Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு! பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரணையில் உள்ளார். எனினும், அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். போல்சனாரோவை விசாரிக்கும் பொறுப்பான நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், கடந்த மாதம் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை போல்சனாரோ பின்பற்றாததால் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, போல்சனாரோவின் சட்டக் குழு எந்தவொரு தடை உத்தரவையும் மீறவில்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்…

  2. மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உத…

  3. வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 25 Sep, 2025 | 11:27 AM வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமை…

  4. 12 AUG, 2025 | 01:21 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார். வோசிங்டனின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை மீறி டிரம்ப் இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. வோசிங்டனில் சட்டஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகரத்தை மீட்பதற்கு தனது நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் தலைநகரத்தை நாங்கள் மீளப்பெறப்போகின்றோம் குடிசைகளை இல்லாமல் ஆக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயககட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஏனைய நகரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவே…

  5. காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும், அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததையும் நேரில் பார்த்த ஒருவர், அந்த பயங்கர சம்பவத்தையும், மக்கள் கொல்லப்பட்டதை - காயமடைந்ததை பார்த்ததையும், அவ்வேளை ஏதும் செய்ய இயலாமல் தான் தவித்த அனுபவத்தையும் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். நான் பார்த்த மிக மோசமான காட்சி இது என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததும் அதிலிருந்து தப்புவதற்காக மக்கள் அதனை கிழித்து எறிந்ததையும் அலறியதையும் பார்த்ததாக யுவதியொருவர் தெரிவித்துள்ளார். தீயில் எரிந்து உயிரிழந்தவர்களை காப்பாற்ற முடியாததால் நான் கண்ணீர் விட்டு க…

  6. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற…

  7. சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்…

  8. Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 10:40 AM பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் தொகுக்கப்பட்டன. ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதி…

  9. Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:18 PM வடக்கு ஜப்பானின் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனால் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் (மூன்று அடி) வரை உயர வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படு…

  10. உக்ரைனுக்கு... நிதி உதவியை அதிகரிக்குமாறு ,அமெரிக்க கருவூல செயலாளர்... நட்பு நாடுகளிடம் கோரிக்கை உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். https://athavan…

  11. ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு! ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப…

  12. கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில்... சீனாவின், அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது. தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் விமானங்களை தாய்வானின் வான் பரப்பிற்குள் சீனா ரோந்து நடவடிக்கைக்காக அனுப்பியது. ஜ…

  13. இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து…

    • 1 reply
    • 118 views
  14. ஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தவறாக பரவிய ஒரு குறுஞ்செய்தி ஹவாய் மக்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துவிட்டது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. …

  15. அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் …

  16. ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள் ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் வெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2025, 12:00 AM அஅ 2027 ஆம் ஆண்டுக்குள், உளவுத்துறை முதல் ஏவுகணைகள் வரை, நேட்டோவின் வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் பெரும்பகுதியை ஐரோப்பா கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று பென்டகன் அதிகாரிகள் இந்த வாரம் வாஷிங்டனில் உள்ள தூதர்களிடம் தெரிவித்தனர் - சில ஐரோப்பிய அதிகாரிகளை நம்பத்தகாததாகக் கருதும் ஒரு இறுக்கமான காலக்கெடு. இந்த விவாதத்தில் நன்கு அறிந்த ஐந்து ஆதாரங்களால், ஒரு அமெரிக்க அதிகாரி உட்பட, விவரிக்கப்பட்ட செய்தி, வாஷிங்டனில் நேட்டோ கொள்கையை மேற்பார்வையிடும் பென்டகன் ஊழியர்கள் மற்றும் பல ஐரோப்பிய பிரதி…

    • 0 replies
    • 118 views
  17. நீண்ட போருக்கு... ரஷ்ய ஜனாதிபதி தயாராகி வருகின்றார், என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை உக்ரைனில் ஒரு நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கிழக்கில் வெற்றி பெற்றாலும் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடுமையான மோதல் நீடித்து வரும் அதேவேளை ரஷ்யாவும் தனது பகுதியை கைப்பற்ற முயற்சித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அதன் தலைநகரான கீயூவைக் கைப்பற்றும் முயற்சிகளை எதிர்த்ததை அடுத்து, டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பணவீக்கம், உணவுப் பற்றாக்கு…

  18. பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் - சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து 29 JUN, 2025 | 10:48 AM பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர் இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து தெரிவித்தமை குறித்து ஆராய்ந்துவருவதாக சமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிசியில் நேரடியாக ஒலிபரப்பான இசைநிகழ்ச்சியில் பொப்வைலான் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என தெரிவித்தமை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ராப் இசைகலைஞர் பொப்வைலான் சுதந்திரம் சுதந்திர பாலஸ்தீனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோசமிட்டுள்ளார். சில கருத்துக்கள் "ஆழ்ந்த…

  19. உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு! உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார். ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள…

  20. அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள் --- ------ ------- *ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்? *ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். *அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை. -------- ------------- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன. சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் …

  21. உக்ரைன்... மற்றும் நட்பு நாடுகளுக்கு, 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு... அமெரிக்கா ஒப்புதல்! உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 675 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளது ஜேர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் பலநாட்டு சக அமைச்சர்களுடனான சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த உதவியில் ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், ஹம்வீ வாகனங்கள், கவச ஆம்புலன்ஸ்கள் மற்றும் யுத்த தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா ஏற்…

  22. Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 12:59 PM மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது. வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்…

  23. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் …

  24. மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி! 14 Sep, 2025 | 10:37 AM மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த…

  25. கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்! எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.