள்ள அல்கைதா உறுப்பினர்களை வெளியேற்ற அமெரிக்கப்படைகளின் உதவியை கோரியுள்ளார். சோமாலியாவின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா விமானப்படையின் தாக்குதல்கள் ஊடகங்களில் சொல்லப்படுவது போல் அதிக அளவில் நடக்கவில்லை என்று கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விசேட படைகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். அதே வேளை அமெரிக்கா சோமாலியாவில் விமானத் தாக்குதல்களை முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்கா சோமாலியாவில் களம் திறப்பதற்கான காரணம் என்ன? ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு வடமேற்கு கரைகளில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கம்? ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு கரையில் சீனா ஒரு கடற்படைத்தளத்தை நிர்மானிக்க அண்மையில் ஆரம்பித்துள்ளது. …
-
- 0 replies
- 773 views
-
-
லண்டன்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ள செய்தி: ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்க இரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது. இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது. யுரேனியம் செறிவூட்டும் த…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனவரி 09, 2007 சென்னை: சென்னை மாநகரில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி பெரும் நாசத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லியில் கைதாகியுள்ள இரண்டு தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி அகமது அலி ஷேக், சமியுல்லா ஷேக் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள், லஷ்கர்ஏதொய்பா தீவிரவாதிகள். இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது தென் மாநிலங்களில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி வந்த இவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்! புற்றீசல் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வருவதைக் கண்டித்து செஞ்சட்டை காம்ரேட்கள் சிவப்பாய் வெடித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இன்னொரு அதிர் வெடியைத் தூக்கிப்போட்டிருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை எல்லாம் நவீனப்படுத்த, அவற்றை தனியார் களிடம் ஒப்படைக்கப் போகிறோம்’ என்பதுதான் அந்த அதிர்வேட்டு. ஏற்கெனவே இந்த அதிர்வேட்டின் திரி, மும்பை மற்றும் டெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விஷயத்தில் கொளுத்தப்பட்டும் விட்டது. மேற்படி விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த வரிசையில் அடுத்துத் தனியார் கைகளுக்குப் போகப்போவது... சென்னை விமான நி…
-
- 0 replies
- 837 views
-
-
அமெரிக்கா,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியாகள் இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு பின்பு அமெரிக்கா சென்று விட்டு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என காரணம் கூறி இப்பெண்களை ஏமாற்றி அங்கே உல்லாசமாக வாழ்கிறார்கள்.ஏனெனில் இந்திய சட்டங்கள் இந்நாடுகளில் செல்லுபடியாகது. இதனை பயன்படுத்தி ஏமாற்றுகாரர்கள் தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பஞ்சாப் , கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் அதிகஅளவில் உள்ளனர். இதனை தடுக்க இந்திய அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசாங்களுடன் ஏற்கெனவே இந்நாடுகளுடன் இந்திய செய்துகொண்டிருக்கும் சாசனத்தில்(treaty), இந்திய சட்டங்கள், இந்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர்க்கு பொருந்துமாறு(applicab…
-
- 0 replies
- 913 views
-
-
புலிகளிடம் பணம் பெற்று கிளேமோர் பொருத்திக் கொடுத்த கிராம சேவையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறும் இடத்தில் இராணுவத்தினரை குறி வைத்து கிளேமோர் குண்டுகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு கிராம சேவையாளர்களை வெலிக்கந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 4 ஆம் திகதி வெலிக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு இவர்களை இரண்டு கிளேமோர் குண்டுகளுடனும் மற்றும் அவற்றை வெடிக்க வைக்கும் ஐந்து டெட்டனேற்றர்களுடனும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர். இந்த இரண்டு கிராம சேவையாளர்களிடம் வெலிக்கந்த பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப, இவ்வாறு கிளேமோர் குண்டுகளை புலிகள் இயக்கத்தினரின் அறி…
-
- 2 replies
- 1.1k views
-