உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதி…
-
- 3 replies
- 166 views
- 1 follower
-
-
சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு! சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின…
-
- 0 replies
- 166 views
-
-
சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்பட…
-
- 0 replies
- 166 views
-
-
ஓய்வூதிய முறைகளை சரிசெய்யாத நாடுகளிடமிருந்து நிதியை நிறுத்தி வைப்பது குறித்து EU பரிசீலித்து வருகிறது. உறுப்பு நாடுகள் நீடித்து உழைக்க முடியாத ஓய்வூதிய முறைகளை கவனிக்காவிட்டால், ஐரோப்பாவின் வயதான மக்கள் தொகை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பிரஸ்ஸல்ஸ் அஞ்சுகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுடன் போலீசார் செவ்வாய்க்கிழமை மோதினர். | Dursun Aydemir/Getty Images அக்டோபர் 17, 2025 காலை 4:08 CET பிஜார்க் ஸ்மித்-மேயர் எழுதியது ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்…
-
- 2 replies
- 166 views
-
-
கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு பொருளாதாரச் சவால்கள் தெளிவாகியுள்ளன - இங்கிலாந்து வங்கி பொருளாதாரச் சவால்கள் என்று அது இனம் கண்டிருப்பவை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாக்கெடுப்பின் விளைவாக தெள்ளத் தெளிவாகி இருப்பதாக பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தெரிவித்திருக்கிறது. மககள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு, பொருளாதாரப் பிரச்சினைகள் தெளிவாகியுள்ளன -இங்கிலாந்து வங்கி ஐரோப்பிய ஒன்றியத்தோடும், உலகோடும் புதிய வர்த்தகத் தொடர்புகளை பிரிட்டன் நிறுவுவதற்கு நேரம் எடுக்கும். வெளிநாட்டு முதலீட்டை பராமரிப்பது கடினமாக இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது. கடன்களை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகச…
-
- 0 replies
- 166 views
-
-
பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியது தென் அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 26 MAR, 2023 | 10:15 AM தென் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய முதலாவது அவுஸ்திரேலிய மாநிலம் என்ற பெருமையை தென் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. விசேட அமர்வின்போது தொழில் கட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியது. வாக்கெடுப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளை ஒரே குரலில் தமது ஆதரவை தெரிவித்த உறுப்பினர்க…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
03 Aug, 2025 | 10:31 AM சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது. எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழ…
-
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
கனடாவில்... 16 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு! கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு முன் எச்சரிக்கை நடவடி…
-
- 0 replies
- 166 views
-
-
13 காசா உதவிப் படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேல். காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 13 படகுகளை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க் உட்பட ஆர்வலர்களை கைது செய்துள்ளது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை நோக்கி 30 படகுகள் தொடர்ந்து பயணித்து வருவதாக இஸ்ரேலிய கடற்படை அமைப்பாளர்கள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையாளர் சரிபார்க்கப்பட்ட இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஒரு காணொளியில், கடற்படையின் பயணிகளில் மிக முக்கியமானவரான ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க், வீரர்களால் சூழப்பட்ட ஒரு தளத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டியது. இது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு …
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ஈரான் அணுசக்தித் தளங்களை கேமரா மூலம் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் உடன்பாடு 12 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. கேமராக்களின் மெமரி கார்டுகளை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக ஈரான் முன்பு கூறியிருந்தது. …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
சியோல், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்ட அடுத்த நாள் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது. வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு க…
-
- 0 replies
- 165 views
-
-
இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி By RAJEEBAN 21 OCT, 2022 | 03:14 PM பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையி…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை! ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். 2021 ஜூலை சயீத் அனைத்…
-
- 0 replies
- 165 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது) 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார். மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரா…
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
"டெல்டா கொவிட்" மாறுபாடு... 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்! மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கொவிட்-19 மாறுபாடு, 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புதிதாக கொரோனா…
-
- 0 replies
- 165 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி கென்யா அதிபரிடம் வலியுறுத்தினார்.ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது பயணத்தின் நிறைவாக கென்யா நாட்டுக்கு சென்றார். தலைநகர் நைரோபியில் உள்ள அதிபர் மாளிகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் உஹிரு கென்யாட்டாவை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 தலைவர்களின் முன்னிலையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, ராணுவ மற்றும்…
-
- 0 replies
- 165 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
படையெடுப்பு தொடங்கியதில்... இருந்து, 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு. ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் ரஷ்ய அணுசக்தி தாக்குதலின் அச்சுறுத்தலைப் பற்றியும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 1,300 உக்ரேனிய துருப்புக்கள் இறந்ததாகவும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார். இருப்பினும் பொதுமக்களை உள்ளடக்காத இந்த புள்ளி…
-
- 0 replies
- 165 views
-
-
கனடிய பிரதம மந்திரி Stephen Harper பால்டிக் கடலில் நேட்டோ இராணுவ பயிற்சி நடாத்திக்கொண்டிருந்த கப்பலை நோக்கி இரண்டு ரஷ்ய பீரங்கி கப்பல்கள் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாப்பர் பயணிக்கும் HMCS Fredericton கப்பலை ரஷ்ய கப்பல்கள் கண்காணிப்பதாக பிரதம மந்திரியின் காரியாலயம் தெரிவிக்கின்றது. பீரங்கி கப்பல்கள் ஹாப்பர் பயணம் செய்யும் கப்பலிற்கு ஏழு கடல் மைல்கள் தூரத்தில் காணப்பட்டதாக கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளார். கனடிய கப்பலிற்கு அண்மையில் ரஷ்ய போர்க்கப்பல்கள் வருவது அசாதாரணமானதல்ல என தெரிவித்த கப்டன் HMCS Fredericton -ற்கு எந்தவித அச்சுறுத்தலும் காணக்கூடியதாக இல்லை எனவும் கூறியுள்ளார். ஏன் ரஷ்ய கப்பல் அவ்வளவு அண்மையில் வந்ததென்பது தெரியவில்லை எனவும் கூறப்பட்டு…
-
- 0 replies
- 165 views
-
-
18 AUG, 2025 | 03:36 PM உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன. கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்ச…
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
மிதமான சூரியப் புயல் இன்று (11) பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டுக்கு பின் பூமியில் ஏற்பட்ட மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/303535
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது. வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன. இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை. போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையின…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு! ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், மியூனிக் விமான நிலையம் மேலும் 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன. ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்படாத நிலையி…
-
- 0 replies
- 164 views
-
-
‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ - அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் இயக்கம்; பல லட்சம் பேர் பங்கேற்பு YouTube பென்சில்வேனியாவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற பேரணியில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில், ‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ என்ற முழக்கத்துடன், துப்பாக்கிச் கலாச்சாரத்திற்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் தன்னெழுச்சி மக்கள் பேரணிகள் நேற்று நடைபெற்றன. அமெரிக்காவில் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கர்களில் ஏறக்குறைய பாதி பேர் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதால…
-
- 0 replies
- 164 views
-
-
உக்ரைனுக்கு, ஆயுதம் வழங்கினால்... புதிய இலக்குகள், குறிவைக்கப்படும்: புடின் எச்சரிக்கை! உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யப் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதால் உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை கோரியுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் …
-
- 0 replies
- 164 views
-